இலங்கையில் மக்கள் போராட்டம் அதிகரித்து வரும் நிலையில் இலங்கை அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது. அதிபர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தவிர அனைவருமே பதவி விலகியுள்ளனர். அமைச்சரவை ராஜினாமாவை இலங்கை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன உறுதி செய்துள்ளார்.
கொள்முதல் விலையை குறைத்த தனியார் பால் நிறுவனங்கள்! விற்பனை விலையை குறைக்காததால் கொந்தளிக்கும் பால் முகவர்கள், விவசாய சங்கங்கள்!
3 Mins Read : அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விற்பனைத் துறையில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினை தவிர்த்து, தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து தனியார் பால் நிறுவனங்களும், கொள்முதல் விலையை எப்போதும் ஒரே சீரான, நிலையான அளவில் வழங்குவதில்லை என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறியுள்ளார்.
மக்களை மிரட்டும் ‘டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி’! தப்பிப்பதற்கான பவர்ஃபுல் டிப்ஸ்!
பேஸ்புக்கில் உங்கள் பெயரில் போலியாக கணக்கைத் தொடங்கி உங்கள் நண்பர்கள் வட்டத்தில் இணையவழி மோசடியாளர்கள் பணம் பறித்திருக்கிறார்களா? இப்போது ஃபேஸ்புக் வழியாக யாராவது பணம் கேட்டாலே, இது போலிக் கணக்கு என்று நினைக்கும் அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இப்படிப் பலரும் விழிப்புணர்வு பெற்றுவிட்டால், இணையவழி மோசடியாளர்கள் பேசாமல் இருந்துவிடுவார்களா? புதிது புதிதாக எப்படித் திருடலாம் என்றும் யோசிப்பார்கள். அப்படி அவர்கள் யோசித்ததன் விளைவுதான் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி. (Digital Arrest Scam).
ஹவாலா பணம் ரூ.10 கோடி சிக்கியது! நான்கு பேர் கைது! தடை செய்யப்பட்ட PFI அமைப்புக்கு தொடர்பா என விசாரணை?
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய போலீஸார் நேற்று இரவு வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பள்ளிகொண்டா அடுத்த கோவிந்தம்பாடியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு காரில் இருந்து லாரிக்கு பொருட்களை சிலர் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
ராகுல் யாத்திரைக்காக பண வசூல்! ஃபேஸ் புக்கில் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் சண்டை!
‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, தமிழகத்தில் இருந்து இன்று காலை 7 மணியளவில் கேரளாவிற்கு சென்றார். தமிழகத்தில் முடிவுற்ற யாத்திரைக்கான ஏற்பாடு, பணம் வசூல் தொடர்பாக மாநில துணைத் தலைவர் பொன். கிருஷ்ணமூர்த்தி, கரூர் எம்.பி. ஜோதிமணி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
வைகோவின் கூட்டணி ட்விஸ்ட்கள்! வாரிசு அரசியலை எதிர்த்துவிட்டு வாரிசுக்காகத் தஞ்சமடைந்த சோகம்: முரண்பாடுகளின் உச்சமான மதிமுக!
‘கலைஞர் அவர்களே! உங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எம்.ஜி.ஆர் சொன்னார். மக்கள் நம்பினார்கள். தூக்கியெறிந்தார்கள். இப்போது மீண்டும் உங்கள் மீது நான் குற்றச்சாட்டு சொல்கிறேன். லட்சோப லட்சம் தொண்டர்களின் கண்ணீரில், ரத்தத்தில் கிடைத்த ஆஸ்திகளை குடும்ப சொத்தாக்கி தொண்டனுக்கே துரோகம் செய்து கட்சிக்குள்ளேயே நீங்கள் ஊழல் செய்துவிட்டீர்கள் என்பதற்குப் பிறகு உங்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. அருகதையும் கிடையாது. நீங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டீர்கள்.’
ஆழ்ந்த உறக்கத்தில் கல்வித்துறை! அவமதிக்கப்படும் ஆசிரியர்கள்? பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்தால் கொந்தளிப்பு!
“ஆசிரியர்கள் வேலையே பார்க்க வேண்டாம் என நினைப்பார்கள், அதற்குத் துறை என்ன செய்ய முடியும்?” என்று பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி கூறியிருப்பது, ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
