கிழக்கிந்திய கம்பெனியின் அடுத்த வெர்ஷன்தான் அமேசான்! ஆர்.எஸ்.எஸ். வார இதழ் ‘பஞ்ச்ஜன்யா’ பகிரங்க குற்றச்சாட்டு!

0
24

அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரும் மின்னணு வணிக நிறுவனமானஅமேசான்நிறுவனத்தை,  கிழக்கிந்திய கம்பெனியின் வெர்ஷன் 2.0’, மதம் மாற்றுவதுதான் அதன் நோக்கம் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சாடியுள்ளது.

ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் கடந்த 1948 முதல்பஞ்ச்ஜன்யாஎன்ற இந்தி மொழி வார இதழை வெளியிட்டு வருகிறது. இந்த இதழில், மின்னணு வணிக நிறுவனமானஅமேசான்நிறுவனத்தைகிழக்கிந்திய கம்பெனியின் வெர்ஷன் 2.0’ எனக் குறிப்பிட்டு பஞ்சஜன்யா கவர் ஸ்டோரி ஒன்றை வெளியிட்டுள்ளது

“East India Company 2.0” என்ற தலைப்பிலான அந்தக் கட்டுரையில், “இந்தியச் சந்தையை முழுமையாக கபளீகரம் செய்ய அமேஸான் விரும்புகிறது. இதை செய்து முடிப்பதற்காக, அரசியல், பொருளாதாரத்தில் நுழைந்து பிறகு தனி மனித உரிமையை பறிக்கும் செயலை அமேஸான் செய்யத் தொடங்கிவிட்டது. அதேபோல், போலி நிறுவனங்களைத் தொடங்கி, அதன் பெயரில் இணைய தளங்களை தொடங்கி, அதன் மூலம், இந்திய மின்னணு சந்தையை முழுமையாக கைப்பற்றவும், அவர்களுக்கு சாதகமாக கொள்கைகளை உருவாக்க அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுப்பது போன்றவற்றிலும் அமேஸன் ஈடுபடுகிறது.

சிறு வணிகர்களுக்கான விற்பனை வாய்ப்பை விஸ்தரிப்பதாக உறுதி அளித்தே அமேஸான் இந்தியாவில் முதலீடு செய்தது. ஆனால், அதைச் செய்யாமல், தங்களது சொந்த நிறுவனம் மூலமாகவே சிறு வணிகத்தையும் அந்நிறுவனம் செய்கிறது. ஒப்பீட்டளவில், கிழக்கிந்திய கம்பெனி முதலில் இந்திய கலாச்சாரத்தை சிதைத்தது, பின்னர் மதம் மாற்றியது. அதேபோன்று, இந்திய கலாச்சாரத்தை தாக்கும் அமேஸான், மதம் மாற்றுவதை ஊக்கப்படுத்துகிறது. கிறித்துவத்தை பரப்புவதாக அமேசான் மீது ஏற்கனவே புகார் உள்ளது. இரண்டு கிறித்தவ தன்னார்வ நிறுவனங்களுக்கு அமேஸான் நிதி அளிப்பதை முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டும்.

Also Read : அமேஸான் நிறுவனம் மீது பகீர் குற்றச்சாட்டு! இந்தியாவில் மதமாற்றத்துக்கு உதவுவதாக புகார்! சட்டத்துக்குப் புறம்பாக கிறித்துவ மிஷனரிகளுக்கு மட்டும் நிதியுதவி!

பிரைம் வீடியோ மூலமாக ஹிந்து மதத்தின் மதிப்புகளை அமேஸான் குலைக்கிறது. இந்திய கலாச்சாரத்துக்கு எதிரான வீடியோக்களை பிரைம் வீடியோ வெளியிடுகிறது. பிரைம் வீடியோவில், ஹிந்து எதிர்ப்புக் கருத்துகளை உள்ளடக்கிய, இந்து விரோத கொள்கைகளைக் கொண்ட Tandav மற்றும் Paatal Lok சீரிஸ்களை ஒளிபரப்பிவிட்டு, பின்னர் அந்நிறுவனம் மன்னிப்பு கேட்டது. இந்து தெய்வங்களை கேலி செய்யும் விதமாக அமேஸான் வீடியோக்களை ஒளிபரப்புவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்” என்று பஞ்ச்ஜன்யா இதழின் கட்டுரை விவரிக்கிறது.

பஞ்சஜன்யா இதழின் ஆசிரியர் ஹிதேஷ் ஷங்கர், உள்நாட்டு மக்கள் இந்த நிறுவனத்தை ஏன் தங்களது தொழில் மற்றும் பொருளாதார சுதந்திரத்திற்கான அச்சுறுத்தலாக கருதுகின்றார்?” என்பது மாதிரியான தலைப்பில், இந்த வாரத்துக்கான இதழின் அட்டைப் படத்தை பகிர்ந்துள்ளார்

இந்த மாத தொடக்கத்தில் இன்போசிஸ் குறித்தும் பஞ்சஜன்யா வார இதழ் விமர்சித்திருந்ததுபெங்களூருவைச் சேர்ந்த பெரிய ஐடி நிறுவனமான இன்போசிஸ் வேண்டுமென்றே இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சித்திருக்கலாம், மேலும் அது நக்சல்கள், இடதுசாரிகள் மற்றும் சின்ன சின்ன கும்பலுக்கு உதவி செய்வதாக பஞ்சஜன்யா குற்றம்சாட்டியுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry