பிராமண சமூகத்தை கிண்டலடித்து பத்திரிகை விளம்பரம்! எதிர்க்க ஆளில்லாததால் தைரியம்! சீப் பாலிடிக்ஸ் என பாஜக ஆவேசம்!

0
189

எல்லோரும் நம்முடன்என்ற பெயரில், இணைய வழி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கியுள்ள தி.மு.., கேட்க நாதியில்லாத சமூகம் என்ற தைரியத்தில், பிராமணர்களை கிண்டலடித்து ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

ஆங்கில நாளிதழ் ஒன்றில் இளம் பெண்ணின் புகைப்படத்துடன், ‘காணவில்லைஎன்ற தலைப்பில் ஒரு விளம்பரம் வெளியாகியுள்ளது. அதில், சென்னை மேற்கு மாம்பலம், பார்த்தசாரதி என்பவர் காணாமல் போன தனது மகள் காயத்ரி பற்றி விளம்பரம் செய்திருப்பது போன்று சித்தரித்துள்ளனர். உயரமான, அழகான 21 வயதுடைய எனது அன்பு மகள் காயத்ரியை காணவில்லை. மீண்டும் வீட்டுக்கு வந்துவிடு, அனைவரும் வருத்தத்தில் உள்ளனர். உன்னுடைய இரண்டு கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டோம். உனக்கு பிடித்த வேலையையே எப்போதும் பார்க்கலாம். உனது இரண்டாவது கோரிக்கையானஎல்லோரும் நம்முடன்ஆன்லைன் திட்டம் மூலம் நமது குடும்பம் தி.மு..,வில் சேர வேண்டும், என்பதும் நடந்துவிட்டது. அத்திம்பேர், மண்ணி குடும்பமும் சேர்ந்துள்ளனர். சீக்கிரம் திரும்பி வா என கூறப்பட்டுள்ளது. Partha_exsangee@gmail.com என்ற இமெயில் முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது.

வடிவேலு பாணியில் சொன்னால், நொடிக்கு நூறு தரம், தாங்கள் இந்துக்களுக்கு எதிரி என்பதை நிரூபித்து வரும் திமுக, தங்களது வழக்கமான பாணியை இப்போது கையிலெடுத்துள்ளது. பிராமணர்களை நேரடியாக அவமதிக்கும் விதத்தில் இந்த விளம்பரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற சமூகத்தினரை குறிப்பிட்டால், கடும் எதிர்ப்பு எழும், வாக்குகளையும் இழக்க நேரிடும் என்பதால், எதற்கும் மவுனியாக இருக்கும் பிராமண சமூகத்தை திமுக சீண்டியுள்ளது. இந்த விளம்பரம் பற்றி மாநில பாஜக இளைஞரணி துணைத் தலைவர் எஸ்.ஜி. சூர்யாவிடம் கேட்டபோது, இது மிகவும் கீழ்த்தரமான அரசியல் என்றார்.

டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் போலி  கணக்குகளை வைத்துக்கொண்டு, திமுக ஐடி விங்க் மட்டமான அரசியலை முன்னெடுப்பதாக அவர் விமர்சித்துள்ளார். விளம்பரத்தில் திமுக வெளியிட்டிருக்கும் படம் ஆந்திராவைச் சேர்ந்த மாடல் அழிகியுடையது என்பதையும் சூர்யா வெளிச்சம்போட்டு காட்டியுள்ளார்.   

பிரசாந்த் கிஷோர் ஆலோசனைப்படி, இணைய வழியிலான தி.மு.., உறுப்பினர் சேர்க்கை என்ற பெயரில், நமது முதலமைச்சர் தொடங்கி, அமெரிக்க அதிபர் டிரம்ப் வரை திமுகவில் உறுப்பினராகிவிட்டார்கள்.

இந்த லட்சணத்தில் உறுப்பினர்களை சேர்க்கும் இவர்கள், ஒரு நாளில் இத்தனை லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துவிட்டார்கள் என பெருமை கொள்கின்றனர். இந்த உறுப்பினர் சேர்க்கை மற்றும் அதன் விளம்பரத்துக்காக பல கோடிகள் செலவிடப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry