
கொங்கு ஸ்பெஷல் உப்பு ரொட்டி காலை உணவாக மட்டுமின்றி, மாலை நேர ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இந்த ரொட்டிக்கு தேங்காய் சட்னி அட்டகாசமான சைடு டிஷ். கொங்கு ஸ்பெஷல் உப்பு ரொட்டி செய்வது எப்படி என தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- இட்லி அரிசி – 1 கப்
- துவரம் பருப்பு – 1/4 கப்
- வரமிளகாய் – 2
- மிளகு – 1 டீஸ்பூன்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 5
- உப்பு – சுவைக்கேற்ப
- கறிவேப்பிலை – சிறிது
- துருவிய தேங்காய் – 1/4 கப்
- எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
Also Read : பிரியாணிக்கே டஃப் கொடுக்கும் பட்டாணி சாதம்! எளிமையாக செய்யும் முறை! Peas Coriander Rice!
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி மற்றும் துவரம் பருப்பை எடுத்து நீரில் 2-3 முறை அலசி விட்டு, பின் நீரை ஊற்றி ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், ஊற வைத்த அரிசி பருப்பை நன்கு கழுவி, பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் மிளகு, சீரகம், வரமிளகாய், சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு தூவி, 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
எண்ணெய் சூடானதும், அரைத்து வைத்துள்ளதை கொஞ்சம் எடுத்து, அதை ஓரளவு மெல்லியதாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான உப்பு ரொட்டி தயார்.
Input : Boldsky
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry