அ.ம.மு.க பிரிந்திருக்கக் கூடாது! அம்மா வழியில் கட்சியை வழிநடத்துவேன்! சசிகலா ஆடியோவால் சலசலப்பு!

0
18

தொண்டர்களை கட்சியில் இருந்து நீக்குவது மிகவும் தவறு என்றும், அதிமுக-வுடன் அமமுக-வை இணைக்க வேண்டும் என்றும் சசிகலா கூறியிருக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதி மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் பெரியராஜிடம் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. அதில், “ஒரு மரத்திற்கு வெளியே எப்படி காய், பலம், இலைகள் மட்டும் தெரிவது போல், கட்சி வளர வேர்கள் போல் இருக்கும் தொண்டர்களை, மரத்தின் உச்சிக்கு மேல் உட்கார்ந்து கொண்டு நீக்குவது மிகவும் தவறு.

எத்தனையோ தொண்டர்கள் தியாகம் செய்துதான் இந்த அதிமுக கட்சி மாபெரும் சக்தியாக இருக்கு. இதுல வந்து தொண்டர்களை அவ்வபோது நீக்கினால் அது எவ்வளவு பெரிய தவறு என்று ஒருகட்டத்தில் அவங்களுக்கு புரியும். இந்த மாதிரி செய்ய செய்யக்கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம். நிச்சையமாக நான் வருவேன். அம்மா எப்படி கட்சியை வழிநடத்தினார்களே அதேபோல் நானும் வழிநடத்துவேன். அம்மா ஆட்சியை மீண்டும் கொண்டு வரவேண்டும், ஏழை எளிய மக்களுக்கு அம்மா என்ன செய்தார்களே அதை செய்யணும் என்பது என்னுடைய ஆசை. தொண்டர்களின் ஆதரவோடும் மக்களின் ஆதரவோடும் இதை செய்வேன்என சசிகலா பேசியுள்ளார்

பொன்னமராவதியை சேர்ந்த அ.தி.மு.க தொண்டர் பாரதிராஜாவுடன் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் சாதனைகளை கூறவில்லை. அதிமுக விளம்பரங்களில் ஜெயலலிதாவின் முகத்தையே பார்க்க முடியவில்லை. அதனை நினைத்து நான் மிகவும் வேதனைப்பட்டேன். தேர்தல் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம். ..மு.க பிரிந்திருக்க கூடாது. எல்லோரும் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். ஆட்சியை இவர்களே தூக்கி கொடுத்தது போல் தெரிகிறது. ஜெயலலிதா இருந்த போது நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தோம். எவ்வளவு பெரிய கட்சியை இன்றைக்கு 4,5 பேரின் கட்சியாக மாற்றியுள்ளனர். அதனை நிச்சயம் மாற்றிக்காட்ட வேண்டும் என கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry