2.40 Mins Read : மக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்பவர் கருப்பசாமி. வால்மீகி தர்ப்பையைக் கிள்ளிப்போட்டு அதற்கு உயிர்கொடுக்க, அதுவே கருப்பண்ண சாமியானது என்பது ராமாயணத் தகவல். அதேநேரம், ஸ்ரீவீரபத்திரருக்கும் – சண்டிக்கும் பிறந்த குழந்தையே கருப்பசாமி என்றும் சொல்லுகிறார்கள். அருள்மிகு கருப்பசாமி காவல்தெய்வமாக போற்றப்படுகிறார். இவரே கருப்பண்ணசாமியாகவும் அறியப்படுகிறார்.
நின்றகோலம், அமர்ந்த கோலம், குதிரையின் மீதேறி புறப்படும் கோலம் என பல்வேறு நிலைகளில் பல கோவில்களில் கருப்பசாமி காட்சி தருகிறார். கம்பீர உருவத்துடன் தலைப்பாகை, இடையில் கச்சை, மிரட்டும் வழிகள், முறுக்கிய மீசை மற்றும் கையில் அரிவாளுடன் கோவில் கொண்டிருப்பவர்தான் கருப்பசாமி. பெரும்பாலும் கையில் சுக்குமாந்தடியுடன் அவர் அருள்தருவார். கருப்பசாமியின் மனைவி – கருப்பழகி(கருப்பாயி), மகன் – கண்டன், அண்ணன் – முத்தண்ண கருப்பசாமி, தம்பி – இளைய கருப்பு, தங்கை – ராக்காயி.
ஸ்ரீ ஐயப்பனுக்கும், கருப்பசாமிக்குமான தொடர்பை, ராங்கியம் திருத்தாண்டகத்தின் முதல் பாடல் விளக்குகிறது.
மலையாளத் துரையானை என்னுள்ளத்தில்
வந்தானைக் கண்டடியேன் வணங்கி வேண்டினேனே!
என்கிறது அந்தப்பாடல் வரி.
Also Read : சாப்பிட்ட பிறகு சிறிது நேர நடை! தெர்மல் வாக்..! சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் தொடங்கி ஏராளமான பயன்கள்!
தமிழகத்தில் கருப்பசாமி கோயில்கள் இல்லாத ஊர்களே எனலாம். அந்தளவுக்கு மக்களின் மனதிலும், வாழ்விலும் கருப்பசாமி இரண்டறக் கலந்து காணப்படுகிறார். கருப்பசாமி அவர் அமர்ந்த இடங்களுக்கு ஏற்றார் போல் பல நாமங்களில் அழைக்கப்படுகிறார். சங்கிலி கருப்பன், கருப்பனார் சாமி, குல கருப்பனார், பதினெட்டாம்படியான், வேட்டைக் கருப்பு, சின்ன கருப்புசாமி, பெரிய கருப்புசாமி, மீனமலை கருப்புசாமி, முன்னோடை கருப்பசாமி, நொண்டி கருப்பசாமி, ஒண்டி கருப்பசாமி என பலவிதமான பெயர்களில் தமிழக கிராமங்களில் மக்கள் கருப்பசாமியை வழிபடுகின்றனர்.
சபரிமலை ஐயனுக்குத் கருப்பசாமி துணையாகத் திகழ்கிறார் என்ற தகவல் புராணங்களிலே உள்ளது. சுவாமி ஐயப்பன், மகிஷியை வதம் செய்யப்ப புறப்பட்டபோது சிவபெருமான் தன அம்சமாகிய கருப்பசாமியை அழைத்து ஐயப்பன் சிறு வயதினன், அவனது படைக்குத் சேனாதிபதியாக இருந்து அவன் வெற்றி பெற உதவி செய் என கட்டளையிட்டாராம். அவ்வாறே ஐயப்பனின் வெற்றிக்கு கருப்பசாமி உதவியாக இருந்துள்ளார்.
சபரிமலையில் 18ம் படியின் அருகே வலப்புறத்தில் பதினெட்டாம்படி கருப்பு சன்னதி கொண்டிருக்கிறார். முந்திரி நைவேத்தியமும், கற்பூர வழிபாடும் இவருக்கு விசேஷம். சபரிமலைக்கு ஐயனை தரிசிக்கச் செல்பவர்கள் கன்னிமூல கணபதியை வழிபட்டு, வாவர் மற்றும் கருப்பசாமியிடம் அனுமதி பெற்றுவிட்டே, 18 படிகளில் ஏறுவார்கள். சாஸ்தாவின் சித்தத்தை நிறைவேற்றும் இவரை சித்தங்காத்தான், பீடாபஹன் என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள்.
Also Read : குலதெய்வத்தை வீட்டிற்குள் வரவழைக்கும் சக்தி வாய்ந்த முறை! குலதெய்வம் வீட்டில் தங்க சிம்ப்பிள் பரிகாரம்!
வருடா வருடம் சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் கல்லையும், முள்ளையும் காலுக்கு மெத்தையாக மிதித்துக் கடந்து சுவாமி ஐயப்பனை தரிசித்துவிட்டு செல்கிறார்கள். இப்படி அவர்கள் கடினமான காட்டுப்பகுதியை கடந்து வரும்போது ஐயப்பன் அவர்களுக்குக் காவலாக இருப்பார். அந்த ஐயப்ப பக்தர்களின் வீட்டை காவல் காப்பது யார் தெரியுமா? ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வதற்கு முன்பு வீட்டில் ஒரு தேங்காய் உடைத்துவிட்டுதான் கிளம்புவார்கள். அதேபோல, சபரிமலையில் இருந்து வீடு திரும்பியதும் வீட்டில் தேங்காய் உடைத்த பின்னரே வீட்டிற்குள் நுழைவார்கள்.
இதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? ஐயப்பன் கருப்பண்ண சுவாமியிடம், ‘மாலைப்போட்டு, விரதமிருந்து சபரிமலைக்கு வரும் பக்தர்களை நான் பார்த்துக்கொள்வேன். அவர்களுடைய குடும்பத்தாரை பார்த்துக்கொள்வது உனது பொறுப்பு’ என்று ஐயப்பன் கருப்பண்ணசாமிக்கு கட்டளையிடுகிறார்.
‘இதை நான் எப்படி தெரிந்துகொள்வது’ என்று கருப்பண்ணசாமி கேட்க, அதற்கு ஐயப்ப சுவாமி, ‘சபரிமலைக்கு வீட்டில் இருந்து செல்வதற்கு முன்பு ஒரு தேங்காய் உடைப்பார்கள். அந்த தேங்காய் சத்தத்தை கேட்டதுமே அவர்கள் வீட்டிலே போய் நீ காவலாக இருக்க வேண்டும்’ என்று கூறுகிறார்.
அதையடுத்து, ‘எவ்வளவு நாள் நான் காவலாக இருக்க வேண்டும்?’ என்று கருப்பண்ணசாமி கேட்கிறார். ‘சபரிமலையில் இருந்து அவர்கள் திரும்பி வந்ததும் இன்னொரு தேங்காய் உடைப்பார்கள். அந்தத் தேங்காய் சத்தத்தை கேட்டதும் நீ கிளம்பலாம்’ என்று ஐயப்பன் கூறுகிறார். சபரிமலைக்குச் சென்றுவிட்டு திரும்பிவரும் வரை அந்த பக்தர்களின் வீட்டில் காவலாக கருப்பண்ணசாமி இருக்கிறார். அதனால்தான் சபரிமலைக்கு போகும்போதும், சபரிமலையிலிருந்து திரும்பி வீட்டிற்கு வந்ததும் தேங்காய்கள் உடைக்கப்படுகின்றன.
ஐயப்பன் வழிபாட்டில் தேங்காய் இன்றியமையாததாகும். இருமுடியில் நெய்தேங்காய் கட்டி எடுத்துச் சென்று தேங்காயை உடைத்து நெய்யை மட்டும் எடுத்து ஐயப்பனுக்கு அபிஷேகத்திற்குக் கொடுப்பார்கள். இதில் தேங்காய் என்பது உடல், நெய் என்பது நம்முடைய ஆன்மா என்று பொருள். அத்தகைய நெய்யை வைத்து ஐயப்பனை அபிஷேகம் செய்யும்போது நம்முடைய ஆன்மாவும் பரிசுத்தமாக அவனை நோக்கிச் செல்வதாக கூறப்படுகிறது. தேங்காயில் எப்படி நார்கள் இருக்கிறதோ, அதேபோலதான் மனிதனின் இதயத்திலும் தசைநார்கள் உள்ளன. தேங்காயின் உள்ளே இருக்கும் நீரைப் போல மனிதனின் உள்ளேயுமே கலங்கலான எண்ணங்கள் அமைந்துள்ளள. இதை குறிப்பதற்காகத்தான் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது.
Also Read : ஆழ் மனதில் ஸ்டோராகும் எண்ணச் சுமைகள்! இயல்பாக வாழ வழிகாட்டும் ஆன்மிகம்! Part – 2
கருப்பசாமி அவதாரம் குறித்த ராமாயணத்தில் உள்ளதாக ஏற்கனவே பார்த்தோம். இதை சுருக்கமாகத் தெரிந்துகொள்வோம். வால்மீகி முனிவரின் குடிலில் சீதை தங்கியிருந்து லவனை பெற்றெடுத்தாள். ஒரு நாள் சீதை தண்ணீர் எடுக்க செல்லும் போது, வால்மீகி முனிவரிடம் லவனை பார்த்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டு சென்றாள். திரும்ப வந்து குழந்தை லவனை தூக்கிக் கொண்டு வால்மீகியின் பர்ணசாலைக்கு வெளியே வந்து உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள்.
இதை வால்மீகி முனிவர் அறியவில்லை. திடீரென்று பார்க்கும் போது குழந்தை அங்கு இல்லை என்பதை உணர்ந்த வால்மீகி முனிவர், குழந்தையை காணவில்லை என்றால் சீதை தன்னை சபித்துவிடுவாளோ என எண்ணி தனது தவ வலிமையால் உருவேற்றி கீழே கிடந்த தர்ப்பை புற்களை கொண்டு லவனைப் போலவே ஒரு குழந்தையை உருவாக்கினார். அந்தக் குழந்தையின் பெயர் தான் குசன். ஆக லவன், குசன் என இருப்பிள்ளைகள் ஸ்ரீராமருக்கு. ராமர் ஒரு நாள் காட்டுக்கு வந்து சீதையிடம் இரண்டில் எது நம் குழந்தை எனக் கேட்டார். உடனே தீக்குளித்த சீதை, தன் குழந்தைகளையும் அதையே செய்யச் சொன்னாள். லவன் பிழைத்து வர, குசன் மட்டும் யாகத் தீயில் கருகினான். ஸ்ரீராமர் மீண்டும் உயிர் தந்து குசனைக் காக்க, தீயில் கருகியதால் கருப்பா என அழைத்தாராம். அன்று முதல் அவர் கருப்பண்ண சாமியானார் என கூறப்படுகிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry