கடந்த மாதம் 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது, ஜூன் 23 ந்தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தீர்ப்பில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாவே இருக்கிறது.
பொதுக்குழு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள 75 பக்க தீர்ப்பின் சாராம்சம் இதுதான்.
(1) 23.06.2022 அன்றைய நிலையே தொடரும்.
(2) ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகிய இருவரின் ஒப்புதலின்றி செயற்குழு அல்லது பொதுக்குழு கூட்டம் நடைபெற முடியாது.
(3) ஒற்றைத் தலைமைக்காக கட்சி விதிகளில் திருத்தம் உள்பட கட்சியின் விவகாரங்களைத் தீர்மானிப்பதற்காக, பொதுக்குழுக் கூட்டத்தை கூட்டாக கூட்டுவதற்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு எந்தத் தடையும் இல்லை.
(4) பொதுக்குழுவின் மொத்த உறுப்பினர்களில், ஐந்தில் ஒரு பங்குக்குக் குறையாத உறுப்பினர்கள் பொதுக்குழுவைக் கூட்டுமாறு கோரிக்கை வைத்தால், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் மறுக்க முடியாது.
(5) 5ல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையின் பேரில், கோரிக்கை பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள், எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்ட 15 நாட்களுக்கு முன்னதாக பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
(6) பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதற்கு ஏதேனும் ஒரு காரணத்திற்காக, வழிகாட்டுதல் தேவைப்பட்டாலோ அல்லது கூட்டத்தை நடத்துவதற்கு ஆணையரின் உதவி தேவைப்பட்டாலோ, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் நீதிமன்றத்தை அணுகி தேவையான நிவாரணம் பெறலாம்.
இந்த தீர்ப்பின்படி, ஒற்றைத் தலைமைக்காக கட்சி விதிகளில் திருத்தம் செய்வதற்கு, இருவரும் இணைந்து பொதுக்குழுவை கூட்ட தடையில்லை. அதேநேரம் ஓ. பன்னீர்செல்வத்தால் பொதுக்குழுவை கூட்ட முடியாது என சொல்ல இயலாது.
சுமார் 2600க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்களில், 95%க்கும் அதிகமானோர் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கின்றனர். ஒற்றைத் தலைமையாக அவரை ஏற்கின்றனர். இப்படியான நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்பானது, 5ல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தால், பொதுக்குழுவை கூட்டியாக வேண்டும்.
Also Read : ஓபிஎஸ்-ஐ ஏற்க மாட்டோம்! எம்.ஜி.ஆர். மாளிகையை அடித்து நொறுக்கியவருக்கு கட்சியில் இடமில்லை!
மேலும், பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதற்கு ஆணையரின் உதவி தேவைப்பட்டால், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் நீதிமன்றத்தை அணுகலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது. ஆணையரின் முன்னிலையில்தான் செயற்குழு, பொதுக்குழு நடத்தப்பட வேண்டும் என உத்தரவில் கூறப்படவில்லை.
பெருவாரியான பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கின்றனர். எனவே, அவரால் எந்த சட்டச் சிக்கலும் இல்லாமல் பொதுச்செயலாளராக தேர்வாக முடியும். முழு அதிகாரத்துடன் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி மீண்டும் தேர்வாவது உறுதியாகியுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry