இலக்குகளை அடைய ஆதிக்க மனப்பான்மை ஏன் அவசியம்? The Secret to Success: Cultivating a Dominant Mindset!

0
29
A dominant attitude towards oneself, characterised by self-belief, self-discipline, and a strong will, is crucial for achieving personal and professional goals. This mindset empowers individuals to overcome challenges, stay motivated, and ultimately succeed in their endeavours.

பொதுவாக பிறர் மேல் ஆதிக்க மனப்பான்மை செலுத்துவது நல்லது அல்ல. பிறரை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நினைப்பவர்கள் மட்டுமே ஆதிக்க மனப்பான்மையை கொண்டிருப்பார்கள். ஆனால் ஒருவர் தனக்குத்தானே ஆதிக்க மனப்பான்மையை பின்பற்றுவதன் மூலம் இலக்குகளை எளிதில் அடையலாம். இது பல்வேறு உளவியல் குணாதிசயங்கள் மற்றும் அணுகுமுறைகளை உள்ளடக்கியது. இலக்குகளை அடைய ஆதிக்க மனப்பான்மை ஏன் அவசியம்?

Also Read : நீங்க Hard Worker or Smart Worker? வெற்றிக்கான சிம்பிள் டிப்ஸ்! இனி எல்லாமே சக்ஸஸ்தான்!

கவனம் மற்றும் தெளிவு

ஆதிக்க மனப்பான்மை, ஒருவர் தான் எதை அடைய விரும்புகிறார் என்பதில் தெளிவைத் தருகிறது. இந்த மனநிலை கொண்ட நபர்கள் தங்கள் இலக்குகளை தெளிவாக வரையறுப்பதில் மிகவும் திறமைசாலிகள். அப்போதுதான் அவர்கள் தங்கள் செயல்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் கவனச் சிதறல்களை குறைக்கவும் முடியும். ஒருமுகப்படுத்தப்பட்ட அணுகுமுறையுடன் இலக்குகளை நிர்ணயித்து அதை செயல்படுத்த வேண்டிய தெளிவை இந்த மனப்பான்மை தருகிறது.

தன்னம்பிக்கை

மனம் சோர்ந்திருக்கும்போது பிறருடைய ஆறுதலும் தேற்றுதலும் அவசியம். மற்றவரின் நம்பிக்கை ஊட்டக்கூடிய ஊக்குவிப்பு ஒருவருக்கு உதவக் கூடும் என்றாலும், தன் மேல் ஒருவருக்கு நம்பிக்கை இல்லை என்றால் பிறருடைய ஊக்கம் அவருக்கு ஓரளவிற்கு மட்டுமே உதவி செய்யும். ஆனால் ஆதிக்க மனப்பான்மை உள்ள ஒருவர் தனக்குத்தானே தன்னம்பிக்கை ஊட்டிக் கொள்வது மிகுந்த நன்மையை செய்யும்.

World Chess Champion D. Gukesh

நேர்மறையான சுய பேச்சு

ஆதிக்க மனப்பான்மை கொண்ட நபர்கள் பெரும்பாலும் நேர்மறையான சுய பேச்சுக்களை பயன்படுத்துகிறார்கள். முன்னேற்றத்தைத் தடுக்கக்கூடிய, எதிர்மறை எண்ணங்களை எதிர்க்கிறார்கள். இந்த உள் உரையாடல் அவர்கள் தங்கள் மீது உள்ள நம்பிக்கையை வலுப்படுத்துகிறது, தயங்காமல் செயல்பட வலியுறுத்துகிறது. ஆதிக்கம் செலுத்தும் மனநிலை கொண்ட நபர்கள் விஷயங்கள் நடக்கும்வரை காத்திருப்பதற்கு பதிலாக, தனது முன்னேற்றத்திற்கு தேவையான தகவல்கள், விஷயங்கள், நெட்வொர்க் ஆதாரங்களைத் தேடி அடைகிறார்கள்.

புதிய அணுகுமுறை

ஆதிக்க மனப்பான்மை உள்ள நபர்கள் தங்கள் அணுகுமுறையில் பலன் இல்லாத போது அவர்களது வலிமையான மனநிலையை தொய்வடைய விடாமல் வேறு புதிய அணுகுமுறைகளை நாடுகிறார்கள். புதிய உத்திகளை முயற்சி செய்யத் தூண்டப்படுகிறார்கள். மனம் சோர்ந்து போகாமல் மீண்டும் அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இதுவும் கடந்து போகும் என்கிற பாடத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் செயல்படத் தொடங்குகிறார்கள்.

Also Read : இளசுகளை பாடாய்ப்படுத்தும் ‘சைபர் புல்லியிங்’ எனப்படும் இணைய மிரட்டல்..! அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்!

நேர்மறையான கண்ணோட்டம் மற்றும் உணர்ச்சி நிலைத்தன்மை

இந்த இரு விஷயங்களைப் பராமரிப்பதில் ஆதிக்க மனப்பான்மை உள்ள மனிதர்கள் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு உணர்ச்சிகளைத் திறம்பட நிர்வகிக்கக்கூடிய திறன் இருக்கும். தோல்வி அல்லது சவால்கள், போராட்டங்கள், பின்னடைவுகள் நேரும் போது மனம் கலங்குவதில்லை. கவலை விரக்தி மற்றும் பயம் போன்றவற்றை எளிதாகக் கடந்து விடுகிறார்கள். எதையும் ஒரு கை பார்ப்போம் என்கிற அசாத்தியமான துணிச்சலை ஆதிக்க மனப்பான்மை தருகிறது.

இவர்கள் தங்களது செயல்களுக்கும், விளைவுகளுக்கும் தாங்களே பொறுப்பேற்கிறார்கள். வெளிப்புறக் காரணிகளைக் குறை சொல்வதை விட சூழ்நிலைகளை கட்டுப்படுத்த அவர்கள் தங்களுக்குத் தாங்களே அதிகாரம் அளித்துக் கொள்கிறார்கள். இதனால் அவர்களுக்கு தனிப்பட்ட வளர்ச்சி மற்றும்  முன்னேற்றம் எளிதாக அமைகிறது. அப்படி எளிதாக முன்னேற்றம் கிடைக்காமல் போனாலும், ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டு எழுந்து செயல்படும் தன்மையை அவர்களது ஆதிக்க மனப்பான்மை தருகிறது.

illustration of a man representing positive mental health

ஆதிக்க மனப்பான்மை வளர்ப்பது எப்படி?

முதலில் சுயமரியாதையை வளர்க்கும் எண்ணங்களை வளர்க்க வேண்டும். குறைகளைப் பட்டியலிடும் மனதிடம் நிறைகளைக் காட்ட வேண்டும். பிரச்சினைகளாய்த் தேடும் மனத்திடம் சாதனைகளைக் காட்ட வேண்டும். எதிர்மறையானவற்றைப் பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் மனோபாவத்தைக் கை விட வேண்டும். உங்களிடம் உள்ள எல்லா நல்ல விஷயங்களையும் பட்டியலிடுங்கள்- அது எவ்வளவு சின்ன விஷயமாக இருந்தாலும் சரி.

உங்களை நீங்கள் மனதார முழுமையாக விரும்ப வேண்டும். உங்கள் மதிப்பை உணர வேண்டும். சிறு குறைகளையும், பிரச்சினைகளையும் வைத்துக்கொண்டு மொத்த ஆளுமையையும் தள்ளுபடி செய்யக் கூடாது. அடுத்து, பிறர் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் எண்ணங்கள் யாவும் உங்களைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் எண்ணங்களே.

யாரும் உதவ மாட்டார்கள் என்பது நான் யாருக்கும் உதவ மாட்டேன் என்ற செய்தியைத்தான் சொல்கிறது. பிறர் உதவியைப் பெற நீங்கள் செய்ய வேண்டியது பிறருக்கு உதவுவது. பிறருடன் சேர்ந்து செய்யும் உதவி போன்ற காரியங்கள் மூளையில் ஆக்ஸிடோசினைச் சுரக்க வைத்து மனதுக்கு உற்சாகம் தருபவை. உங்களுக்கு உதவி தேவையா, நீங்கள் பிறருக்கு உதவத் தயாராகுங்கள்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry