
காகம் நம் முன்னோர்கள் என்று சொல்லப்படுகிறது. காகங்கள் என்றாலே இந்து மதத்தில் ஒரு போற்றுதலுக்குரிய ஒரு பறவையாகும். எந்தப் பறவைக்கும் படையலிட மாட்டார்கள். ஆனால், காகத்திற்கு படையலிடுவார்கள். அப்படிப் போற்றப்படும் காகம் வீட்டிற்கு வருதலால் என்ன பயன்? அது எந்த திசையில் இருந்தால் என்ன நடக்கும்? என்பதை பார்க்கலாம்.
நம் வீட்டிற்கு ஒரு விலங்கு அல்லது பறவை வருவது சகுணத்தை குறிப்பதாகும். அது நல்லவையாகவும், சிலது கெட்டவையாகவும் இருக்கலாம். அப்படித்தான் பலரது வீட்டிற்கு காகம் வருவது வாடிக்கையாக இருக்கும். இது நல்லதா கெட்டதா என பலரும் யோசித்துக் கொண்டிருப்பீர்கள்.
Also Read : நெற்றியில் குங்குமம் இடுவதால் இத்தனை பயன்களா? Medicinal benefits of Kumkum!
பொதுவாகவே, காகம் வீட்டிற்குள் நுழைந்தால், அது வாழ்க்கையில் கலவையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. பயணத்தின்போது உங்கள் வீட்டிற்குள் காகத்தின் ஒரு உரத்த அலறல் உங்கள் பயணம் வெற்றிகரமாக இருக்கும் என்று அர்த்தம். உங்கள் வாழ்க்கையில் சில பெரிய மாற்றங்கள் வருவதற்கான அறிகுறியாகும். இது உங்களுக்கு நல்லது.
ஒரு வேலை தொடர்பான நேர்காணலுக்கு அல்லது வேறு ஏதேனும் சுப காரியங்களுக்குச் செல்லும்போது வீட்டில் இருந்து மேற்கு நோக்கிக் காகங்கள் பறந்தால், நீங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். வீட்டில் காகங்கள் சந்தித்தால், விரைவில் உங்கள் வீட்டிலோ அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்களின் வீட்டிலோ திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
காலையில் உங்கள் வீட்டில், காகம் வடக்கு அல்லது கிழக்கு நோக்கிப் பறந்தால், அது உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வருவதற்கான அறிகுறியாகும். நெருங்கிய நண்பரை சந்திக்கலாம். எனவே, இது உங்களுக்கு ஒரு நல்ல அறிகுறி.

உங்கள் வீட்டில் நிறைய காகங்கள் கூடி சத்தமாகக் கத்தினால் அது எச்சரிக்கையாகும். இதனால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உண்மையில், இந்தக் காகங்கள் சில விரும்பத்தகாத நிகழ்வுகளைக் குறிக்கின்றன. உங்கள் குடும்பத்திற்கு ஒரு பெரிய நெருக்கடி அல்லது ஆபத்து வரப்போகிறது என்பதற்கான அறிகுறியாகவும் இது இருக்கலாம். உங்கள் வீட்டின் தெற்கு பக்கத்தில் காகம் அமர்ந்தால், அது எச்சரிக்கைக்கான அறிகுறியாகும். இது உங்கள் முன்னோர்கள் உங்கள் மீது கோபமாக இருப்பதற்கான அறிகுறியாகும்.
உங்கள் வீட்டில் சாப்பாடு, தண்ணீர் வைத்து அதை காகம் சாப்பிட்டால் உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறப் போகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பணம் சம்பாதிக்கலாம், ஒரு பெரிய வேலையில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். உண்மையில், காக்கை ரொட்டி சாப்பிடுவது உங்கள் முன்னோர்கள் உங்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கான அறிகுறியாகும். உங்கள் வீட்டின் கூரையிலோ அல்லது பால்கனியிலோ தண்ணீரை வைத்து காகங்கள் வந்து இந்த தண்ணீரை குடித்தால், நீங்கள் மிக விரைவில் பணக்காரர் ஆவீர்கள். கோடையில், பால்கனியில் அல்லது திறந்தவெளியில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க வேண்டும். இது மிகவும் போற்றத்தக்கது.
Also Read : பிரச்னைகளுக்குத் தீர்வு ஆன்மிகம் மட்டும்தானா? ஆன்மிகப் பாதையில் இருந்து விலகத் தூண்டுவது எது?
சில நம்பிக்கைகளில், காகங்கள் ஆவி உலகம் அல்லது முன்னோர்களிடமிருந்து வரும் தூதர்களாகக் கருதப்படுகின்றன. காகம் உங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்தாலோ அல்லது வழக்கத்திற்கு மாறான முறையில் நடந்து கொண்டாலோ (ஜன்னல்களைத் தட்டுவது அல்லது விடாப்பிடியாக அழைப்பது போன்றவை), அது முன்னோர்கள் அல்லது பிரிந்த அன்பர்களிடமிருந்து வந்த செய்தியாகக் கருதப்படலாம்.
காகமானது நம்முடைய தலையில் தட்டினால், நமக்கு வரக்கூடிய இன்னல்களை முன்கூட்டியே நமக்குத் தெரியப்படுத்துகிறது என்பதை குறிக்கின்றது. சிலர் சொல்லுவார்கள், காகம் தலையில் தட்டினால் உடனே மரணம் ஏற்பட்டு விடும் என்று! அப்படியெல்லாம் நினைத்து பயப்பட வேண்டாம். காகம் தலையில் தட்டும் பட்சத்தில் உங்களுக்கு ஏதோ பிரச்சினை காத்துக் கொண்டிருக்கின்றது. உங்களை நீங்களே உஷார் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக, முன்னோர்கள் ரூபத்தில் இருக்கும் காகம் நமக்கு வலியுறுத்துகிறது என்பது அர்த்தமாகும்.
Also Read : குலதெய்வத்தை வீட்டிற்குள் வரவழைக்கும் சக்தி வாய்ந்த முறை! குலதெய்வம் வீட்டில் தங்க சிம்ப்பிள் பரிகாரம்!
காகம் தலையில் தட்டி விட்டால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? வரப்போகின்ற ஆபத்தில் இருந்து எப்படித் தப்பிக்கப் போகின்றோம். உங்கள் வீட்டு குல வழக்கப்படி, குலதெய்வத்தை எப்படி வழிபாடு செய்வீர்களோ, அதன்படி உங்கள் வீட்டிலேயே குடும்பத்தோடு சேர்ந்து, வழிபாடு செய்து விடவேண்டும். உங்களுடைய முன்னோர்களுக்கு திதி கொடுப்பதில் ஏதேனும் குறை இருந்தால் கூட, அந்தக் குறையை காகம் ரூபத்தில் வந்து முன்னோர்கள் நமக்கு நினைவு படுத்துவார்கள். அமாவாசை தினத்தில், முன்னோர்களுக்கு வாழை இலை போட்டு, நிறைவான படைகளை போட்டு, மனதார, ஏதாவது குற்றம் இருந்தால் அதை மன்னிக்கும்படி வேண்டிக் கொள்வது மிகவும் நல்லது. உங்களால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவி செய்யுங்கள். குறிப்பாக மாற்றித்திறனாளிகளுக்கு.
வீட்டில் குலதெய்வ படத்திற்கு முன்பாக மண் அகல் தீபம், நல்லெண்ணெய் விட்டு, பஞ்சுத் திரி போட்டுத் தீபம் ஏற்றி வையுங்கள். தீபம் ஏற்றுவதை இத்தனை நாட்கள் என்றுதான் கணக்கு கிடையாது. தொடர்ந்து ஏற்றுவது குடும்பத்திற்கு மிகவும் நல்லது. நம் குடும்பத்திற்கும், நம் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது. குடும்பம் சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்ற வேண்டுதலை வைக்க வேண்டும். கோவிலுக்கு சென்று நவகிரஹ சன்னிதானத்தில் எள் தீபம் ஏற்றுவது சிறந்த பலனை கொடுக்கும்.
Disclaimer: This article is written purely based on ideological beliefs and solely from the perspective of religious faith.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry