அதிகம் உப்பு சாப்பிட்டா..? உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை ரிப்போர்ட்!

0
269

அதிகப்படியான சோடியம் உட்கொள்வது இறப்பு மற்றும் நோய்க்கான முக்கிய பங்கு வகிக்கிறது என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. சோடியம் உட்கொள்வதை மக்கள் குறைப்பது பற்றிய அதன் முதல் அறிக்கையில் WHO இவ்வாறு கூறியுள்ளது.

2025 ஆம் ஆண்டிற்குள் 30 சதவீதம் மக்கள் சோடியம் உட்கொள்வதை குறைக்க வேண்டும் என்ற இலக்கை உலக சுகாதார அமைப்பு வைத்துள்ளதாக அந்த அறிக்கை சுட்டுகிறது. சோடியம் உடலுக்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும், ஆனால் அதிகப்படியான சோடியம் உட்கொள்வது இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறு வயதில் மரணம் ஆகியவற்றினை அதிகரிக்கும்.

சோடியத்திற்கான (சோடியம் குளோரைடு) முக்கிய ஆதாரமாக டேபிள் சால்ட் இருக்கிறது.  WHO அறிக்கையின்படி, சோடியத்தின் அளவை மக்கள் குறைத்துக்கொண்டால் சுமார் 7 மில்லியன் உயிர்களை காப்பாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில், சிலி, செக் குடியரசு, லிதுவேனியா, மலேசியா, மெக்சிகோ, சவுதி அரேபியா, ஸ்பெயின் மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் மட்டுமே இந்த கொள்கையை தீவிரமாக பின்பற்றுகிறது.

Also Watch : டீசல் கொள்முதலில் மெகா ஊழல் | போக்குவரத்து கழக மெகா முறைகேடு | Tamil Nadu Transport Scam | CK Thulasidoss

உலக  சுகாதார அமைப்பானது ஒருவர் உட்கொள்ளும் உப்பின் அளவு 5 கிராமாக இருக்க வேண்டும் என்றும், ஆனால் பயன்பாட்டில் இது 10.8 கிராமாக உள்ளது என தெரிவித்துள்ளது.  WHO இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸின் கூற்றுப்படி ”உலகளவில் மக்கள் நோய்வாய்ப்பட்டு உயிரிழக்க ஆரோக்கியமற்ற உணவு முறைகள் முக்கிய காரணியாக உள்ளது. குறிப்பாக மக்கள் அதிக அளவு சோடியம் உட்கொள்வதால் அதிக நோய் ஏற்படுகிறது.

பெரும்பாலான நாடுகள் சோடியம் குறைப்புக் கொள்கைகளை இன்னும் கடைப்பிடிக்கவில்லை, இதனால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படும் என்பதை இந்த அறிக்கை செளிவுபடுத்துகிறது. உணவில் உள்ள சோடியம் உள்ளடக்கத்திற்கான WHO அளவுகோல்களை செயல்படுத்த உற்பத்தியாளர்களுக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். உணவில் அதிகம் உப்பு சேர்த்துக்கொண்டால், இரைப்பை புற்றுநோய், உடல் பருமன், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் சிறுநீரக நோய் போன்றவற்றால் பாதிக்கப்படும் சூழல் அதிகம் இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

Also Read : தமிழகத்தில் வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்! மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்! 7 நாட்கள் வரை நீடிக்கும் பாதிப்பு!

குறைந்த சோடியம் உள்ள உணவை தேர்ந்தெடுக்கும் முறையையும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது:

1. உப்பைக் குறைக்கும் வகையில் உணவுகளை மறுசீரமைத்தல். உணவு மற்றும் உணவில் உள்ள சோடியத்தின் அளவை கண்காணித்தல்.

2. மருத்துவமனைகள், பள்ளிகள், பணியிடங்கள் மற்றும் முதியோர் இல்லங்கள் போன்ற பொது நிறுவனங்களில், உப்பு அல்லது சோடியம் நிறைந்த உணவுகளை கட்டுப்படுத்த பொது உணவு கொள்முதல் கொள்கைகளை நிறுவுதல்.

3. சோடியம் குறைவாக உள்ள தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்க நுகர்வோருக்கு உதவும் வகையில் ,Front-of-package labelling இருக்க வேண்டும். அதாவது அவர்கள் வாங்கும் பொருட்களில் இருக்குக் சோடியத்தின் அளவை குறிக்கும் வகையில் முன் பக்கத்தில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

4. உப்பு/சோடியம் பயன்பாட்டை குறைக்க மக்களிடையே போதிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry