விருப்பப்படும் கட்சியில் சேர ரசிகர்களுக்கு எந்தத் தடையுமில்லை! ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு!

0
12

ரஜினி ரசிகர்கள் எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம் என்று ரஜினி மக்கள் மன்றம் அறிவித்துள்ளது. இதன் மூலம் எந்தக் கட்சிக்கும் ஆதரவாக ரஜினி குரல்கொடுக்க மாட்டார் என்பது தெளிவாகிவிட்டது.

நடிகர் ரஜினிகாந்த், தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று சமீபத்தில் அறிவித்தார். இதையடுத்து, அவரது உடல்நலன்தான் தங்களுக்கு முக்கியம் என்று தெரிவித்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், இதுதொடர்பாக அவர் எந்த முடிவு எடுத்தாலும் ஏற்றுக்கொள்வதாகக் கூறினர்.

ஆனால், ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று ஆவலோடும், எதிர்பார்ப்புடனும் காத்திருந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரஜினியை அரசியலுக்கு வர வலியுறுத்தி அவவர்கள் அறப் போராட்டம் அறிவித்தனர். அதில் யாரும் பங்கேற்க வேண்டாம் என்று மன்றத் தலைமையும், நிர்வாகிகளும் கூறிய பிறகும், காவல் துறையின் அனுமதி பெற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ரஜினி ரசிகர்கள் சில தினங்களுக்கு முன் அறப் போராட்டம் நடத்தினர்

தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான ரசிகர்கள், மக்கள் மன்றத்தினர் இதில் கலந்துகொண்டு, ரஜினி அரசியல் கட்சிதொடங்க வலியுறுத்தி கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து, ரஜினி ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், “நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று போராட்டம் நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம். மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் இணையலாம்வேறு கட்சிகளில் இணைந்தாலும் அவர்கள் எப்போதும் ரஜினி ரசிகர்தான் என்பதை மறுந்துவிடக்கூடாதுஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry