தமிழர் இன அடையாளத்தை மறைத்தவர் பெரியார்! இனப்பற்றை “கலைஞர் வாரிசுகள் பற்று” என்று கொச்சைப்படுத்தக் கூடாது!

0
198

திராவிட அரசியலின் தனிநபர் பகை வெளிப்பாடாகத்தான்,  அண்ணாவையும், தி.மு..வையும் ஒழித்துக் கட்டுவதற்காக, காங்கிரசை ஆதரித்தார் பெரியார். அண்ணாவும் அவர் தம்பிகளும் தி..விலிருந்து ஏன் பிரிந்தார்கள்? பெரியார் மணியம்மையாரை தம் 70 ஆம் அகவையில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதுதான் தி.மு.. பிரிந்ததற்கான முதன்மைக் காரணம்! இக்காரணத்தைத் தான் தி.மு..வினர் வெளியே சொன்னார்கள்.

கருணாநிதிக்கும், எம்.ஜி.ஆருக்கும் ஏற்பட்ட தனிநபர் பகையில் தி.மு..விலிருந்து அ.தி.மு.. உருவானது. .தி.மு..வுக்கு ஜெயலலிதா தலைமை உருவான பின் கருணாநிதிக்கும் அம்மையாருக்குமான தனிநபர் பகை அசிங்கமானது; அநாகரிகத்தின் உச்சத்தைத் தொட்டது. கருணாநிதிக்கும் வைகோவுக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பகையினால்தான் ம.தி.மு.. உருவானது. எந்தப் புதிய தத்துவத்திற்காகஇலட்சியத்திற்காக ம.தி.மு.. உருவானது? எதுவுமில்லை!

வைகோ மீது கருணாநிதி சாட்டிய குற்றச்சாட்டு சாதாரணமானதல்ல. “விடுதலைப்புலிகளோடு சேர்ந்து கொண்டு வைகோ என்னைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார்என்று கூறினார் கலைஞர். நடுவண் அரசின் உளவுத்துறை ஆதாரங்கள் இருக்கின்றன என்றார். கருணாநிதி இந்தக் கொலைக் குற்றச்சாட்டை தமதுபிதாமகர்பெரியார் வழியைப் பின்பற்றித்தான் வைத்தார்.  திராவிடர் கழகத்தில் பிளவு உண்டானபோது அண்ணா தன்னைக் கொலை செய்யத் திட்டம் தீட்டுகிறார் என்று, தமது ஏட்டில் பெரியார் எழுதினார். அண்ணா, பெரியாரை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்தத் தந்தையின் பாணியைத்தான் தனையன் கருணாநிதி பின்பற்றினார்!

திராவிடக் கட்சி என்பது 1944-இல் பிறக்கும்போதே போலியாகப் பிறந்த கட்சி என்பதற்குதிராவிடர் கழகம்என்ற பெயரே சான்று! தமிழர்களுக்காக மட்டுமின்றி, தெலுங்கர்கன்னடர்மலையாளி ஆகியோருக்காகவும் தமிழ்நாட்டில் கட்சி தொடங்கியவர் பெரியார். தமிழர் என்று சொன்னால், தெலுங்கர்கன்னடர்மலையாளி ஆகியோர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், எனவேதான்திராவிடர்என்று சொல்கிறேன் என்றார் பெரியார்.

ஆனால், ஆந்திரகர்நாடககேரள மாநிலங்களிலுள்ள தெலுங்கர்கன்னடர்மலையாளிகள் தங்கள் மண்ணில் திராவிடர் கழகத்தை ஏற்கவில்லை. அந்த உண்மை தெரிந்த பின்னும் 1949இல் தி..விலிருந்து பிரிந்து தி.மு..வை உருவாக்கியபோது, அண்ணாவும் மற்ற தலைவர்களும் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய நான்கு மாநிலங்களையும் இந்தியாவிலிருந்து விடுதலை செய்வதற்காகப் புதிய கழகம் உருவாக்கப்படுகிறது என்றார்கள். எவ்வளவு பெரிய பொய்!

தி.மு..வுக்கு மற்ற மூன்று மாநிலங்களில் தமிழர்களைத் தவிர பிறரிடம் கிளைகள் இல்லை; அத்துடன் அம்மாநிலங்களில் தனிநாட்டுக் கோரிக்கை எவராலும் வைக்கப்படவில்லை. உண்மையான தனிநாட்டு விடுதலை வீரர்களாக இருந்தால்இப்படித் தொடர்பில்லாத மற்ற தேசிய இனங்களுக்கும் சேர்த்து விடுதலைக் கோரிக்கையை வைப்பார்களா? பிறக்கும்போதே போலித்தனம்! “நாங்கள் உண்மையான விடுதலை கோரவில்லைஎன்று தில்லி ஏகாதிபத்தியத்திற்கு உணர்த்தும் உத்தி!

தி..வும் தி.மு..வும் தமிழர்களுக்குச் செய்த துரோகங்களின் சிகரம் எது? “தமிழர்என்ற வரலாற்று வழிப்பட்ட நம் இனப்பெயரை நீக்கி நமக்குதிராவிடர்என்று புதிதாக ஒரு இனப்பெயரைச் சூட்டியதுதான் மன்னிக்க முடியாத துரோகம்! ஓர் இனத்தின் இயற்கையான பெயரை மாற்ற இவர்களுகளுக்கென்ன அதிகாரம் இருக்கிறது? அப்படித்தான் இவர்களுக்கென்ன வரலாற்று அறிவு இருந்தது? திராவிடம் என்பதற்கு சமற்கிருதச் சான்றுகளைத்தான் அண்ணா காட்டினார்.

அடுத்து, தமிழர் மானிடவியலைக் கற்காதஅரைகுறை தமிழ்ப் பண்டிதர் கால்டுவெல்திராவிடர்என்று கூறியதை சான்று காட்டினார்கள். “சாண் ஏறினால் முழம் சறுக்குபவர் கால்டுவெல்என்றார் பாவாணர். திராவிடர் என்பதில் பிராமணர் இல்லையா? “திராவிடஎன்பது ஆரியப் பிராமணர்கள் உருவாக்கிய சொல். வடக்கே இருந்து தெற்கே புலம் பெயர்ந்து சென்ற பிராமணர்களைக் குறிக்கப் பிராமணர்களால் உருவாக்கப்பட்ட சொல். இன்றைக்கும் பல பிராமண சங்கங்கள்திராவிடஅடையாளத்தோடு செயல்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டுபுதூரு திராவிட பிராமண சங்கம், சவுத் கனரா திராவிட பிராமண சங்கம் (http://www.skdbassociation.com).

கால்டுவெல்

கால்டுவெல்திராவிடஎன்ற சொல்லை மனுஸ்மிரிதி மற்றும் குமாரிலபட்டரின்தந்த்ர வார்த்திகாஆகிய சமற்கிருத நூல்களிலிருந்து எடுத்ததாகக் குறிப்பிடுகிறார் (திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்). சங்க இலக்கியம், காப்பிய இலக்கியம், பக்திக்கால இலக்கியம், சித்தர் இலக்கியம் எதிலும் தமிழில்திராவிடஎன்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.  தமிழர் இன அடையாளத்தை மறைப்பதற்காகத் திட்டமிட்டு பெரியாரால் பரப்பப்பட்ட சொல் திராவிடம். “தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழ்ப் படிக்காதீர்கள்; ஆங்கிலத்தைப் படியுங்கள், வீட்டில் மனைவியிடம் வேலைக்காரியிடம் கூட ஆங்கிலத்திலேயே பேசிப் பழகுங்கள்என்று 1968 – 1969 இல் கூட திரும்பத் திரும்ப எழுதியவர், பேசியவர் பெரியார்.

பெரியாரின் தாய்மொழி கன்னடம் என்பதற்காக அவரைத் தமிழர்கள் அயலாராகக் கருதவில்லை. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்று வழியில் தமிழ்நாட்டில் குடியேறி வாழ்ந்து வரும் தெலுங்குகன்னடம்சௌராட்டிரம்உருதுமராத்தி போன்ற மொழிகள் பேசும் அனைவரையும் சம உரிமையுள்ள மண்ணின் மக்களாகவே நாங்கள் வரையறுக்கிறோம். ஆனால், பெரியாருக்குத்தான் தன் இனம் குறித்து ஏதோவொரு ஐயுறவு ஏற்பட்டுதமிழர்என்ற இனப்பெயரை நீக்கி, “திராவிடர்என்ற ஆரியப்பெயரைத் திணித்தார்.

யாதும் ஊரே, யாவரும் கேளிர்என்றும், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்என்றும் 2,500 ஆண்டுகளுக்கு மேல் மனித சமத்துவம் பேசி வரும் இனம்தமிழினம்! ஆரியத்தின் வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்துவரும் இனம்தமிழினம்! எங்கள் தாய்மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்றும், எங்கள் இனத்திற்கு நாகரிக வரலாறு இல்லை என்றும், எங்கள் இனத்தில் சரியான அறிவாளி யாருமே இல்லை என்றும் பேசி தமிழினத்தை இழிவுபடுத்தியதைத் தமிழர்கள் சகித்துக் கொள்ள வேண்டுமா?

தோழர் பெ. மணியரசன்

இனப்பெயர் நாமாகத் தேர்வுசெய்வதன்று. வரலாற்று வழியில்மரபு வழியில் இயற்கையாக உருவாவது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் நம் இனப்பெயர் தமிழர் தான். இன்றும் நம் தேசிய இனப்பெயர் தமிழர்தான். மரபு இனப்பெயரும் (Race) தேசிய இனப்பெயரும் (Nationality) ஒன்றாக இருப்பது உலகத்தில் சில இனங்களுக்கு மட்டுமே இருக்கிறது. அதில் மூத்த இனம் தமிழினம்! அந்தப் பெயரைதிராவிடர்என மாற்றிப் பிறந்த இனத்துக்குத் துரோகம் செய்யாதீர்கள்.

திராவிடச் சிந்தனைச் சிற்பிகளே, கருணாநிதி தலைமையை ஏற்றுக் கொண்டு, அவர் மகன் தலைமையை ஏற்றுக் கொண்டு, அவர் பேரன் தலைமையை ஏற்றுக் கொண்டு, அதன் பின் கலைஞரின் கொள்ளுப்பேரன் தலைமையை ஏற்றுக்கொள்வதுதான்திராவிட விசுவாசம்என்று கருத்தியல் உருவாக்கிஇனப்பற்றைகலைஞர் வாரிசுகள் பற்றுஎன்று கொச்சைப்படுத்திக் கொள்ளாதீர்கள்!

தோழர் பெ. மணியரசன், தலைவர், தமிழ் தேசிய பேரியக்கம், எழுதியதிராவிடம்தமிழர்களை சீரழித்தது போதும்!’ எனும் கட்டுரையின் சுருக்கம். (http://www.tamizhdesiyam.com/2019/05/blog-post_20.html)

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry