இன்ஸ்டாகிராம் காதல்! சிறுமியை திருமணம் செய்த கல்லூரி மாணவன் கைது!

0
56

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, டிப்ளமோ நர்சிங் படித்து விட்டு சென்னையில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சென்னை அரும்பாகத்தை சார்ந்த தனியார் கல்லூரியைச் சேர்ந்த 20 வயது மாணவனுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பழக்கம் காதலாக மாறிய நிலையில், இருவரும் கரூர் வந்து வெண்ணைமலை முருகன் கோவிலில் கடந்த 28ம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் வெங்கமேட்டில் வாடகைக்கு வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். அப்போது, தனியார் பெட்ரோல் பங்க்கில் அந்தச் சிறுமி வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

சிறுமியை அடையாளம் கண்ட உறவினர்கள் சிலர் சிறுமியின் தாயிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தனது மகளை கடத்தி திருமணம் செய்து பாலியல் வன்புனர்வு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வெங்கமேடு காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். இதனையடுத்து வெங்கமேடு காவல் நிலைய போலீசார் சிறுமியை திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry