அதிமுக மூன்றாம் கட்ட அமைப்பு தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிவித்துள்ளனர்.
இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்ச் மாதம் 27-ம் தேதி அதிமுக மூன்றாம் கட்ட அமைப்பு தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக ராணிப்பேட்டை, வேலூர் மாநகர், வேலூர் புறநகர், திருப்பத்தூர், திருவண்ணாமலை வடக்கு, நாமக்கல், ஈரோடு புறநகர் கிழக்கு மற்றும் புறநகர் மேற்கு, திருப்பூர் மாவட்டம் உட்பட 25 மாவட்டங்களில் ஒன்றியகழக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், பேருராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான கழக அமைப்பு தேர்தல்கள் வரும் 27-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறும்.
தேர்தலில் போட்டியிட விரும்பும் கழக உறுப்பினர்கள் தலைமை கழகம் அறிவித்துள்ள விண்ணப்ப படிவத்திற்கான கட்டணங்களை செலுத்தி விண்ணப்ப படிவம் பெற்று கொள்ள வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை சம்மந்தபட்ட மாவட்டங்களுக்கு அறிவிக்கப்படும். தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் ஆணையாளர்களிடம் அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர். தேர்தல் விண்ணப்ப கட்டணம் ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry