மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மக்களை தூண்டுவிடுவதை ஹென்றி திபேன் முழுநேர வேலையாகக் கொண்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. அவர் நடத்தி வரும் என்.ஜி.ஓ. பற்றி சற்றே விரிவாகப் பார்க்கலாம்.
“தன்னார்வ தொண்டு அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், அரசியல் குழுக்கள் போன்ற போர்வையில் ஒளிந்து கொண்டு, சில விஷம சக்திகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. அவை அச்ச உணர்வைத் தோற்றுவித்தும், விஷமப் பிரச்சாரங்களின் மூலம் துவேஷத்தைப் பரப்பியும் மக்களிடையே போராட்ட உணர்வைத் தூண்டி வருகின்றன. இதுபோன்ற பிரச்சாரங்கள் தொடர்ச்சியாக, ஊடகங்களில், குறிப்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது”. இப்படி வருத்தத்துடன் கூறியவர் மெட்ராஸ் உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்.
தமிழகத்தில், ‘சமூக செயற்பாட்டாளர்கள்’ என்ற போர்வையிலும், சமுதாயத்துக்காக உழைக்கிறோம் என்ற பெயரிலும், வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் நிதி திரட்டி, அதனை மக்களைத் தூண்டிவிட்டு தெருவுக்கு கொண்டு வரப் பயன்படுத்துவர்களை தோலுரிக்கும் கருத்தாகவே இது பார்க்கப்படுகிறது.
இதன்படி, மதுரையைச் சேர்ந்த பீபிள்ஸ் வாட்ச் என்னும் மனித உரிமை செயல்பாட்டு அமைப்பின் திரைமறைவு வேலைகளை அம்பலப்படுத்தியுள்ளது “தி கொம்யூன்”. பீபிள்ஸ் வாட்ச் என்பது இதன் ஒரிஜினல் பெயர் அல்ல. பீபிள்ஸ் வாட்ச் அமைப்பை நிறுவியவர், மனித உரிமை ஆர்வலர் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் என்பவர்.
இந்த அமைப்பின் செயல் இயக்குநராக உள்ள அவரது முழுநேர வேலையே, பொதுநல வழக்குளைத் தொடருவதுதான். இதில் விசேஷம் என்னவென்றால், பீபிள்ஸ் வாட்ச் என்பது பதிவு பெற்ற அமைப்பு அல்ல. இது சமூக அக்கரை மேம்பாட்டு மையம், அதாவது Centre for Promotion of Social Concerns (CPSC) என்பதன் கிளை அமைப்பாகும்.
வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டும் உரிமத்துக்காக இந்த CPSC என்னும் பெயர் வைக்கப்பட்டிருந்தது. 2016 முதல் இதற்கு அந்நிய நிதி வருவது ரத்து செய்யப்பட்டுவிட்டது. அந்த வகையில் பீபிள்ஸ் வாட்ச் அமைப்பின் உண்மையான பெயர் CPSC என்பதும், இதன் பெயரில், நிதி உரிம ரத்தை விலக்கிக் கொள்ளுமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தபோதும்தான் உண்மை தெரியவந்தது.
இப்போதும் இந்த அமைப்பின் பெயர் CPSC என்பது பலருக்கு தெரியாது. பீபிள்ஸ் வாட்ச் என்ற பெயர்தான் பிரசித்தம். அந்தப் பெயரில் தான் ஹென்றி திபேன் செயல்பட்டு வருகிறார். நிதி வரவை மறைப்பதற்காக அவர் இவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆனால், CPSC-க்கு MISEREOR , Bread for the World and Enfants Du Monde ஆகிய அமைப்புகள் நிதி வழங்கி வந்ததாக தெரிகிறது. முறையே, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் இந்த அமைப்புகள் இயங்கி வருகிறது.
இதில், MISEREOR என்ற அமைப்பு பல பாலஸ்தீன தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்து சர்ச்சைக்குரிய அமைப்பாக இருந்து வருகிறது. Bread for the World என்ற அமைப்பு சிவில் சொசைட்டி அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் மூலம், அரசியல் முடிவுகளில் செல்வாக்கைப் பிரயோகப்படுத்தி வருவதாக வெளிப்படையாகவே கூறி வருகிறது.
டேனிஷ்சர்ச், நியூயார்க்கைச் சேர்ந்த யுனைடெட் சர்ச் பவுண்டேசன், ஓஹியோவைச் சேர்ந்த காமன் குளோபல் மினிஸ்டிரீஸ் , நெதர்லாந்தின் CORDAID ஆகியவை நிதி வழங்கியுள்ள வேறு சில அமைப்புகளாகும். இந்த அமைப்புகள் மூலம், 2006-07 முதல் 2016-17 வரை CPSC பெற்ற தொகை ரூ.45 கோடி என்பது தெரிய வந்துள்ளது. 2008-09 ஆம் ஆண்டில்தான் (ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது) அதிக நிதி வந்துள்ளது.
ஹென்றியின் கபட நாடகம்!
மனித உரிமைகள் அமைப்பு என்று கூறிக்கொள்ளும் பீபிள்ஸ் வாட்ச் அமைப்பு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை(CAA2020) எதிர்த்து போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டத்தில், 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களை ஈடுபடுத்தக்கூடாது என்று சிறார்கள் உரிமைக்கான மாநில பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்ட போது, சிறார்கள் போராட உரிமை உள்ளது என அந்த உத்தரவை எதிர்த்தார் ஹென்றி திபேன்.
பெர்லின் ஜோஸ் என்பவர் நடத்தி வரும் ரஸ் பவுண்டேசன் அனாதை விடுதியில், 10 வயது சிறுமி பாலியல் ரீதியில் தாக்குதல் நடத்தப்பட்ட புகாரில், அதன் ஊழியர்கள் ஜான் பிரபாகர், ஜோஸ் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அப்போது, மனித உரிமைக்காக போராடி வருவதாகக் கூறிக்கொள்ளும் ஹென்றி திபேன், அந்தக் கைதைக் கண்டித்தார்.
ஒடுக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுப்பதாக கூறிக்கொள்ளும் இவரது, அலுவலகத்தில் பணியாற்றிய தலித் இனத்தவர் மீது பாரபட்சம் காட்டுவதாக புகார்கள் எழுந்தன. திபேனுக்காக வேலை பார்த்த வன்னியரசு என்ற தலித் வழக்கறிஞர், மிக மோசமாக நடத்தப்பட்டதால், அவரிடமிருந்து வெளியேறினார். பீபிள்ஸ் வாட்ச் அமப்பபை குடும்பச் சொத்தாக இயக்குவதாகவும் ஹென்றி மீது புகார் கூறப்பட்டது.
அவரது பணியாளர்கள் அடிமைகளைப் போல நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆறு ஆண்டுகளாக, அவரது அலுவலகத்தில் பணியாற்றி வந்த உமா ராணி என்பவர், எந்தவித விளக்கமும் கேட்காமல், வேலையிலிருந்து நீக்கப்பட்டார். முருகப்பன் என்ற மற்றொருவர், சம்பளம் கொடுக்காமல் துன்புறுத்தலுக்கு ஆளானார்.அவரது சான்றிதழ்களைத் திருப்பிக் கொடுக்க பணம் கேட்டு மிரட்டப்பட்டார். அவரது அலுவலகத்தில் தங்க வரும் மாணவர்களை கட்டாயப்படுத்தி போராட்டத்தில் ஈடுபடுத்தியதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
சமீபத்திய நடவடிக்கைகள்
இந்து மதத்துடன் எந்த தொடர்பும் இல்லாத ஹென்றி, தமிழ் ஆர்வலர் என்று கூறிக்கொண்டு, தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும், சமஸ்கிருதத்தில் ( ஆகம விதியின்படி) அல்ல என்று கூறினார். அலகு குத்துதல் என்னும் இந்து மத வழிபாட்டு முறையையும் அவர் கேலி பேசினார்.
சேலம் 8 வழிச் சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய அவர், தற்போது தேசிய கல்வி கொள்கை 2020 –ஐ கிறித்தவ அமைப்புகளுடன் சேர்ந்து கொண்டு எதிர்த்து வருகிறார். மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அண்மையில், கல்வி கொள்கைக்கு எதிராக மேற்கொண்டு வரும் ஆன்லைன் பிரச்சார சுற்றறிக்கையில் பீபிள்ஸ் வாட்ச் அலுவலக தொலைபேசி எண் இடம்பெற்றிருந்தது.
CPSC-ன் எப்சிஆர்ஏ உரிமம் ரத்து செய்யப்பட்டு, வெளிநாட்டு பணம் கொட்டுவது நிறுத்தப்பட்ட போதிலும், அது இன்னும் இயங்கி வருவதாகவே தெரிகிறது. அடுத்த முறை பீபிள்ஸ் வாட்ச் பற்றிய செய்தியை பார்க்க நேர்ந்தால், நீதிபதி கிருபாகரனின் மதிநுட்பம் வாய்ந்த கருத்தை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
Courtesy: The Commune
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry