ராக்கெட் வேகத்தில் எகிறும் கேஸ் சிலிண்டர் விலை! மேலும் ரூ.25 அதிகரித்து ரூ.835 விற்பனை!

0
5

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரித்துள்ளது. இதன் மூலம் சென்னையில் ஒரு சிலிண்டர் ரூ.835க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் மதிப்பை அடிப்படையாக வைத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மட்டுமின்றி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் தீர்மானிக்கின்றன. அந்தவகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி மாற்றியமைக்கப்படுகிறது. ஆனால் சமையல் கேஸ் சிலிண்டர் விலை பொதுவாக மாதத்தில் முதல் மற்றும் பிற்பாதியில் மாற்றியமைக்கப்படும். சில சமயங்களில் இடையில் கூட மாற்றியமைக்கப்படும். அப்படித்தான் பிப்ரவரி மாதத்தில் 3-வது முறையாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது.

இந்நிலையில், சென்னையில் சமையல் எரிவாயு  சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரித்து ரூ.835க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த பிப்ரவரியில் மட்டும் ரூ.100 விலை உயர்ந்த நிலையில், மார்ச் முதல் தேதியே மேலும் ரூ.25 அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரியில் ரூ.710 ஆக இருந்த சமையல் எரிவாயு  சிலிண்டர் விலை, ரூ.125 உயர்ந்து, ரூ.835 ஆக அதிகரித்துள்ளது. இதே வேகத்தில் சென்றால், விரைவில் ஒரு சிலிண்டர் ரூ.1000த்தை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்த விலை உயர்வுக்கு இல்லத்தரசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry