பங்களாதேஷில் சூறையாடப்படும் கோவில்கள், கடைகள்! கடும் அச்சத்தில் இந்துக்கள்! சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறை!

0
77
Bangladeshi media reported that business establishments have been ransacked in at least 27 districts. There have also been reports of Hindus being targeted and killed in mob attacks | Getty Image.

பங்களாதேஷில் ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு சிறுபான்மையினரான இந்துக்கள் மற்றும் அவர்களது வழிபாட்டுத்தலங்கள் தாக்குதலுக்கு இலக்காகின்றன. இதைக்கண்டித்தும், பாதுகாப்புகோரியும் இந்துக்கள் தலைநகர் டாக்காவில் போராட்டம் நடத்தியுள்ளனர். நாங்கள் யார்? நாங்களும் பெங்காலிகள்தானே என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

9 ஆகஸ்ட் 2024 அன்று, டாக்காவின் ஒரு முக்கிய சந்திப்பை மறித்த இந்துக்கள், ‘ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா’ என்ற கோஷங்களுடன் அமைதி மற்றும் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தனர். இந்து ஒற்றுமை கவுன்சிலின் தலைவர்களில் ஒருவரான நிர்மல் ரொசாரியோ, “நாங்கள் ஒரு நிச்சயமற்ற சூழ்நிலையில் இருக்கிறோம், இரவில் எங்கள் வீடுகளையும் கோயில்களையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதற்கு முன்பு இதுபோன்ற தாக்குதல்களை நாங்கள் பார்த்ததில்லை. மத நல்லிணக்கத்தை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறோம். அதிகரித்து வரும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர முன்னுரிமை அளிக்குமாறு நாட்டின் இடைக்காலத் தலைவர் யூனுஸை கேட்டுக்கொள்கிறோம்” என அவர் கூறினார்.

பங்களாதேஷ் இந்து பௌத்த கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூலை நடுப்பகுதியில் இடஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டங்கள் தொடங்கியதில் இருந்து மொத்த இறப்பு எண்ணிக்கையை 560 ஆக உள்ளது. பல இந்து கோவில்கள், வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளன. பெண்களும் வன்முறையாளர்களுக்கு இலக்காகின்றனர். ஹசினாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த இந்து தலைவர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர்.

Also Read : மாணவர்களை வன்முறையாளர்களாகப் பயன்படுத்தும் அமெரிக்கா! பங்களாதேஷில் இடஒதுக்கீட்டைப் போல இந்தியாவில் NEET தேர்வை கையிலெடுக்க சூழ்ச்சி!

ஹசீனா வெளியேறிய நாளான ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல், பங்களாதேஷின் மக்கள்தொகையில் சுமார் 8% ஆக இருக்கும் இந்து சமூகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகின்றனர். அவர்களது உடைமைகள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. ஒரு பள்ளி ஆசிரியர் மற்றும் இரண்டு இந்து கவுன்சிலர்கள் கொல்லப்பட்டனர். கடந்த வாரம் மெஹர்பூரில் உள்ள ஒரு இஸ்கான் கோயில் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. வன்முறைக்குப் பயந்து, இந்துக்கள் பலர் இந்தியாவுக்குள் நுழைய முயற்சிக்கின்றனர். நாட்டின் 64 மாவட்டங்களில் குறைந்தது 52 மாவட்டங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் இடைக்கால அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது. தனது தொடக்க உரையில், அராஜகத்தை ஊக்குவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று யூனுஸ் உறுதியளித்துள்ளார் “ என பங்களாதேஷ் இந்து பௌத்த கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சில் கூறியுள்ளது.

Students of World Religions and Culture Department of Dhaka University formed a human chain at Dhaka University area to protest the attack on minorities in Dhaka,Bangladesh on 07 August 2024. (Photo by ABU SUFIAN JEWEL/Middle East Images/AFP via Getty Images)

பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான குறிப்பிடத்தகுந்த பரவலான வன்முறையில் சிலவற்றை பங்களாதேஷ் இந்து பௌத்த கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சில் வெளியிட்டுள்ளது. நேத்ரோகோனா என்ற இடத்தில் சதார் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன், இஸ்கான் கோயில் மற்றும் அருகிலுள்ள சிறுபான்மை வீடுகள் தாக்கப்பட்டன.

சமூக ஊடகங்கள் மூலம் பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை காட்சிகளாக வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

பங்களாதேஷில் இந்துக்களின் வீடுகள், வணிக மையங்கள் மற்றும் கோயில்கள் மீதான தாக்குதல்களை வீடியோ காட்சிகள் காட்டுகின்றன. இந்த வீடியோக்களில் சிலவற்றின் நம்பகத்தன்மை சரிபார்க்கப்படவில்லை. எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட பல வீடியோக்களில், போக்ரா மாவட்டத்தின் கப்தாலி உபசிலாவின் பமுனியா பால்பாராவில் ஒரு கும்பல் இந்துக்களின் வீட்டைத் தாக்குகின்றன. மற்றொரு வீடியோவில், பிரோஜ்பூர் மாவட்டத்தின் மாத்பரியா காவல் நிலைய பகுதியில் ஒரு இந்து சிறுமி, பங்களா மொழியில் உதவி கோரி கெஞ்சுகிறாள்.

மற்றொரு வீடியோவில், சிட்டகாங்கின் நவ்கிரஹா பாரியில் உள்ள ஷானி கோயில் கலவரக்காரர்களால் தீக்கிரையாக்கப்படுவதை கூடுதல் காட்சிகள் காட்டுகின்றன. நர்சிங்டி மாவட்டம் ஷிப்பூர் உபசிலாவில் உள்ள ஒரு இந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இஸ்கான் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் யுதிஸ்திர் கோவிந்த தாஸ், பங்களாதேஷ் மெஹர்பூரில் (குல்னா பிரிவு) உள்ள ஒரு இஸ்கான் மையம் எரிக்கப்பட்டதாகவும், இதில் பகவான் ஜெகந்நாதர், பலதேவ் மற்றும் சுபத்ரா தேவி ஆகியோரின் தெய்வங்களும் அடங்கும் என்றும் தெரிவித்தார். மற்றொரு வீடியோ, இஸ்லாமியர்கள் இந்து வீடுகளை சுற்றி வளைத்து குடியிருப்பாளர்களை அச்சுறுத்துவதைக் காட்டுகிறது.

பங்களாதேஷில் கடுமையான அரசியல் அமைதியின்மைக்கு இடையே, இந்து மற்றும் பிற சிறுபான்மை சமூகங்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகின. அதேநேரம், சில இடதுசாரிகள் மற்றும் இஸ்லாமிய குழுக்கள் இந்த வன்முறை நடவடிக்கைகளை மறுத்துள்ளன அல்லது நியாயப்படுத்தியுள்ளன. சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர், பங்களாதேஷில் இனவெறி வன்முறையைக் கண்டித்ததுடன், இடைக்கால அரசாங்கத்திற்கு ஐ.நா.வின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry