பாஜக போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு! ஊர் எல்லையிலேயே தொண்டர்கள் கைது! கரூரில் போலீஸ் குவிப்பு!

0
68

பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்ததால் உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாவட்டத் தலைவர் வி.வி.செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தப்போது வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கை மீண்டும் உயர் நீதிமன்றம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி விலக வலியுறுத்தி கரூர் மாவட்ட பாஜக சார்பில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Also Read : கட்சியிலயே இல்லை, அலுவலக சாவியை எப்படி கேட்கிறீர்கள்? ஓபிஎஸ்சுக்கு கொட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தால் பாஜகவினரை கைது செய்வதற்காக கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காலை 6 மணி முதலே போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்களை அழைத்து செல்ல போலீஸ் வாகனங்களும் தயாராக நிறுத்தப்பட்டிருந்தன.

இதேபோல் பாஜக அலுவலகம் அமைந்துள்ள திண்டுக்கல் புறவழிச்சாலை அருகே அவர்கள் அலுவலகத்தில் இருந்து ஆர்ப்பாட்டம் நடத்த வெளியே சென்றால் அவர்களை கைது செய்ய போலீஸார் குவிக்கப்பட்டு, காவல் துறை வாகனங்கள் தயார் நிலையில் இருந்தன.

Also Read : ராகுல் யாத்திரைக்காக பண வசூல்! ஃபேஸ் புக்கில் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் சண்டை! ஜோதிமணிக்கு சவால்!

இந்த நிலையில் கட்சி அலுவலகம் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன், “அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் செந்தில்பாலாஜி பதவி விலகவேண்டும் என தெரிவித்தோம். நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்று இதே இடத்தில் போராட்டம் நடத்தியே தீருவோம் என்று அவர் கூறினார்.

கரூர், திருச்சி, அரியலூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணிக்காக அழைத்து வந்துள்ளனர். போராட்டத்திற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்களை போலீசார் வழிமறித்து கைது செய்துள்ளனர். இது கண்டிக்கதக்கது.” என்று கூறினார். அதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக கோரி பாஜகவினர் முழக்கங்களை எழுப்பினர்.

முன்னதாக கடந்த 10ம் தேதி பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் தலைமையிலான பா.ஜ.க நிர்வாகிகள், சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்துப் பேசினர். அப்போது ஊழல் புகாரில் சிக்கியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அதற்கு ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்றும் வலியுறுத்தினர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry