முகம் பளீச்சின்னு ஆகனுமா? கடலை மாவு இருக்க கவலை ஏன்…?

0
111

கடலை மாவு பயன்படுத்தி அழகுக் குறிப்பு. கடலைமாவுடன் சில பொருட்களையும் சேர்த்து ஃபேஸ் போக் போட்டால் பார்லரேபோக வேண்டாம். முகம் பளபளக்கும்.

கடலை மாவும் , முட்டையும் : முட்டை வெள்ளை 1 , கடலை மாவு 2 tsp, தேன் 1/2 tsp என கலந்து முகத்தில் அப்ளை செய்து10-15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும். இப்படி செய்தால் முகச்சுருக்கங்கள், வயது முதிர்ந்த தோல் தோற்றம்மறைந்து சதைகள் இறுக்கமாகும்.

கடலை மாவும் வேப்பிலையும் : வேப்பிலை பொடி 1 tsp, கடலை மாவு – 1 tsp, தயிர் 1 tsp என கலந்து முகத்தில் தடவி 10 – 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். வாரம் இரண்டு முறை செய்தால் முகம் தெளிவாக இருக்கும். பருக்கள், கிருமிகள், எண்ணெய்பிசுபிசுப்பை அகற்ற உதவும்.

கடலை மாவும் உருளைக்கிழங்கும் : கடலை மாவு 2 tsp, உருளைக்கிழங்கு 1 என எடுத்துக்கொள்ளுங்கள். உருளைக்கிழங்கைசாறு குறையாமல் மைய அரைத்துக்கொண்டு அதில் கடலைமாவு கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். 15 நிமிடங்கள்கழித்து கழுவ முகம் ஜொலிக்கும். அதோடு கரும்புள்ளிகள், கருவலையங்களும் மறையும்.

கடலை மாவும் கற்றாழையும் : கடலை மாவு 1 tsp கற்றாழை 1 tsp என எடுத்துக்கொண்டு மைய கலந்து கொள்ளுங்கள். அதைமுகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இது முகத்தில் உள்ள கருமையை நீக்க உதவும். ஈரப்பதம்அளிக்கும்.கடலை மாவும் முல்தானி மெட்டியும் : 2 tsp முல்தானி மெட்டியும், 1 tsp கடலைமாவும் எடுத்துக்கொள்ளுங்கள் மையகலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இவ்வாறு செய்து வர இறந்த செல்கள், சரும அழுக்குகள் நீங்கும்.