பட்டியலின அதிகாரியை சாதிப் பெயரைச் சொல்லி திட்டிய அமைச்சர்! இதுதான் திராவிட மாடலா?, சமூக நீதியா? என கொந்தளிப்பு!

0
492

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சாதிப் பெயரை கூறி திட்டியதோடு மிரட்டல் விடுத்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

முதுகுளத்தூரில் நடைபெற்ற கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டம் தொடர்பான கருத்தரங்கை தொடங்கி வைத்த போக்குவரத்துதுறை அமைச்சர்அமைச்சர் ராஜகண்ணப்பன், 58 விவசாயிகளுக்கு ரு.2 கோடி மதிப்பிலான விவசாய இடுபொருட்களை வாழங்கினார். இந்த விழாவுக்கு அமைச்சரை வரவேற்க சென்ற தன்னை சாதி பெயரை கூறி அமைச்சர் ஒருமையில் திட்டியதால் மனவேதனை அடைந்துள்ளதாக முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன்

இந்தநிலையில், திங்கள் கிழமை காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்கச்சென்ற முதுகுளத்தூர் BDO ராஜேந்திரன் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது, “போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தன்னை நேரில் பார்க்க வேண்டும் என்று கூறியதாக வந்த தகவலின் பேரில் சிவகங்கையில் உள்ள அவரது வீட்டிற்கு நானும், அன்பு கண்ணன் அவர்களும் சென்றோம். வீட்டிற்கு உள்ளே நுழைந்தவுடன் என்னை ஒருமையில் பேசியதோடு “ நீ எஸ்.சி. பிடிஓ தானே?” என்று முகம் சுழிக்க வைக்கும் வகையில் கேள்வி எழுப்பினார். வேண்டுமென்றே தன்னை அதிமுக ஆதரவாளர் போல் சித்தரித்து பேசிய அவர், மீண்டும் மீண்டும் 6 முறை எஸ்.சி பிடிஓ என்ற கூறினார். மேலும், உன்னை உடனடியாக வேறு இடத்திற்கு தூக்கி அடிக்கிறேன் என்றும் மிரட்டினார்.

நாங்கள் சொல்வதை கேட்கமாட்ட, உன்னை இந்த சீட்டிலே வைக்க மாட்டேன், பஞ்சாயத்து பி.டி.ஓவாக இருக்க உனக்கு தகுதியில்லை, உன்னை மாவட்டம் விட்டு மாவட்டம் அல்லது வடமாவட்டங்களுக்கு இமிடியட்டா மாத்திருவேன். நீ யார் பேச்சையும் கேட்பதில்லை என புகார் வருகிறது, AD கிட்ட சொல்லி உடனே தூக்கி அடிக்கிறேன் என கடுமையாக பேசினார். மேலும் அதிகாரிகளிடம், `இவனை மாத்துங்க, அதற்கான ரிப்போர்ட்டை கொண்டு வாருங்கள்’ என கூறினார்.

இதனால், நேற்று இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்தேன். நடந்ததை யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்தேன். அமைச்சர் வீட்டில் நடந்தவை அனைத்தையும் நான் உடன் எடுத்துச்சென்ற இந்த டைரியில் எழுதி வைத்துள்ளேன் என தழுதழுத்தார். மேலும், “சம்பவம் குறித்து மத்திய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளிக்க முகவரி கேட்டுப்பெற்றதோடு அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியதாக கூறிய ராஜேந்திரன், அவர்கள் பேக்ஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலம் ஆவணங்களை அனுப்புமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

திராவிட மாடல் ஆட்சி, சமூக நீதி எனப் பேசும் திமுக தலைமையிலான ஆட்சியின் அமைச்சரவையில் முக்கிய இலாகாவை வகிக்கும் அமைச்சர், பட்டியலின அமைச்சரை சாதிப் பெயரை சொல்லி திட்டி மிரட்டியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், முதுகுளத்தூர் BDO ராஜேந்திரன் கூறியதில் உண்மை இல்லை எனவும், அமைச்சர் வீட்டிற்கு அழைத்து மக்கள் பணிகளை நேர்மையாக செய்ய அறிவுறுத்தியதாகவும் அமைச்சர் ராஜ கண்ணப்பனின் உதவியாளர் கண்ணனிடம் விளக்கம் அளித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry