பேனாவே ஆயுதமாக…! தனுஷின் ‘மாறன்’ ட்ரெய்லரை வெளியிட்ட ரசிகர்கள்! ரிலீஸ் தேதியும் அறிவிப்பு!

0
86
MAARAN DHANUSH

தனுஷ் நடித்த ‘மாறன்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டிரெய்லரை வெளியிட்டு, ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது.

புலனாய்வு செய்தியாளராக தனுஷ் நடித்துள்ளார். அரசியல்வாதி வில்லனாக சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். ’நாம் எழுதறது மக்களுக்கு பிடிக்கிற மாதிரி இருக்கக்கூடாது, மக்களுக்கு உண்மையைக் கொண்டுபோய் சேர்க்கிற மாதிரி இருக்கணும்…”, உண்மை நிறைய பேர அசெளகர்யமாக்கும், வாழ்க்கையில நேர்மையா இருக்கறத விட சாமர்த்தியமா இருக்கிறது முக்கியம், போன்ற அழுத்தமான வசனங்களும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. பேனாவையே ஆயுதமாக பயன்படுத்தும் சண்டைக் காட்சியும் டீசரில் கவனம் ஈர்க்கிறது.

டிவிட்டர் தளத்தின் Twitter Unlock என்ற புதிய வசதியை பயன்படுத்தி ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து டீசரை வெளியிட்டுள்ளனர். இது தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாகும். கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள இந்த ‘மாறன்’ திரைப்படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம், டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வரும் 11-ந் தேதி நேரடியாக வெளியாகவுள்ளது. ராம்கி, கிருஷ்ண குமார், மாஸ்டர் மகேந்திரன், ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன் மற்றும் பல முன்னணி கலைஞர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry