IPL 2022 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
15-வது ஐபிஎல் தொடர் வரும் 26-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தோனி ஒரு வீரராக அணியில் நீடிப்பார் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
📑 Official Statement 📑#WhistlePodu #Yellove 💛🦁 @msdhoni @imjadeja
— Chennai Super Kings (@ChennaiIPL) March 24, 2022
2008-ம் ஆண்டு முதல் மகேந்திரசிங் தோனி சிஎஸ்கேவுக்கு கேப்டனாக செயல்பட்டு வந்தார். தோனி மொத்தம் 220 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று 4746 ரன்களை குவித்துள்ளார். குறிப்பாக, கடைசி ஓவர்களில் மட்டும் 50 சிக்ஸர்களை அடித்து, கடைசி ஓவரில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் தோனி முதலிடத்தல் இருக்கிறார்.
ஐபிஎல் போட்டிகள் தொடங்கியதில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடி வரும் தோனி, கேப்டனாக இதுவரையில் முத்திரை பதித்து வந்தார். சென்னை அணிக்கு தோனி இதுவரையில் நான்கு கோப்பைகளை வென்று கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தோனி இந்த சீசன் மட்டுமின்றி அடுத்தடுத்த சீஸன்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸை தோனி தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்துவார்” என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் கூறியுள்ளது. தலைமை மாற்றத்துக்கு தான் விரும்புவதாகவும், ஜடேஜா அணிக்கு தலைமை ஏற்க தயாராக இருப்பதாகவும் வியாழக்கிழமை நடந்த அணி கூட்டத்தில் தோனி விருப்பம் தெரிவித்ததாக சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &