‘யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்’ – தனுஷை கலாய்க்கிறாரா சிம்பு? இணையத்தில் ஹிட் அடிக்கும் ‘மாநாடு’ டீஸர்!

0
41

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தை, வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் வைரலாகி வருகிறது.

ஈஸ்வரன் படத்தை முடித்த கையோடு கடந்த நவம்பர் 9 ஆம் தேதி முதல் வெங்கட் பிரபுவின்மாநாடுபடத்தில் சிம்பு நடித்து வருகிறார். அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சிம்புவுக்கு கல்யாணி பிரியதர்‌ஷன் ஜோடியாக நடிக்கிறார்.  

Producer Suresh Kamatchi

சமீபத்தில் இதன் ஃபர்ஸ்ட் லுக், செகெண்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்த நிலையில், சிம்புவின் பிறந்தநாளையொட்டிமாநாடுடீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சிம்புவின் பிறந்தநாளான இன்று மாநாடு திரைப்பட டீசரை ஏ.ஆர் ரஹ்மான் வெளியிட்டிருக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த டீசராக இது அமைந்துள்ளதுஇசை மூலமாகவே டீஸர் ஒருவித உணர்வை ஏற்படுத்துகிறதுயுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ் என சிம்பு கூறுவது யாரை என்ற விவாதம் சமூக வலைதளங்களில் அனல் பறக்கிறது.

இப்படத்தில் சிம்புவுடன் எஸ்..சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஸ்டைலிஷ் காவல்துறை அதிகாரியாக எஸ்.ஜே சூர்யா மிரட்டுகிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை, தெலுங்கு, கன்னட, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். மலையாள டீசரை நடிகர் பிரித்திவிராஜும், இந்தி டீசரை பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப்பும், கன்னட டீசரை கிச்சா சுதீப்பும், தெலுங்கு டீசரை ரவி தேஜாவும் வெளியிட்டிருக்கிறார்கள். மாநாடு டீஸர் யு டியூப், டிவிட்டர், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 38-வது பிறந்நாளை கொண்டாடும் சிம்புவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, ஈஸ்வரன் படத்தின் ஒரு சண்டைக் காட்சியில், நீ அழிக்க வந்த அசுரன் என்றால், நான் காக்க வந்த ஈஸ்வரன் என்று சிம்பு வசனம் பேசுவார். அசுரன் என்று சிம்பு தனுஷைத்தான் குறிப்பிடுகிறார் என்று தனுஷ் ரசிகர்கள் ஆவேசம் அடைந்தனர். சிம்புவுக்கு பதில் அளிப்பது போல் தனது டிவிட்டர் பயோவை மாற்றி அசுரன் என மாற்றினார் தனுஷ். அதன் தொடர்ச்சியாக, ‘யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்என டீஸரில் சிம்பு சொல்வது தனுஷைத்தான் என்று அவரது ரசிகர்கள் பொருமுகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry