இந்தியர்கள் விசா இன்றி இலங்கை செல்லலாம்! சுற்றுலா வருவாயைப் பெருக்க இலங்கை அரசு திட்டம்!

0
53
Sri Lanka approves visa-free entry for visitors from India, six other countries | Getty Image

இலங்கை நாட்டின் வருவாயின் பெரும்பங்கு சுற்றுலாத்துறையின் மூலமே கிடைக்கிறது. இந்த சூழலில், சுற்றுலாப் பயணிகளை மேலும் ஈர்க்கும் வண்ணம் புதிய அறிவிப்பை அந்நாட்டு சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தியா, சீனா, ரஷியா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு ஐந்து மாதங்களுக்கு விசா தேவையில்லை என்ற தீர்மானத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்த திட்டம் உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட உள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சாப்ரி கூறியுள்ளார்.

அமைச்சரவையின் இந்த முடிவால், சுற்றுலாப் பயணிகள் விசாவுக்காக செலவிடும் தொகையும், காத்திருக்க வேண்டிய நேரமும் மீதமாகும் என சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் நீண்ட நெடிய வரலாற்றுத் தொடர்பைக் கொண்டுள்ள தமிழகத்தில் இருந்து, அந்நாட்டுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து அண்மையில் தொடங்கப்பட்டு, பருவ நிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில், இலவச விசா அறிவிப்பால் இலங்கைக்கு செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry