வெப் சீரிஸ் டைட்டில் அறிவிப்பு! அதிரடி வேடத்தில் விஜய் சேதுபதி! த்ரில்லர் கதைக்களம்!

0
119

சமந்தா நடித்த ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் இயக்குநர்களான ராஜ் & டிகே(Raj and DK) இயக்கத்தில் ஷாஹித் கபூர், விஜய் சேதுபதி நடிக்கும் OTT சீரிஸுக்கான பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடருக்கு ‘ஃபர்ஜி’ (Farzi) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கேங்ஸ்டர் மற்றும் கறுப்புப் பணத்தை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஷாஹித் கபூர் தலைமையிலான கேங்ஸ்டர் கும்பலை வேட்டையாடும் போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

“தனது தாத்தாவின் அச்சகத்தில் பணிபுரியும் ஷாஹித் கபூர், ஒரு குற்ற சம்பவத்தில் ஈடுபடுகிறார். அந்த குற்றம் அவரை நிழல் உலகிற்கு அழைத்து செல்கிறது. போலீஸ் அதிகாரி விஜய் சேதுபதி இதை எவ்வாறு கண்டுபிடிக்கிறார், அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன என்பதை விறுவிறுப்பாக சொல்லும் த்ரில்லர் சீரிஸாக FARZI இருக்கும். இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் ராஷிகண்ணா, ரெஜினா, கே.கே.மேனன், அமோல் பலேகர் உள்பட பலர் நடிக்கின்றனர். இது அமேசான் ப்ரைம் வீடியோவில் விரைவில் வெளியாகிறது. ராஜ் மற்றும் டிகே உடன் பணிபுரிவது பற்றி மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஷாஹித் கபூர், தி ஃபேமிலி மேனின் இரண்டு சீசன்களையும் பார்த்த பிறகு, அந்த இயக்குநர்கள் மூலம் வெப் சீரிஸில் அறிமுகமாக ஒப்புக்கொண்டதாகக் கூறினார். கத்ரீனா கைஃப் உடன் இணைந்து ‘மெர்ரி கிறிஸ்மஸ்’ என்ற ஹிந்திப் படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry