செந்தில் பாலாஜி தொகுதியில் சட்டவிரோத மதுவிற்பனை! காந்தி ஜெயந்தியன்று நடந்த அவலம்! அதிர்ச்சியூட்டும் வீடியோ!

0
35

காந்தி ஜெயந்தியான நேற்று தமிழகம் முழுவதும் அரசு டாஸ்மாக் மதுக் கடைகள் மற்றும் பார்கள் எனப்படும் மதுக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் கட்டாயம் மூடப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் கரூர் மாநகரில், பேருந்து நிலையத்தில் மூன்று பார்கள் இயங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொகுதியிலேயே, மாவட்ட செயலாளரான பின்னர் முதன் முதலில் அவர் கரூர் வந்த நாளிலேயே நடந்துள்ள இந்த சட்டவிரோத சம்பவம் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. பார்களில் மதுபாட்டில்களை விற்ற 72 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து 500க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

காவல்துறையினர் பார்களை கண்டும் காணாமல் இருந்தது மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
காந்திஜெயந்தி அன்று மதுபான பார்கள் இயங்க ஒத்துழைத்த போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry