சவுக்கு சங்கர் திடீர் கைது! போலீஸ் வாகனம் மீது மோதிய கார்! மயிரிழையில் உயிர் தப்பிய சவுக்கு சங்கர், காவலர்கள்!

0
156
Savukku Shankar arrested, suffers minor injuries in road accident after arrest. | File Image

சவுக்கு மீடியா சி.இ.ஓ.வும், பிரபல யூ டியூபருமான சவுக்கு சங்கர் சில தினங்களுக்கு முன் ரெட் பிக்ஸ் யூ டியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில் காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் பற்றியும் அவதூறான கருத்தை சவுக்கு சங்கர் தெரிவித்தாக கூறப்படுகிறது.

இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் பணி நிமித்தமாக சவுக்கு சங்கர் தேனியில் தங்கியிருப்பதாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேனி சென்ற சைபர் கிரைம் போலீசார், அங்கு தங்கி இருந்த சவுக்கு சங்கரை இன்று அதிகாலையில் கைது செய்தனர்.

சவுக்கு சங்கரை தேனியில் இருந்து கோவை சைபர் கிரைம் போலீஸ் அலுவலகத்திற்கு போலஸ் வாகனத்தில் அழைத்து வந்தனர். தேனியில் இருந்து கோவை அழைத்து வரும் வழியில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் காவல்துறை வாகனம் மீது கார் மோதியதாக கூறப்படுகிறது. இதில் காவலர்கள், சவுக்கு சங்கர் என அனைவருக்குமே லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

Savukku Shankar arrested; meets with accident while being taken to Coimbatore in police vehicle

இதனையடுத்து சவுக்கு சங்கருக்கு தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து சவுக்கு சங்கரை போலீஸார் மாற்று வாகனத்தில் கோவை அழைத்துச் சென்றனர். ரகசிய இடத்தில் வைத்து கோவை சைபர் கிரைம் போலீஸார் சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று பிற்பகலுக்குப் பிறகு சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Also Read : வெப்ப அலைக்கு நடுவே மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு! விருதுநகர் ஆட்சியர் உத்தரவால் கடும் சர்ச்சை! உடனடியாக ரத்து செய்ய ஐபெட்டோ வலியுறுத்தல்!

இதனிடையே, பத்திரிகை சுதந்திரம் பற்றி பேசும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அரசின் மீது விமர்சனம் வைப்போரின் குரல் வளையை நெரிக்கும் செயலில் ஈடுபடுவதாக சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சவுக்கு சங்கர் கைதைக் கண்டித்தும் பலரும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை மாநகர காவல் துறையினர் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்த விபரங்களை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி சவுக்கு சங்கர் மீது பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், ஒரு பெண்ணின் நாகரீகத்தை அவமதிக்கும் வகையில் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், சமூக வலைதளங்களில் ஆபாசமான விஷயங்களை வெளியிடுதல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry