UPI உடன் கிரெடிட் கார்டு இணைப்பு! சாதக, பாதகங்கள் என்னென்ன?

0
227

ஸ்வைப்பிங் மற்றும் ஆன்லைன் பேமன்ட்டுகளுக்கு மட்டுமே கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த முடியும் என்றிருந்த நிலையில், கிரெடிட் கார்டுகளையும் UPI-ல் இணைத்துக்கொண்டு பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது.

ரிசர்வ் வங்கியின் இநத முடிவு பற்றி நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி கூறியதாவது:- “டிஜிட்டலை நோக்கிய எந்த ஒரு நகர்வுமே வாடிக்கையாளர்களின் பயன்பாட்டை எளிதாக்கவே செய்யும். ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் `ரூபே’ வகை கிரெடிட் கார்டுகளை மட்டும்தான் UPI-ல் இணைத்துக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறது.

ரூபே வகை கார்டுகள் இந்திய வங்கிகளால் அளிக்கப்படுபவை, மாஸ்டர், விசா கார்டுகள் சர்வதேச வங்கிகளால் அளிக்கப்படுபவை. நம் நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள கிரெடிட் கார்டுகளில் மாஸ்டர், விசா கார்டுகளே அதிகம். இந்த நிலையில், கிரெடிட் கார்டுகளை UPI-யுடன் இணைக்கும் ஆர்.பி.ஐ-யின் முடிவை நிச்சயம் வரவேற்கலாம்.” என்றார்.

இந்தியாவில் 26 கோடி மக்கள் UPI பயன்பாட்டாளர்களாக இருக்கின்றனர். கடந்த மே மாதம் வரையிலும் 594 கோடி பரிவர்த்தனைகள் UPI மூலமாக நடந்திருக்கின்றன. இதன்மூலம் ரூ.10.4 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கிறது.

With Inputs Vikatan Digital

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry