Friday, March 24, 2023

மதுரையில் ஓரம்கட்டப்பட்டும் பி.டி.ஆர்.! தனது நிகழ்ச்சிகளை புறக்கணிக்குமாறு கட்சியினர் மிரட்டப்பட்டுவதாக புலம்பல்!

சமூக நலன், மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது. இதில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, திமுகவில் சில நாட்களாக வரும் தகவல்கள் வேதனை தருகிறது. சிலர் கட்சி நிகழ்வுகளை தானும் புறக்கணித்து, மற்றவர்களையும் அழைத்து புறக்கணிக்க கூறி மிரட்டுவதாக தகவல் கிடைத்துள்ளது. எப்போதும்.. தயவு செய்து குட்டி மிருகங்களாக ஆகாதீர்கள். இன்று நான் சொல்கிறேன், நான் அரசியலுக்கு வந்ததில் இருந்து, பொதுவாழ்க்கையை விட்டுவிட்டு வெளியே போகுவது வரை யாரையும் நான் கட்டுப்படுத்த மாட்டேன்.

Also Read : தொண்டரை கையால் செருப்பை எடுத்துவரச் சொன்ன டி.ஆர். பாலு! திமுக பொதுக்குழு கூட்டத்தில் சர்ச்சை!

நான் ஜால்ரா அடிப்பவன் இல்லை, நான் ஒரு தகவலை முதல்வரிடம் கூறினால் இதயத்தில் இருந்து கூறுவேன், அடிப்படையாக எனக்கு என கொள்ளையும் தத்துவம் உண்டு. எனக்கு எது உண்மை என்று தெரிகிறதோ அதனை நான் பின் பற்றுவன்.

அவரை போய் பார்க்காதே… அவருடன் பேசாதே… இவருடன் பேசாதே… அந்த கூட்டத்தில் கலந்து கொள் என்று கூற மாட்டேன். என்றும் நான் அப்படி யாரிடமும் சொல்ல மாட்டேன். அவர் பெயரை கட் அவுட்டில் போடாதே. அவரின் படத்தை கட் அவுட்டில் போடாதே என்று சொல்லவே மாட்டேன். அப்படி எல்லாம் நான் என் வாழ்க்கையில் சொல்லவே மாட்டேன். நான் பெரிய மனிதன். அப்படி எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.

Also Read : ஃபேஸ்புக்கில் தொழில்நுட்ப கோளாறு! ஃபாலோயர்களை அதிக அளவில் இழந்த பயனர்கள்!

அப்படியே எனக்காவும் நான் பேச மாட்டேன். என் படத்தை போடு, என் பெயரை போடு என்று சொல்ல மாட்டேன். நான் பெரிய மனிதன். எனக்கு அது அவசியம் இல்லை. ஐடி விங் பொறுப்பை என் தலைவர் எனக்கு வழங்கினார். அப்போது ஐடி விங் பேப்பரில் கூட இல்லை. அதை பெரிதாக்கி, 4 வருடங்களில் 1 நாள் கூட விடாமல் உழைத்தேன். அந்த நாட்களில் ஒரு நாள் கூட எனக்கு போஸ்டர் ஒட்டு. ஏர்போர்ட்டில் வந்து எனக்காக கோஷம் எழுப்பு என்று கேட்டது இல்லை.

எனக்கு போஸ்டர் ஓட்ட சொல்லியதே இல்லை. எனக்காக ஜால்ரா அடி என்று யாரிடமும் நான் அப்போது சொல்லியதே இல்லை. நான் பெரிய மனிதன். நான் அப்படி எல்லாம் ஒரு போதும் என் தொண்டர்களிடம் சொல்லவே மாட்டேன். அது மிகவும் தவறு. சிலர் கட்சி நிகழ்வுகளை தானும் புறக்கணித்து, மற்றவர்களையும் அழைத்து புறக்கணிக்க கூறி மிரட்டுவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் எனக்கு வேதனை அளிக்கிறது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டு உள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles