இந்து கடவுளர்கள் அவமதிப்பு! முழக்கம் எழுப்பியவர்களை தெரியவில்லை என்கிறது போலீஸ்!

0
457

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மற்றும் இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து மதுரை காளவாசல் பகுதியில் கடந்த 29-ம் தேதி செஞ்சட்டை பேரணி நடத்தியது.

இதையொட்டி ஒற்றை தேசமாக உருவாக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்து மதுரையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் காளவாசல் பைபாஸ் சாலை பகுதியில் தொடங்கி பழங்காநத்தம் பகுதி வரையில் பேரணி நடைபெற்றது.

இதனை மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், நாகை திருவள்ளுவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் கட்சியினர், தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தொண்டர்கள், பெண்கள் பேரணியில் பங்கேற்றனர்.

இந்நிலையில், பேரணியில் இந்து மதக் கடவுள்களுக்கு எதிராக பேசியதாக வீடியோ ஆதாரங்களுடன் இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன் எஸ்.எஸ். காலணி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் திராவிடர் கழகம், விசிக, தமிழ் புலிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அடையாளம் தெரியாத 6-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செஞ்சட்டை பேரணியில், இந்து கடவுளர்கள், இந்து மத சடங்குககள், சாஸ்திர, சம்பிரதாயங்கள் மற்றும் வேண்டுதல்களை கொச்சைபப்படுத்தி திராவிடர் விடுதலை கழக நாமக்கல் மாவட்ட தலைவர் சாமிநாதன் கோஷம் எழுப்பியதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது.

ஆனாலும், பேரணிக்கு ஏற்பாடு செய்த மதுரை தொகுதி எம்.பி. சு. வெங்கடேசன் மீதோ, இந்து கடவுளர்கள் கொச்சைப்படுத்தி கோஷம் எழுப்பியவர்கள் மீதோ போலீஸார் வழக்குப் பதியாமல், அடையாளம் தெரியாத 6 பேர் என வழக்கு பதிந்துள்ளதன் மூலம், இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையே என்பது தெளிவாகிறது. திமுக ஆட்சியில் இந்து மதத்தை கொச்சைப்படுத்துபவர்களை கண்டும் காணாமல் இருப்பதன் மூலம், இந்த ஆட்சி இந்துக்களுக்கு எதிரானதுதானோ என்ற சந்தேகத்தை மேலும் வலுவாக்குகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry