நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், தமிழக பொறுப்பு டிஜிபி இந்த ஊழலில் யாரையும் காப்பாற்ற முயற்சிக்காமல் நடுநிலையோடு வழக்கு பதிய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சிறை மருத்துவர், அதிகாரிகள் அடாவடி! கைதியை சிகிச்சைக்கு பரிந்துரைக்க லட்சக்கணக்கில் வசூல்!
சிகிச்சைக்கு பரிந்துரைக்க 50 ஆயிரம் ரூபாய். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு பரிந்துரைக்க ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை. இவ்வாறு தொகையை நிர்ணயித்து சூப்பர் ஸ்பெஷாலிட்டி கார்ப்பரேட் மருத்துவமனைகள் வசூலிக்கவில்லை, மாறாக மத்திய சிறை மருத்துவர்கள், அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சிகிச்சை பெறும் கைதிகளிடம் இருந்து வசூலிக்கும் தொகைதான் இது.
ஆடைகளில் உள்ள கறைகளை நீக்க சூப்பர் டிப்ஸ்! துணியை நினைத்து இனி வேண்டாம் கவலை!
வெளிர் நிற ஆடைகள் அணியும் போது அழகாக இருக்கும் ஆனால் அவை மிக விரைவாக அழுக்காகிவிடும். அவற்றை ஒரு முறை அணிந்த பிறகு துவைப்பதே கடினம். குறிப்பாக சட்டையின் காலரில் அழுக்குகள் அதிகமாக இருக்கும். கறைகள் பட்டால் துவைப்பது சவாலானதாக இருக்கும், சுத்தம் செய்வது மிகவும் கடினம். இதற்கு டிடெர்ஜென்டுகள் இருந்தாலும் சில நேரம் கறைகள் நீங்காது. ஆடைகளில் உள்ள கறைகளை எளிதாக நீக்க உதவும் டிப்ஸை தெரிந்து கொள்வோம்.
தடுப்பூசிக்கும் அடங்காத டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ்! தமிழ்நாட்டில் ஒருவருக்கு தொற்றியிருப்பதாக அறிவிப்பு!
மராட்டியம், கேரளாவைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் டெல்டா பிளஸ் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் அதிகமான மாதிரிகளை பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நீதித்துறையை அவதூறாக பேசியதாக வழக்கு! சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை!
கடந்த ஜூலை 22ஆம் தேதி ஒட்டுமொத்த நீதித் துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என யூடியூபில், ரெட்பிக்ஸ் சேனலில் சவுக்கு சங்கர் கருத்து தெரிவித்திருந்தார். அவரது பிளாக்கிலும் எழுதியிருந்தார். இதையடுத்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து அவர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. பதில் அளிக்க சவுக்கு சங்கருக்கு உத்தரவிட்டிருந்தது.
மனைவியைப் பிரிவதாக ஜெயம் ரவி அறிவிப்பு! தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கோரிக்கை!
பிரபல நடிகர் ஜெயம்ரவி, தனது மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்விலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
