புதுச்சேரி மாநிலத்தில் 12 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலியார்பேட்டை தொகுதி வேட்பாளராக கலாம் சேவை மைய நிறுவனரும், வழக்கறிஞருமான சம்பத் அறிவிக்கப்பட்டுள்ளார்.
திமுக – காங்கிரஸ் இடையே சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் கடந்த வியாழக்கிழமை உடன்பாடு ஏற்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.வி.சுப்பிரமணியனும் கையெழுத்திட்டனர்.
இதன்படி, காங்கிரஸ் 15, திமுக 13, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்குத் தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டன. புதுச்சேரியில் திமுக – காங்கிரஸும் கிட்டத்தட்ட சம அளவில் தொகுதிகளைப் பிரித்துக்கொண்டுள்ளன. அதிக இடங்களில் எந்தக் கட்சி வெற்றிபெறுகிறதோ அந்தக் கட்சியின் ஆட்சி அமைப்பது என்கிற முடிவுடன் திமுக – காங்கிரஸ் தேர்லைச் சந்திக்கிறது.
இந்நிலையில், திமுக போட்டியிடும் 13 சட்டப் பேரவைத் தொகுதிகளில், 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பாகூர் தொகுதிக்கான வேட்பாளர் பிறகு அறிவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மத்தியில், புதுச்சேரியில் பாஜக–அதிமுக தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. கேட்ட இடங்கள் கிடைக்காததால் அதிமுகவினர் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் கொடுக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஆனால், கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக மற்றும் பாமக கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படாமல் உள்ளது.
பாஜக–அதிமுக இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பாக நடந்த பேச்ச்சுவார்த்தையில் தற்போதுவரை முடிவு எட்டப்படாததால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. கேட்ட இடங்கள் கிடைக்காததால் அதிமுகவினர் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக–அதிமுக இடையே இழுபறி ஏற்பட்டுள்ளநிலையில் புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், பாஸ்கர், ஹசானா ஆகிய 4 பேரும் சேலத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொண்டர்கள் இடையே தொய்வு ஏற்பட்டிருக்கிறது. என்.ஆர். காங்கிரஸில் வேட்பாளர்களை அடையாளம் காண்பதிலும் சிக்கல் நிலவுகிறது. போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களின் அதிருப்தி தேர்தலில் எதிரொலிக்கும். அதேபோல், அதிமுக–பாஜக இடையே நிலவும் சிக்கலும், அதிமுக தொண்டர்களை ஆதங்கப்பட வைத்துள்ளது. பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து தொகுதிகள் அடையாளம் காணப்பட்டாலும், தொண்டர்கள் எந்த அளவுக்கு களப்பணியாற்றுவார்கள் என்பது சந்தேகமே. இதுபோன்ற பிரச்சனைகள் திமுக–காங்கிரஸ் கூட்டணிக்கு சாதமாக மாறும் வாய்ப்பும் உள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry