அகதிகள் மீண்டும் இலங்கை செல்ல விரும்பினால் அனுப்பி வைக்க நடவடிக்கை! அமைச்சர் மஸ்தான் தகவல்!

0
104

வேலூர் அருகே மேல் மொணவூர் என்ற இடத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ 11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 220 வீடுகளின் கட்டுமான பணிகளை சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் முதற்கட்டமாக இலங்கை தமிழர்கள் ஏழாயிரம் குடும்பங்களுக்கு ரூ.317 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இலங்கைத் தமிழர்கள் மீண்டும் இலங்கைக்கு செல்ல விருப்பம் தெரிவித்தால், அவர்களை அனுப்பி வைக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும்.” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், முதல் கட்டமாக திண்டுக்கல்லில் கட்டப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கான குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் திறக்க உள்ளார். தமிழகம் நோக்கி வருகின்ற இலங்கை தமிழர்களை தாய் உள்ளத்தோடு பாதுகாப்பு அளித்து வருகிறோம். இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை பெற மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றும் அமைச்சர் மஸ்தான் தெரிவித்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry