கொலை வழக்கில் கைது செய்யப்படுகிறார் திமுக எம்.பி.? சட்டப் பாதுகாப்பு இல்லை என்பதால் ராஜினாமா செய்ய அழுத்தம்! 

0
12

முந்திரி தொழிற்சாலையில் தொழிலாளி மர்ம மரணம் அடைந்த வழக்கில், கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்பதால், அவரை ராஜினாமா செய்யுமாறு கட்சித் தலைமை கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பணிக்கன்குப்பத்தில், கடலூர் மக்களவைத் தொகுதி எம்.பி. டி.ஆர்.வி.எஸ்.ரமேஷின் முந்திரி தொழிற்சாலையில், தொழிலாளி கோவிந்தராஜ்(60) என்பவர் மர்மான முறையில் கடந்த 19-ஆம் தேதி ஆலையிலேயே உயிரிழந்தார். உடலில் காயங்கள் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று குற்றஞ்சாட்டிய உறவினர்களும், பா...வினரும் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி காடாம்புலியூர் காவல் நிலையம் எதிரே சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து, சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்த போலீஸார், வழக்கில், தொழிற்சாலை உரிமையாளர் டி.ஆர்.வி. எஸ்.ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜன், கந்தவேலு, அல்லாபிச்சை, வினோத் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் உள்ளிட்டோரது பெயர்களை சேர்த்தனர். பின்னர் இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள ஆய்வாளர் தீபா மீது ஊழல் புகார் இருப்பதால், நேர்மையான அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று பா... நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி இருந்தார். கண்காணிப்பாளரின் மேற்பார்வையில் விசாரணை நடக்க வேண்டும். உயர்நீதிமன்ற ஒப்புதலுடன் இரு அதிகாரிகளும் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் கோவிந்தராஜின் மரணம், கொலை வழக்காகத்தான் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது என்பதையும், திமுக எம்.பி.ரமேஷை கைது செய்வதற்கான அனைத்து ஆதாரங்களும் இருப்பதாகவும் கடலூர் மாவட்ட காவல்துறை அனுப்பி வைத்த ரிப்போர்ட்டை, முதலமைச்சர் மு..ஸ்டாலினின் கவனத்துக்கு உயர் அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர். ஆட்சிக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என்பதால், ரமேஷ் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வதுதான் சரியாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, எம்.பி. பதவியை ராஜினாமா செய்யுமாறு ரமேஷுக்கு கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணையை எதிர்கொள்ளும் வகையிலும், விசாரணை வெளிப்படையாக நடக்க வேண்டும் என்பதாலும் அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மு..ஸ்டாலின் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

மரணமடைந்த மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மீது தொழிற்சாலை தரப்பில் திருட்டு புகார் கூறப்படுகிறது. ஆனால், சில பாலியல் விவகாரங்களை கோவிந்தராஜ் தெரிந்து கொண்டதே அவர் கொல்லப்படக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவிந்தராஜன் குடும்பத்தினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இந்த வழக்கில் மிகுந்த அக்கறைகாட்டி வருகிறார். இதனால், அரசியல் ரீதியாகவும் திமுகவிற்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது. எனவே ரமேஷ் விரைவில் தனது எம்.பி., பதவியை ராஜினாமா செய்வார் எனவும், அவர் கைது செய்யப்படலாம் எனவும்  கூறப்படுகிறது

ரமேஷ் ராஜினாமா செய்யவில்லை என்றாலும், போலீஸார் அவரை கைது செய்ய முடியும். பொதுவாக, சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கைது செய்யப்படும்போது அது குறித்த தகவல் சம்பந்தப்பட்ட அவையின் தலைவர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பொருத்தவரை, நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போதோ, தொடருக்கு 40 நாட்கள் முன்பாகவோ, பின்பாகவோ சிவில் வழக்குகளில் கைது செய்ய முடியாது. ஆனால், கிரிமினல் வழக்குகளுக்கு இந்த சலுகை பொருந்தாது.

கிரிமினல் குற்றம்சாட்டப்பட்ட எம்.பி.யோ, மத்திய அமைச்சர்களையோ கைது செய்வதில் எந்தத் தடையும் இல்லை. கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்ட யாராக இருந்தாலும் மாநில காவல்துறையால் நிச்சயம் கைது செய்ய முடியும்என்று ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry