சற்றுமுன்

பிங்க் வாட்ஸ் அப் லிங்க் கிளிக் செய்தால் ஃபோன் ஹேக் செய்யப்படும்! போலீஸார் எச்சரிக்கை!

பிங்க் வாட்ஸ் அப் லிங்க் கிளிக் செய்தால் ஃபோன் ஹேக் செய்யப்படும்! போலீஸார் எச்சரிக்கை!

பிங்க் வாட்ஸ் “Pink WhatsApp” என்ற பெயரிலோ அல்லது வேறு ஏதேனும் பெயரிலோ ஆப்(App)களை பதிவிறக்கம் செய்யுமாறு  லிங்க்குகள் கிடைக்கப் பெற்றால் அவற்றை பயன்படுத்தவோ மற்றவர்களுக்கு பகிரவோ வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாகப் பேசியுள்ள சென்னை அடையாறு துணை ஆணையர் விக்ரமன், “சில நாட்களாகவே பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களில் பிங்க் வாட்ஸ்அப் என்ற ஒரு லிங்க் வைரலாக பரவி வருகிறது. அது வாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட் என சொல்லி பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த லிங்கை ஓப்பன் செய்து அதனை இன்ஸ்டால் செய்தால் புதிய அம்சங்களுடன் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தலாம் என்ற தகவலும் இருந்தது.

புது வாட்ஸ் அப் அம்சங்கள் கிடைக்கும் என பதிவிறக்கம் செய்தவர்களின் செல்போன்கள், நூதன வைரஸால் தாக்கப்ட்டு, செல்போனில் உள்ள டேட்டாக்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த லிங்கை தொட்டாலே உடனடியாக பதிவிறக்கம் ஆவதாக சைபர் தொழில்நுட்ப வல்லுனர்களும் எச்சரித்துள்ளனர். கூகுள் மற்றும் ஆப்பிள் தளங்களில் கிடைக்கும் அப்ளிகேஷன்களை தவிர்த்து வேறு எந்த ஒரு இன்ஸ்டால் செய்ய வேண்டாம்.

இந்த பிங்க் வாட்ஸப் அப்ளிகேஷன்கள் மூலம் செல்ஃபோனில் உள்ள ஃபோட்டோ, செய்திகள் என அனைத்து தரவுகளையும் சைபர் கிரிமினல்கள் திருடுவதாக கூறுகின்றனர். அதனால் கூகுள் பிளேஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் கிடைக்கும் அப்ளிகேஷன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிங்க் வாட்ஸ்அப் மூலம் உங்கள் தொலைபேசி ஹேக் (HACK) செய்யப்பட்டு தகவல்கள் அனைத்தும் திருடப்படக்கூடும் எனவும்அவர் எச்சரித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

CATEGORIES
error: Content is protected !!