80 வருட பயணம், காலத்துக்கேற்ற மாற்றம்! தற்போது முற்றிலும் டிஜிட்டலில் “கலக்குது கல்கி குழுமம்”!

0
124

கல்கி…! தமிழ் அறிந்தோர் அனைவருக்கும் நன்கு பரிச்சயம் ஆனதொருப் பெயர். ’கல்கி’ என்றவுடன் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற அமரர் கல்கி எழுதிய புதினங்களோடு அவர் வித்திட்ட கல்கி குழுமமும் கல்கி வார இதழும் அவசியம் நம் நினைவிற்கு வரும்.

வார இதழ் உலகில் 80 ஆண்டு காலப் பயணம் என்பது அசாத்திய சாதனை. அதை சத்தமில்லாமல் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது கல்கி குழுமம். வாசகர்களின் நாடித்துடிப்பை அறிந்து அதற்கேற்ப பல்சுவை செய்திகளை அளிப்பது கல்கி குழும இதழ்களுக்கே உரிய பாணி.

கல்கி இதழுக்கான பொது வாசகர்களைத் தாண்டி, பெண்களுக்கு – ’மங்கையர் மலர்’, குழந்தைகளுக்கு – ’கோகுலம்’ (தமிழிலும் ஆங்கிலத்திலும்), ஆன்மிக விரும்பிகளுக்கு – ’தீபம்’ என தனித்தனி பிரத்யேக இதழ்களை அறிமுகப்படுத்திய பெருமையும் கல்கி குழுமத்திற்கு உண்டு. பாரம்பரிய வாசகர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் ஈர்த்து கட்டிப்போடும் வசீகரம் கல்கி குழும இதழ்களுக்கு உண்டு.

அச்சு வடிவில் சாதனைகளைப் படைத்து கொண்டிருந்த கல்கி குழுமம், தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கேற்ப தன்னை update செய்து கொள்ளவும் தவறவில்லை. பத்திரிகை உலகில் என்றும் தன்னை முன்னோடியாக நிலைநிறுத்திக் கொள்ளும் கல்கி குழுமம், தற்போது முற்றிலும் டிஜிட்டல் வடிவாகி, இம்முயற்சியிலும் முன்னோடியாகவே திகழ்கிறது. நாளைய டிஜிட்டல் உலகத்தின் ஆளுமையை கருத்தில் கொண்டு இந்த தைரியமான முடிவை இன்றே எடுத்துள்ளது கல்கி குழுமம்.

kalkionline.com இணையதளத்தில், தற்போது கல்கி குழுமத்தின் மூன்று இதழ்களான – கல்கி (வாரஇதழ்), மங்கையர்மலர் (வாரஇதழ்) மற்றும் தீபம் (மாதஇதழ்) அனைத்தும் டிஜிட்டல் வடிவில் வெளியாகின்றன. மேலும், பரபரப்பான தகவல்களுக்கு – பரபர Trending, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள – சுடச்சுட Justin, பிரபலங்களின் பங்கேற்பிற்கும் சுவாரஸ்யமான கட்டுரைகளுக்கும் – பளபள glitters மற்றும்மினுமினு Sparkles, குட்டி குட்டி துணுக்குகளுக்கு – சுறுசுறு 5 shots, ஒலி வடிவத்தகவல்களுக்கு – Podcast, மினி கதைகளை கேட்டு மகிழ – audio கதைகள் என எண்ணற்ற பரிமாணங்களோடு ஜொலிக்கிறது kalkionline.com. இதன் வடிவமைப்பு வாசகர்கள் பயன்படுத்த எளிதாக அமைக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், காலத்தால் அழியாத காவியங்களின் தொகுப்புகளாக மின்நூல் பகுதி, 80 ஆண்டு கால கல்கி குழும இதழ்களைக் கொண்ட களஞ்சியப் பகுதி என தன்னை இணையதளத்தில் அலங்கரித்துக் கொண்டு,kalkionlineyoutube சேனலிலும் கலைநேரம் (பிரபலங்களுடன்நேர்காணல்), கதைநேரம் (பரிசு கதைகளின் பதிவுகள்), கேளுங்க கேளுங்க (தினசரி Trending செய்திகள்), அட்ரா சக்க! (பயனுள்ள தகவல் பரிமாற்றங்கள்) என பல்சுவை விருந்தளித்து தனது தனித்தன்மையை நிரூபித்து வருகிறது கல்கி குழுமம்

எண்ணற்ற எழுத்தாளர்களையும் படைப்பாளர்களையும் உருவாக்கிய கல்கிகுழுமம், காலத்திற்கு ஏற்றவாறு தனது இணைய வாசகர்களையும் படைப்பாளர்களாக்கும் முயற்சியாக kalkionline.com இணையதளத்தில் ‘மென்பேனா’ என்ற புதிய பகுதியை அறிமுகப்பத்தியுள்ளது. படைப்பாளர்களுக்காகவும் வாசகர்களுக்காகவும் இப்படிப் பல அம்சங்களுடன் கல்கி ஆன்லைன் தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.

Visit : www.kalkionline.com <http://www.kalkionline.com>

Subscribe : <https://www.youtube.com/c/kalkionline2/>

Follow : <https://www.facebook.com/KalkiOnline>

Like : <https://www.instagram.com/kalkionlineinsta/>

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry