எழுவர் விடுதலை! அம்பலமாகும் திமுக கபட நாடகம்! 2014-ல் விடுதலைக்கு முட்டுக்கட்டை போட்ட கருணாநிதி!

0
88

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிடுமாறு ஆளுநருக்கு திமுக தலைவர் மு..ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், அவர்களது விடுதலையை தடுத்ததே திமுகதானே, தேர்தலுக்காக ஸ்டாலின் கபட நாடகம் ஆடுவது தெரியாதா? என தமிழ் உணர்வாளர்கள் கொந்தளிக்கின்றனர்.

2014-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் ஏழு பேரையும் விடுவிக்க முடிவுசெய்து, மத்திய அரசிடம் கருத்துக் கேட்டார். திமுக அங்கம் வகித்த அப்போததைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, அதாவது மன்மோகன் சிங் அரசு, உடனடியாக உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்கியது. 2016-ம் ஆண்டில் ஐந்து பேர்கொண்ட அமர்வு விசாரணை செய்து, 7 பேரை விடுவிக்க மத்திய அரசின் ஒப்புதல் வாங்க வேண்டும்என தீர்ப்பளித்தது. ஆனால், மத்திய பாஜக அரசு ஒப்புதல் தர மறுத்தது.

அதேவேளையில், மாநில அரசுக்கு அதிகாரம் இல்லாமல் இல்லை, அரசமைப்புச் சட்டத்தின் இறையாண்மை அதிகாரம் 161-ன் கீழ் விடுதலை செய்தால் மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கவேண்டிய அவசியமில்லை என உச்ச நீதிமன்றம் வழிகாட்டியது. அதன்படி, 2018-ம் ஆண்டில் அரசமைப்புச் சட்டத்தின் இறையாண்மை அதிகாரத்தின் கீழ் விடுதலை செய்ய முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றி எடப்பாடி பழனிசாமி அரசு ஆளுநருக்கு அனுப்பியது. அதில்தான் ஆளுநர் இன்னும் முடிவெடுக்காமல் இருக்கிறார்.

இப்போது, 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆளுநரின் ஒப்புதலை எதிர்பார்க்காமல் அரசாணை வெளியிட்டது போன்று, ஏழு பேரையும் விடுவிக்க எடப்பாடி பழனிசாமி அரசு முடிவெடுத்துள்ளதாக உறுதியாக நம்பப்படுகிறது. அப்படி நடந்தால், அதிமுகவுக்கு சாதமாகிவிடும் என்பதால், ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதுகிறார். அதில், “ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவதை தாங்கள் அறிவீர்கள். ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனையைக் குறைத்து உடனடியாக அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்என குறிப்பிட்டுள்ளார்.

திமுக கபட நாடகம்

இந்த விஷயத்தில் வரலாற்றை சற்றே பின்னோக்கி பார்க்க வேண்டும். ஏப்ரல் 19, 2000-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவை, நளினியின் மரண தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாக மாற்றக்கோரி பரிந்துரைக்க முடிவு செய்கிறது. மற்ற 6 பேரின் தண்டனையை பற்றி எந்த பரிந்துரையும் செய்யவில்லை. 2010 மார்ச் 30-ல் நளினியின் விடுதலைக்காக அவர் அனுப்பிய கருணை மனுவை, கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு நிராகரித்தது.

2014, ஏப்ரல் 20-ல் அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம், எழுவர் விடுதலையில், 25-ந் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என கூறினார். அது அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என அவர் சூசகமாக வெளிப்படுத்தியிருந்தார்.

ஆதாரம்சாந்தன், முருகன், பேரறிவாளன் விடுதலையை எதிர்த்த மனு மீது ஒரு வாரத்தில் தீர்ப்பு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்

அது, தேர்தல் நேரம் என்பதால், பொங்கி எழுந்தார் கருணாநிதி. “தலைமை நீதிபதி பேச்சு அரசியல் விளைவுகளை ஏற்படுத்தலாம். இந்த தீர்ப்பு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு வரும் என்று, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒரு பொது விழாவிலே அறிவித்திருப்பது எத்தகைய சாதக, பாதகங்களை ஏற்படுத்தக் கூடும் என்பதையும், அது நீதிமன்ற மரபுகளுக்கு உகந்ததுதானா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்என முட்டுக்கட்டை போட்டார்.

ஆதாரம் – தலைமை நீதிபதி பேச்சு அரசியல் விளைவுகளை ஏற்படுத்தலாம்: திமுக தலைவர் கருணாநிதி கருத்து (https://www.hindutamil.in/news/election-2014/others/3196–1.html)

தமிழகத்தின் முக்கிய கட்சியான திமுக தலைவர் கருணாநிதியே, எழுவர் விடுதலைக்கு எதிராக நிற்க, தமிழகத்தைச் சேர்ந்தவரான உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் ஏழு கேள்விகளை எழுப்பி அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றினார். சதாசிவம் கருத்து தெரிவித்தபோது கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்திருந்தால் ஏழு பேரும் விடுதலை ஆகியிருக்கக்கூடும்.

10 ஆண்டுகளுக்கு மேல் காங்கிரசுடன் கூட்டணியிலிருந்த தி.மு.. அவர்களை விடுவிக்க என்ன செய்தது? தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் எழுவர் விடுதலையில் அக்கறை இருப்பது போல ஸ்டாலின் கபட நாடகம் ஆடுகிறார் என பெரும்பாலானோர் குற்றம்சாட்டுகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry