உணவுமுறை, பணிச்சூழல் எனப் பல்வேறு காரணங்களால் `மைக்ரேன்’ எனப்படும் ஒற்றைத் தலைவலி பலரையும் பாடாகப்படுத்தி வருகிறது. தலையே வெடித்துவிடும் அளவுக்கு மிக மோசமான இந்த வலி எந்த நேரத்தில் வரும் என்று தெரியாது. சைனஸ் காரணமாகவும் இப்படிப்பட்ட வலி வரலாம். பெரும்பாலும் மைக்ரேன் வகைப் பாதிப்புகள், ஏதேனும் ஒரு புறத்தூண்டுதல் காரணமாகவே வருகின்றன என்கின்றனர் மருத்துவர்கள். அந்தத் தூண்டுதல்களை கண்டறிந்து அவற்றைத் தவிர்த்துவிட்டால், ஒற்றைத் தலைவலியை எளிதில் தடுத்துவிடலாம்.
சில சமயங்களில் வேலைப் பதற்றம் அல்லது எதையாவது திரும்பத் திரும்ப நினைப்பதால் கடுமையான தலைவலியை நீங்கள் உணரலாம். தலைவலி மிகவும் பொதுவான பிரச்னையாக கருதப்படுகிறது. ஆனால், சில நேரங்களில் இது ஒற்றைத் தலைவலியையும் குறிக்கிறது. அதாவது மைக்ரேன் (migraine).
மைக்ரேன் ஏற்பட்டால், தலையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அல்லது இருபுறமும் கடுமையான வலியை நீங்கள் உணரலாம். இந்த காலகட்டத்தில், சிலருக்கு வாந்தி, தலைசுற்றல் மற்றும் பார்வைக் கோளாறுகள் கூட ஏற்படலாம். இந்த பிரச்சனைக்கு பல காரணங்கள் இருக்கலாம்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களும் ஒற்றைத் தலைவலியைத் தூண்டும். ஒற்றைத் தலைவலி காரணமாக, ஒரு நபர் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. அத்தகைய சூழ்நிலையில், அவரது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்னைகள் ஏற்படலாம். இதே போல் பல விஷயங்களை மைக்ரேன் ஏற்பட காரணமாக இருக்கலாம். இதனை தடுக்க சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றினாலே போதும்.
மைக்ரேன் ஏற்படுவதற்கான காரணங்கள்
மன அழுத்தம்
சிலர் சிறிய விஷயங்களுக்கு அடிக்கடி கவலைப்படுவார்கள். இவை மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இது மைக்ரேன் தலைவலி பிரச்னையை மேலும் தூண்டும். கவலை மூளையின் செயல்பாட்டில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
வானிலை
வலுவான சூரிய ஒளி அல்லது வெப்பமான சூழலில் சிலருக்கு தலைவலி ஏற்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். உண்மையில், வெப்பமான சூழலின் காரணமாக உடலில் ஏற்படும் நீரிழப்பு மைக்ரேன் பிரச்னையைத் தூண்டும். சத்தமோ, வெளிச்சமோகூட வலியை தீவிரப்படுத்தும்.
காரமான உணவு
பொரித்த உணவுகள் அல்லது காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவதும் சிலருக்கு மைக்ரேன் பிரச்னையை உண்டாக்கும். காரமான உணவு உடல் வெப்பநிலையை அதிகரிக்கிறது, இது தலைவலிக்கு முக்கிய காரணியாக மாறும்.
மைக்ரேனை தடுக்கும் வீட்டு வைத்தியம்
பிராமி டீ (Brahmi Tea)
உடல் சூட்டை தணிக்க பிராமி என்கிற வல்லாரை டீ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, பித்த பிரச்னையை நீக்கவும் உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இரவில் தூங்கும் முன் பிராமி டீயை உட்கொள்ளலாம். பிராமி அதன் அறிவாற்றல்-மேம்படுத்தும் பண்புகளுக்கு அறியப்பட்ட ஒரு பழங்கால மூலிகையாகும். நினைவாற்றலை மேம்படுத்துதல், மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைத்தல் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் பிராமி தேநீர் உதவும். வல்லாரை பிராமி மாத்திரைகள் கிடைக்கின்றன. அவற்றை இரவில் எடுத்துக்கொள்ளலாம்.
திரிபலா
திரிபலா, மைக்ரேன் வலியிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. திரிபலா சூரணத்தை தவறாமல் உட்கொள்வது உடலில் இருந்து நச்சு கூறுகளை அகற்ற உதவுகிறது மற்றும் செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் திரிபலா பொடியை வெதுவெதுப்பான நீரில் குடித்து வந்தால் மைக்ரேனில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
இஞ்சி மற்றும் துளசி டீ
துளசி மற்றும் இஞ்சி இயற்கையாகவே வலியைப் போக்க உதவுகிறது. ஒரு கப் நீரில் துளசி இலை மற்றும் இஞ்சி சேர்த்து கொதிக்கவிடவும். இதை வடிகட்டி ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கவும். இந்தக் கலவையானது மன அழுத்தத்தைக் குறைத்து, மூளையை அமைதியாக வைத்து, அதன் மூலம் மைக்ரேன் தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
தேங்காய் நீர்
தேங்காய் நீர் ஹார்மோன் மாற்றங்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், நீரிழப்பு பிரச்சனையையும் குறைக்கிறது. வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை தேங்காய் தண்ணீர் குடிக்கலாம்.
நீர்க்கோவை மாத்திரை
சித்த மருந்துக் கடைகளில் நீர்க்கோவை மாத்திரை கிடைக்கும். அதை வாங்கி, பால் அல்லது வெந்நீரில் இழைத்து நெற்றி, கன்னங்கள் என நீர்கோத்த பகுதிகளில் பற்று போல போடலாம். ஓமத்தை வெதுவெதுப்பான பாலில் ஊறவைத்து அரைத்து, பற்று போடலாம்.
Also Read : ஹேங்ஓவர் பிரச்சனையா? தலைவலியா? இதை மட்டும் செய்யுங்க..! Tips to avoid a Hangover!
மைக்ரேனில் இருந்து நிவாரணம் பெற மனம் அமைதியாக இருக்க வேண்டியது மிக முக்கியம். அதற்கு யோகா உதவும். யோகநித்ரா எனப்படும் சவாசனத்தை தினமும் இரு முறை செய்வது மைக்ரேன் பிரச்னையின் தீவிரத்தில் இருந்து காக்கும். தியானமும் மூச்சுப்பயிற்சியும்கூட பெரிய அளவில் உதவும்.
சாக்லேட், வாழைப்பழம், சுத்திகரிக்கப்பட்ட பால் மற்றும் தயிர் சார்ந்த பொருள்கள், வெங்காயம், தக்காளி, `டைராமைன்’ (Tyramine) சத்து அதிகம் உள்ள உணவுப்பொருளான சீஸ் வகைகள், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள், வேர்க்கடலை, சுத்திகரிக்கப்பட்ட கோதுமை, அதிக கொழுப்புச்சத்துள்ள அசைவ வகைகள், `எம்.எஸ்.ஜி’ எனப்படும் `மோனோ சோடியம் குளூட்டமேட்’ (Mono Sodium Glutamate) என்ற சுவையூட்டப்பட்டி சேர்க்கப்பட்ட உணவுகள் போன்றவை மைக்ரேன் பிரச்னையை அதிகரிக்கும்.
`மைக்ரேன்’ தலைவலியை அதிகரிக்கும் உணவுகள் தனிநபரின் உடல்நிலையைப் பொறுத்து, ஒருவருக்கொருவர் மாறுபடும். எந்த உணவு மைக்ரேன் தலைவலியை அதிகரிக்கிறது என்பதை, நோயாளிகள் சுயபரிசோதனை மூலம் தெரிந்துகொள்ளலாம். அதற்கேற்றவாறு, உணவுமுறையை மாற்றி அமைத்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொருமுறை `மைக்ரேன்’ தலைவலி ஏற்படும்போதும், என்ன உணவு உட்கொண்டோம் என்பதைப் பரிசோதித்து, அடுத்தடுத்த நாள்களில் அவற்றைத் தவிர்க்கவேண்டும்.
Image Source : Getty Image.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry