தொப்பை குறையலன்னாவா… எந்த சைஸ்ல இருந்தாலும் குறையும், கன்ஃபார்ம்

0
132

உடல் பருமன் என்பது உடல் வாகு என்று சொன்ன வீட்டு பெரியவர்களே இப்போதையை உடல்பருமனை கொழுப்பு என்றுஒப்புக்கொள்வார்கள்.

உடல் பருமனும் அதனால் வரும் நோயும் குறித்து தனி புத்தகமே எழுதலாம். அதே நேரம் உடல் எடை குறைய பின்பற்றும்எண்ணற்ற டயட் வகைகள் குறித்தும் ஒரு தனி பகுதியே ஒதுக்கலாம். தினம் ஒரு சமையல், தினம் ஒரு உடற்பயிற்சி என்றுசெய்துவந்தாலும் உடல் எடையை அதிகரித்து காட்டும் தொப்பையின் அளவு மட்டும் குறைவதே இல்லை என்பது தான்பலருக்கும் இருக்கும் குறைபாடு. உடல் பருமனாகும் போதே வீட்டு பெரியவர்கள் அதை குறைக்கும் வகையில் உணவை எடுத்துவேகமாக குறைத்தும் விடுவார்கள். அப்படி அவர்கள் எடுத்துகொள்ளும் பொருள்களும் வேகமாக எடை குறைதலையும், அதற்குஇணையாக உடலுக்கு சத்தையும் சேர்த்து கொடுக்ககூடியவை. அப்படி கொடுக்ககூடிய அதே நேரம் தொப்பை குறைய கூடியஒரு பொருள் தான் கொள்ளு. இதை எப்படி எடுத்துகொள்ளலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

கொள்ளுவின் மருத்துவ குணங்கள்- தொப்பை குறைய

இளைத்தவனுக்கு எள்ளு என்பது போன்று கொழுத்தவனுக்கு கொள்ளு என்று சொல்வார்கள். உடலில் இருக்கும் கொழுப்பைகரைப்பதில் கொள்ளுக்கு இணை கொள்ளு மட்டும்தான். கொழுப்பை மட்டும் கரைக்கும் என்று கொள்ளை ஒதுக்காமல்எல்லோரும் எடுத்துகொள்ள கூடிய ஆரோக்கியமான உணவு என்று சொல்லலாம்.

ஆயுர்வேதம், சித்த வைத்தியம், வீட்டு வைத்தியம் என அனைத்திலுமே கொள்ளுவுக்கும் இடம் உண்டு. இரும்புச்சத்து, வைட்டமின், புரதம் கொண்டிருக்கும் இது உடலில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கவும் செய்யும். இன்ன பிறமருத்துவகுணங்களையும் கொண்டிருக்கும் இது குறித்து நாம் தனியாக பார்க்கலாம். இப்போது உடல் தொப்பை குறையகொள்ளை பயன்படுத்தும் முறை குறித்து பார்க்கலாம்.

கொள்ளை ஊறவைப்பது, கொள்ளு ரசம் வைப்பது, கொள்ளு துவையல் செய்வது, கொள்ளு சூப், கொள்ளு குழம்பு, கொள்ளுஊறவைத்த நீர் என்று பலவகை உண்டு. உங்களுக்கு ஏற்ற வகையை நீங்கள் தேர்வு செய்யுங்கள். இது குறித்து பார்க்கலாம்.

கொள்ளு சாறு – தொப்பை குறைய

கொள்ளு சாறு எந்த விதமான சுவையுமில்லாமல் இருக்கும். எனினும் இதன் பலனையும் மிக விரைவாகவே பார்க்கலாம். 5 டீஸ்பூன் அளவு கொள்ளை முன் தினம் இரவு ஊறவைக்கவும். மறுநாள் காலை அந்த நீரோடு கொள்ளை அரைத்து வடிகட்டவும். அதிக நீர் சேர்க்க வேண்டாம். சற்று அடர்த்தியாக இருக்கும் இந்த சாறில் தேவையெனில் சிறிதளவு வெதுவெதுப்பான நீர்சேர்க்கவும்.

காலை வெறும் வயிற்றில் அரை டம்ளர் அளவு இந்த கொள்ளுச்சாறை குடித்து வரவேண்டும். இது குடிக்கும் போது காபி, டீ, பால் பானங்களை தவிர்க்க வேண்டும். சாறு குடித்த பிறகு ஒரு மணி நேரம் வரை எதையும் குடிக்க வேண்டாம். தொடர்ந்து ஒருமாதம் வரை இதை குடித்தாலே பலன் தெரியும்.

குறிப்பு

கொடுத்திருக்கும் அளவுக்கு மேல் 5 டீஸ்பூனுக்கு மேல் இதை எடுக்க வேண்டாம். இவை அதிக உஷ்ணத்தை கொடுக்ககூடியது. அதே போன்று பெண்கள் மாதவிடாய் நாட்களில் இதை தவிர்க்க வேண்டும்.

கொள்ளு முளைகட்டிய சுண்டல் – தொப்பை குறைய

கொள்ளை ஊறவைத்து மறுநாள் வெள்ளை துணியில் கட்டி முளைகட்ட வேண்டும். இதை வேகவைத்து சுண்டல் போல்தேங்காயெண்ணெய் கொண்டு தாளிக்கவும்.

மதிய நேரங்களில் ஒரு சிறிய கப் அளவு சாப்பிட்டு ஒரு தம்ளர் நீர் குடிக்கவும்.

குண்டு குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு கொடுக்கும் போது சுண்டலுடன் வெல்லத்தை பொடித்து கொடுக்கலாம். குழந்தைகள் மறுக்காமல் விரும்பி சாப்பிடுவார்கள். உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும்தன்மை கொண்டவை.

குறிப்பு

சுண்டலாக சாப்பிட விரும்பாதவர்கள் வாரம் இரண்டு நாள் இந்த முளைகட்டிய கொள்ளுவை கிரேவி போல் செய்தும்சாப்பிடலாம். ருசியும் ஜோராக இருக்கும்.

கொள்ளு ரசம் – தொப்பை குறைய

கொள்ளு சூப் போன்றுதான் இதுவும். மழைக்காலங்களில் காய்ச்சலிலிருந்து காப்பாற்றும். கொள்ளு வேகவைத்து அந்த நீரைதனியாக பிரித்தெடுத்து அதில் ரசம் வைக்க வேண்டும். மிளகு ரசம் போன்று இல்லாமல் இந்த ரசத்தை வேண்டுமளவு சாதத்தில்பிசைந்து அதிகம் குடிக்கலாம்.

சுவையாக இருக்கும்.

கொள்ளுரசம் நான்கு நாட்கள் வரை கெடாமல் இருக்கும். தினமும் இரண்டு கப் கொள்ளு ரசம் குடித்தால் உடல் ஆரோக்கியம்குன்றாமல் இருக்கும். புளிசேர்க்காமல் அப்படியே குடித்தால் கொள்ளு சூப். தொடர்ந்து 2 மாதங்கள் வரை குடித்து வந்தால்தொப்பை இல்லாமல் தட்டையான வயிறை பெறலாம்.

குறிப்பு

தொப்பை குறைய என்றில்லாமல் மாதம் இரண்டு முறையாவது கொள்ளு ரசம் வைத்து சாப்பிடுவதன் மூலம் எப்போதும் உடலில்கொழுப்புகள் சேராமல் தடுக்கலாம்.

கொள்ளு பொடி – தொப்பை குறைய

கொள்ளு சூப், கொள்ளு ரசம், கொள்ளு சாறு பிடிக்காதவர்கள் இந்த முறையில் எடுத்துகொள்ளலாம். ஆனால் இதன் பலன்கிடைக்க சற்று தாமதமாகும். கொள்ளை வறுத்து அதனுடன் வரமிளகாய், உப்பு சேர்த்து பொடித்து வைக்கவும்.

தினமும் சாதத்தில் 4 டீஸ்பூன் சேர்த்து தேங்காயெண்ணெய் கலந்து பிசைந்து சாப்பிடலாம். இட்லி பொடிக்கு மாற்றாககொள்ளுபொடி சேர்க்கலாம். கொள்ளுபொடி போன்று கொள்ளை வெறும் வாணலியில் வறுத்து காரத்துக்கு வரமிளகாய்சேர்த்து துவையலாக்கி சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். ஆனால் தினசரி இந்த துவையல் சுவை பலருக்கும் பிடிக்காதுஎன்றாலும் இதுவும் கொள்ளு சாறு போன்று பலன் தரக்கூடியது.

ஊறவைத்த கொள்ளு – தொப்பை குறைய

முன் தினம் இரவு ஒரு தேக்கரண்டி அளவு கொள்ளை நீரில் ஊறவைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் அந்த கொள்ளைஅப்படியே சாப்பிட வேண்டும். அந்த நீரையும் வீணாக்காமல் குடிக்க வேண்டும்.

15 நாட்களில் பலன் தெரியும் முறை இது என்றாலும் கொள்ளை பச்சையாக சாப்பிடுவதை பலரும் விரும்புவதில்லை. தொப்பைஅதிகமாக இருப்பவர்களுக்கு இம்முறை வேகமாக கூடுதலாகவே பலன் அளிக்கும்.

குறிப்பு

கொள்ளை அப்படியே சாப்பிடும் போதும், கொள்ளை சாறாக்கி சாப்பிடும் போதும் ஒன்றை மட்டும் கடைப்பிடித்தால்போதுமானது. மற்றபடி கொள்ளு ரசம், கொள்ளு சுண்டல், கொள்ளு பொடி போன்ற மூன்றையும் கூட சேர்த்து எடுக்கலாம். ஆனால் பலன் நிச்சயம் உண்டு. 15 நாட்கள் இதை கடைபிடித்த பிறகு உங்கள் தொப்பையை பாருங்கள். நிச்சயம்குறைந்திருப்பதை ஆச்சரியத்துடன் பார்ப்பீர்கள்.