‘தளபதி’யைச் சீண்டும் தளபதி! மு.க. ஸ்டாலினை வம்புக்கிழுக்கும் விஜய்! 2026-ல் முதலமைச்சர் என ரசிகர்கள் போஸ்டர்!

0
146

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவர்களது ரசிகர்கள் அவ்வப்போது விதவிதமான போஸ்டர்களை ஒட்டி திக்குமுக்காட வைப்பார்கள். அந்த வகையில் மதுரையில் அவரது ரசிகர்கள் தற்போது ஒட்டியுள்ள போஸ்டர், திமுகவினரைக் கொந்தளிக்க வைத்துள்ளது.

மதுரை மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், “முடிவு எடுத்தால் முதல்வர்தான். 2021-ல் தளபதி, 2026-ல்-தளபதி என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 2021-ல் தளபதி என்ற வாசகத்தில் முதல்வர் ஸ்டாலினைக் குறிப்பிடும் வகையில் கருப்பு, சிவப்பு எழுத்துகளும், 2026-ல் தளபதி என்பதை சிவப்பு கலரிலும் எழுத்துகளை வித்தியாசப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் 2026-ல் முதல்வர் வேட்பாளர் என நடிகர் விஜய் படத்தையும், 2026-ல் தளபதி மக்கள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் என பிரசாந்த் கிஷோர் படத்தையும் வெளியிட்டு விஜய் ரசிகர்கள் அதகளப்படுத்தியுள்ளனர். முதலமைச்சர் துபாய் சென்றுள்ள நிலையில், இந்தப் போஸ்டர் திமுக-வினரை கொந்தளிக்க வைத்துள்ளது. இதுபோன்று விஜய் ரசிகர்கள் விதவிதமாக போஸ்டர்களை ஒட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

2013-ம் ஆண்டு, அரசியல் ரீதியாக விஜய் மக்கள் இயக்கம் செயல்பட ஆரம்பித்தபோது, ‘ டைம் டூ லீட்’ என்கிற டேக் லைனுடன் ‘தலைவா’ பட வெளியீட்டிற்கான அறிவிப்பு வந்தது. இது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. தலைவா படம் வெளியிடப்படும் திரையரங்குகளுக்கு படம் வெளியிடக்கூடாது என மிரட்டல்கள் வர ஆரம்பித்தன.

இந்தப் பிரச்சனையை அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் எடுத்துச் செல்ல படக்குழு திட்டமிட்டது. ஆனால், ஜெயலலிதா அவர்களை சந்திக்க வாய்ப்பு கொடுக்கவில்லை. இறுதியாக பல நாட்கள் கழித்து ‘டைம் டூ லீட்’ என்கிற வாசகம் நீக்கப்பட்ட பிறகே படம் வெளியிடப்பட்டது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &