எந்தக் கிழமையில் பெரும்பாலானோருக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா? அதிர்ச்சியூட்டும் தகவல்..!

0
64
This article investigates whether there's a correlation between the day of the week and the likelihood of experiencing a heart attack. Gain insights into potential risk factors and discover actionable steps for heart health protection.

ஒரு காலத்தில், இதய நோய் வயதானவர்களை மட்டுமே பாதித்தது. ஆனால் தற்போது அனைத்து வயதினரையும் பாதிக்கிறது. இன்றைய இளைஞர்கள் தொழில்நுட்பத்துடன் ஓடிக்கொண்டிருப்பதால், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த அவர்களுக்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. இதனால் இளம் வயதிலேயே அவர்களுக்கு பல உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக இளம் வயதினரிடையே மாரடைப்பு அதிகமாகி வருகிறது.

2023ம் ஆண்டு மான்செஸ்டரில் நடந்த பிரிட்டிஷ் கார்டியோவாஸ்குலர் சொசைட்டி (BCS) மாநாட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, மாரடைப்பு பற்றிய கண்ணோட்டத்தை மாற்றியுள்ளது. உலகின் பல முன்னணி மருத்துவர்கள் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், வாரத்தின் மற்ற நாட்களை விட திங்கட்கிழமைகளில் கடுமையான மாரடைப்பு ஏற்படுவதற்கான சூழல் அதிகம் என்று கண்டறியப்பட்டு உள்ளது.

Also Read : BP பாதிப்பு அதிகமாவதை தடுக்க முயற்சி! விரைவில் சந்தைக்கு வருகிறது புதுவகையான உப்பு!

இந்த ஆய்விற்காக, 2013 மற்றும் 2018 க்கு இடையில் 10,000 க்கும் மேற்பட்டவர்களின் பதிவுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இந்த நோயாளிகள் மிகவும் கடுமையான STபிரிவு மாரடைப்புக்காக (STEMI –  is a life-threatening heart attack that occurs when a major artery to the heart is completely blocked) அனுமதிக்கப்பட்டனர். அவசர சிகிச்சை கிடைக்காவிட்டால், இந்த மாரடைப்பு மிகவும் ஆபத்தானது.

வாரத்தின் முதல் நாளில் STEMI விகிதத்தில் 13% அதிகரிப்பு இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வின் தலைமை மருத்துவர் கூறுகையில் “திங்கட்கிழமைகளில் கடுமையான மாரடைப்பு ஏற்படுவதற்கான அதிக சூழல் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். குளிர்காலத்திலும், அதிகாலையிலும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை நாங்கள் அறிவோம். பக்கவாதம் ஏற்படும் விகிதத்திலும் இதே விளைவு காணப்படுகிறது,” என்று தெரிவித்தார்.

Learn how understanding potential patterns in heart attack occurrence can help you make informed decisions about your heart health and take proactive steps to reduce your risk.

மேலும் “இந்த மாறுபாடுகளுக்கான சரியான வழிமுறை தெரியவில்லை. ஆனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை பாதிக்கக்கூடிய சுழற்சி ஹார்மோன்களை சர்க்காடியன் ரிதம் எவ்வாறு பாதிக்கிறது என்பதோடு இது தொடர்புடையது என்று கருதுகிறோம். வேலைக்குத் திரும்புவதால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக இது இருக்கலாம். மன அழுத்தம் அதிகரிக்கும்போது, மன அழுத்த ஹார்மோன் கார்டிசோலின் அளவும் உயருவதற்கு வழிவகுக்கிறது. இது மாரடைப்புக்கான ஆபத்தை அதிகரிக்கிறது.” என்று அவர் கூறினார்.

இந்நிலையில், சாதாரண மாரடைப்புக்கும், சைலண்ட் ஹார்ட் அட்டாக்கிற்கும் இடையே நுட்பமான வேறுபாடுகள் உள்ளன. நீங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து அவற்றைப் புறக்கணிக்காமல் இருந்தால், உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையைத் தவிர்க்கலாம். பொதுவாக மாரடைப்புக்கு முன்பு சைலண்ட் ஹார்ட் அட்டாக் ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போதைய மாரடைப்புகளில் 45 சதவீதம் சைலண்ட் ஹார்ட் அட்டாக்கால் ஏற்படுகின்றன. இது பெண்களை விட ஆண்களையே அதிகம் பாதிக்கிறது என்று சொல்லப்படுகிறது.

Also Read : இதய பிரச்சனை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? பரிந்துரையை மீறினால் படு ரிஸ்க்!

சைலண்ட் ஹார்ட் அட்டாக் ஏற்படும்போது, மார்பு வலி கடுமையாக இருக்காது. கை, கழுத்து மற்றும் தாடையில் லேசான வலி, கண்கள் மங்கலாக தெரிவது ஆகியவை சைலண்ட் ஹார்ட் அட்டாக்காக இருக்கலாம். பலர் இந்த அறிகுறிகளை இதயம் தொடர்பானவையாக பார்க்காமல் புறக்கணிக்கிறார்கள். எனவே, சில ஆண்டுகளுக்குப் பிறகு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு அவர்கள் இறக்கின்றனர்.

அறிகுறிகளைக் கண்டறிவது முக்கியம்

மார்பகத்திற்கு அருகில் லேசான வலி ஏற்படும். யாரோ அமர்ந்து அழுத்துவது போல் இருக்கும். இது போன்ற அறிகுறிகள் தோன்றினால் அலட்சியம் காட்ட வேண்டாம். மாரடைப்புக்கான அறிகுறிகள் உடலின் சில பகுதிகளில் தோன்றும். மார்பகத்திற்கு அருகில் வலி, கைகள், முதுகுத்தண்டு, கழுத்து, தாடை மற்றும் வயிற்றில் அசௌகரியம் ஏற்படும். இந்த அறிகுறிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. அதனால் அதை அடையாளம் காண்பது அவ்வளவு எளிதல்ல. பெரும்பாலானவர்களுக்கு முதுகு வலி வரும்.

Explore the latest research on the potential link between the day of the week and the occurrence of heart attacks. Learn about possible contributing factors and how to reduce your overall heart attack risk.

சிலருக்கு சுவாசிப்பதில் சிரமம் இருக்கும். மூச்சு விட முடியாது. மேலும், படிக்கட்டுகளில் ஏறும்போது சோர்வடைவீர்கள். ஏனென்றால் இதயம் உடலுக்கு போதுமான ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தை வழங்க முடியாதபோது இது நிகழ்கிறது. மார்புப் பகுதியில் அசௌகரியம் இருக்கும்போது மூச்சுத் திணறல் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இருப்பினும், இது ஒரு சைலண்ட் ஹார்ட் அட்டாக்கின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

சில நேரங்களில் உங்களால் அன்றாட பணிகளைச் செய்ய முடியாது. நடைப்பயிற்சி செல்வதோ அல்லது துணிகளைத் துவைப்பதோ கூட கடினமாகிவிடும். இதுவும் சைலண்ட் ஹார்ட் அட்டாக்கின் அறிகுறியாகவும் இருக்கலாம். சிலருக்கு குமட்டல் ஏற்படும். சிலருக்கு வியர்த்துக் கொண்டே இருக்கும். அப்படி நடந்தால், அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும், இதயப் பரிசோதனைகளைப் தொடர்ந்து செய்ய வேண்டும் மற்றும் உங்கள் கொழுப்பின் அளவைச் சரிபார்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.

Disclaimer : This article explores potential correlations based on available data. It does not establish a definitive cause-and-effect relationship between the day of the week and heart attack risk. Individual risk factors and circumstances vary greatly.

Image Source : Getty Image.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry