நான் இருக்கும்வரை பரந்தூரில் விமான நிலையம் அமையாது! சீமான் திட்டவட்டம்!

0
51

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் கிராம மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.

பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், இரண்டாவது ஏர்போர்ட் இந்த இடத்தில் அமைவதற்கு திராவிட முன்னேற்றக் கழக அரசு தான் காரணம். அனைத்து விமானத்தையும் அரசு விற்று வருகிறது.

அதானி துறைமுகத்தை கட்டுவது போல், ஏர்போர்ட்டைக் கூட கட்டலாம். இதை நேரடியாக அதானி கட்டினால் நாம் சண்டை போடுவோம், அதனால் அரசு கட்டி அவரிடம் கொடுக்கப் போகிறது. சென்னை விமான நிலையம் சரி இல்லை என்று யாராவது குறை கூறினார்களா. உலகத்திலேயே மிகப்பெரிய விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்து சென்றுள்ளது.

Also Read : விளை நிலங்களை கையகப்படுத்தாமல் இருக்க முடியாது! அமைச்சர் எ.வ. வேலு திட்டவட்டம்!

அப்படி இருக்கும் பட்சத்தில்  ஏன் இந்த விமான நிலையம். ஏர்போர்ட் எங்கு வேண்டும் என்றாலும் கட்டலாம், எந்தக் கொம்பாதி கொம்பனும் விவசாய நிலங்களை உருவாக்க முடியாது. ஒரு விவசாய நிலம் உருவாக வேண்டுமென்றால் பல தலைமுறையில் வேர்வையும் ரத்தமும் சிந்தி இருக்க வேண்டும்.

அரசு ஓய்வூதியம் கொடுக்க காசு இல்லை. ஆனால் விமான நிலையம் கட்ட காசு உள்ளது. 2028-க்குள் விமான நிலையம் கட்டவிலை என்றால் அரசு பொருளாதாரத்தில்  பின்னோக்கி சென்று விட்டது என கூறும் அரசு, 2035 க்குள் நீர் பற்றாக்குறை ஏற்படுமே அதற்கு அரசு என்ன திட்டம் வைத்துள்ளது? நான் இருக்கும் வரை பரந்தூரில் விமான நிலையம் வராது” இவ்வாறு அவர் பேசினார்,

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கிட்டத்தட்ட 5 ஆயிரம் ஏக்கர், பல கிராமங்கள், பல்லாயிரக்கணக்கான விளை நிலங்களை காலி செய்துவிட்டனர். இதில் 40-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள், குட்டைகள் அதாவது 2605 சதுப்பு நிலப்பகுதி நீர்பிடிப்புப் பகுதிகள். அதுபோக 985 நீர்நிலைகள், இவையெல்லாம் காலி செய்துவிட்டு ஒரு ஏர்போர்ட் கட்டுவதை வளர்ச்சி என்று கூறுகின்றனர்.

இதில் அமைச்சர் கூறுவது, 2030-35-இல் 10 கோடி மக்கள் பயணிக்கிற அளவுக்கு வசதிகள் வந்துவிடும் என்று சொல்கிறார். 2022-ம் ஆண்டில் தொடங்கி 2028-க்குள் இதை முடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், 2030-35 வாழுகின்ற மக்களின் பயணத் தேவையை நிறைவு செய்ய முடியாது என்று கூறுகிறார்.

இவ்வளவு தொலைநோக்காக சிந்திக்கின்ற உங்களிடம், அப்போது வாழுகின்ற மக்களின் குடிநீர் தேவை, உணவுத் தேவையை நிறைவேற்ற ஏதாவது தொலைநோக்கான திட்டங்கள் இருக்கிறதா? ஒவ்வொரு முறையும் சென்னை வெள்ளச் சேதத்தை எதிர்கொள்கிறது. கழிவுநீர், மழைநீர் தேக்கமின்றி வழிந்தோட ஏதாவது திட்டம் உள்ளதா? தலைநகரிலேயே இன்னும் பாதை சரியாக போடவில்லை.

Also Read : காங்கிரசுக்கு முழுக்குபோட்ட குலாம் நபி ஆசாத்! ராகுல் காந்தியால் காங்கிரஸ் சிதைந்துவிட்டதாக வேதனை!

இப்போது இருக்கின்ற ஏர்போர்டிலேயே நூறு முறைக்கும் மேலாக கண்ணாடி இடிந்து விழுந்துள்ளது. அதை சரி செய்யாமல், புதிதாக ஏர்போர்ட் கட்டுகிறீர்கள். இதற்கு பெங்களூர், ஹைதராபாத்தை உதாரணமாக கூறுகிறீர்கள். புதிய விமான நிலையத்தால், அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள அடித்தட்டு மக்கள் வளர்ச்சியைடந்துள்ளனர் என்று சொல்ல முடியுமா? விளைநிலங்களின் வளங்களே இந்த நாட்டில் மிக குறைவாக இருக்கின்றபோது சாலை அமைப்பது, இதுபோல விமான நிலையம் கட்டுவது, இதற்காக பல்லாயிரக்கணக்கான விளை நிலங்களை பறிக்கிறீர்கள்” என்று அவர் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry