இது தெரியாம மருந்து, மாத்திரை சாப்பிடாதீங்க! அதிர வைக்கும் ஸ்டீராய்டு உண்மைகள்! எச்சரிக்கை ரிப்போர்ட்!

0
2719

அலோபதி மருத்துவத்தில், ‘ஸ்டீராய்டுகள்மிகவும் முக்கியமானவை. `நாள்பட்ட நோய்களைக் குணமாக்குவதில் தொடங்கி, பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகளில் இதன் பங்கு முதன்மையானதுஎன்று மருத்துவர்கள் கொண்டாடுகின்றனர். அதென்ன ஸ்டீராய்டு? விரிவாகப் பார்க்கலாம்.

எங்க டாக்டர் மாதிரி கிடைக்காது, கைராசிக்காரர். அவரப் பார்த்து ஒரு ஊசி போட்டுக்கிட்டாலோ, ஒரு வேளை மாத்திரை சாப்பிட்டாலோ, பத்து நிமிடத்தில் நோய் சரியாகிடும்என பலர் கூறுவதை கேட்டிருப்போம். ஆஸ்துமா அதிகமாகி, திணறத் திணற ஆஸ்பத்திரிக்கு போகும் ஒரு நபர், ஸ்டீராய்டு கலந்த மருந்துகள் கொடுக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே சராசரி நிலைக்குத் திரும்புவார்.

இதுபோன்ற மருந்துகளைத் தரும் மருத்துவர்களிடம் எச்சரிக்கையாக இருத்தல் நலம். ஊசியாகவோ, மாத்திரையாகவோ ஸ்டீராய்டு கொடுத்தால் மட்டுமே கைமேல் பலன் கிடைக்கும். சாதாரண காய்ச்சல், சளி, வலிகளுக்குக் கூட ஸ்டீராய்டு எடுத்துக்கொண்டால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும்.   ஸ்டீராய்டு என்பது நோயைக் குணமாக்கும் மருந்தல்ல, மறைக்கும் மருந்து.

ஸ்டீராய்டு என்றால் என்ன?

தைராய்டு, இன்சுலின் போல நம் உடலில் சுரக்கும் ஒருவகை ஹார்மோன் தான் ஸ்டீராய்டு. நம் உடலில் உள்ள அட்ரினல் சுரப்பியில் ஸ்டீராய்டு சுரக்கும். அதேபோல், இனப்பெருக்க மண்டலத்தில் இருக்கும் விதைப்பை மற்றும் கருப்பைகளிலும் இது சுரக்கிறது. நமது உடலில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம் ஆகியவற்றின் அளவைச் சீராக பராமரிப்பதில் ஸ்டீராய்டு முக்கியப் பங்கு வகிக்கிறது. அதேபோல வீக்கத்தைக் குறைப்பதும்(Anti-inflammatory ) இதன் முக்கியப் பணியாகும். இது ரத்த அழுத்தம், சர்க்கரை அளவைப் பராமரிக்கவும் நமது உடலில் சுரக்கும் ஸ்டீராய்டு ஹார்மோன் உதவுகிறது. இந்த ஸ்டீராய்டு ஹார்மோனின் அளவு உடலில் குறையும்போதோ அல்லது அதிகமாகும்போதோ பல சிக்கல்கள் ஏற்படுகிறது.

அட்ரினல் சுரப்பியில் சுரக்கும் ஹார்மோனை கார்டிகோ ஸ்டீராய்டு(Cortico steroid) என்கிறோம். பொதுவாக நாம் ஸ்டீராய்டு என்று சொல்வது இந்த கார்டிகோ ஸ்டீராய்டு ஹார்மோனைதான். உடலில் சோடியம் அளவைப் பராமரிப்பதில் இந்த ஹார்மோன் முக்கியப் பங்கு வகிக்கிறது.

செயற்கை ஸ்டீராய்டு

ஸ்டீராய்டு மருந்துகளின் கண்டுபிடிப்பு அலோபதி மருத்துவத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகும். ஒரு நோயாளி தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும்போது, உடலில் சுரக்கும் ஸ்டீராய்டு போதுமானதா என்பதை ஆராய்ந்து, பற்றாக்குறை இருக்கும்பட்சத்தில் தேவையான ஸ்டீராய்டு மருந்து கொடுக்கப்படும்.இப்படி வெளியிருந்து கொடுக்கப்படும் ஸ்டீராய்ட்களில், `அனாபாலிக் ஸ்டீராய்டு‘ (Anabolic steroids), ‘கார்டிகோ ஸ்டீராய்டு‘ (Corticosteroid) என இரண்டு முக்கியமான வகைகள் உள்ளன.

முதல் வகை, பெரும்பாலும் விளையாட்டு வீரர்களால் உபயோகப்படுத்தப்படுவது. இது அவர்களுக்கு தசைகளுக்கு வலுவையும் ஆற்றலையும் தரக் கூடியது. மற்றொன்று, மருத்துவத் துறையில் பயன்படக்கூடியது. ஊசி, மாத்திரை, களிம்பு, இன்ஹேலர், ஸ்பிரே, திரவ மருந்து எனப் பல்வேறு வகைகளில் ஸ்டீராய்டு மருந்து பயன்பாட்டில் இருக்கிறது. வலி, வேதனை, வீக்கம் குறைக்க ஸ்டீராய்டு மருந்துகளே உதவுகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.

உறுப்பு மாற்று சிகிச்சைக்குப் பிறகு, இது நம் உறுப்பு இல்லை என்பதை உணர்ந்துகொண்டு புதிய உறுப்புக்கு எதிராக நம்முடைய நோய் எதிர்ப்புச் சக்தி தீவிரமாகச் செயல்படும். அந்த நேரத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியின் வேகத்தைத் தணித்து, ஒவ்வாமையைப் போக்கவும் ஸ்டீராய்டு மருந்துகள் தேவை.  அலர்ஜி, ஆஸ்துமா, மூட்டு வலி மற்றும் முடக்குவாதம் பாதிப்புள்ளவர்களுக்கும், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும், பல நரம்புப் பிரச்சினைகளுக்கும், விபத்தில் அடிபட்டவர்களுக்கும், தன்தடுப்பாற்றல் நோயுள்ளவர்களுக்கும் (Auto immune diseases) இவை உடனடி நிவாரணம் தருகின்றன.

சரும நோய்களுக்கும் நல்ல பலன் தரக்கூடியது. புற்றுநோயில் வீக்கத்தைக் குறைக்க, பரவாமல் தடுக்க மற்றும் வலியை நீக்க மற்ற மருந்துகளுடன் ஸ்டீராய்டு தேவை. ரத்தப்புற்று நோய்கள், ரத்த தட்டணு குறைபாடு நோய்கள், குழந்தைகளுக்கு வரும் புற்றுநோய்கள், சிறுநீரகப் பாதிப்புகள், குடல் அழற்சி நோய்கள், மூளையில் ஏற்படும் கட்டி ஆகியவற்றுக்கும் அறுவைசிகிச்சைக்கு முன் மூளையில் ஏற்படும் வீக்கத்தைக் கட்டுப்படுத்தவு ம் மூளையில் ஏற்படும் காசநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கும் ஸ்டீராய்டு தேவை.

மருத்துவர் பரிந்துரை அவசியம்

வாய்வழி உட்கொள்ளப்படும்மாத்திரைகளால்தான் அதிகமான பக்கவிளைவுகள் ஏற்படும். எனவே, அந்த பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கான மாத்திரைகளும் சேர்த்துக் கொடுக்கப்படுகின்றன. அதேநேரம், சிலர் தங்களுடைய உடல் பிரச்னைகளுக்கு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், தாங்களாகவே மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். இதுதான் அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடியது.

உதாரணத்துக்கு, ஆஸ்துமாவுக்கும், மூட்டு வலிக்கும்செட்மாத்திரை என்ற பெயரில் ஸ்டீராய்டு கலந்த மாத்திரைகளை மருந்துக் கடைகளில், டாக்டரின் பரிந்துரை இல்லாமலேயே வாங்கி உட்கொள்வது ஆபத்தானதுநோய்களின் பாதிப்புக்கு ஏற்ப ஸ்டீராய்டு மருந்துகளை எந்த அளவு எடுத்துக்கொள்ள வேண்டும், எத்தனை நாள்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. அதை மருத்துவர்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும். எனவே, எந்த ஓர் அவசரமாக இருந்தாலும், டாக்டரின் பரிந்துரை இல்லாமல் இவ்வகை மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.

பின்விளைவுகள் என்னென்ன?

ஸ்டீராய்டை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு சோடியம் அளவு அதிகமாகி உடலில் நீர் தங்கிவிடும். பொட்டாசியம் அளவு குறைந்து இதயத்தின் செயல்பாடுகள் பாதிக்கும். எடை கூடும், நோய்த்தொற்று எளிதில் ஏற்படும், முகத்தில் வீக்கம் ஏற்படும், எளிதில் எலும்பு முறிவு ஏற்படும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடும். கண்புரை வரும் வாய்ப்பு அதிகமாகும்.

விளையாட்டுத் துறனையில் ஸ்டீராய்டு மருந்தை உடல் கட்டமைப்புக்காகவும், ஊக்க மருந்தாகவும் சிலர் தவறாகப் பயன்படுத்திவிடுகிறார்கள். இது சட்ட விரோதமானது மட்டுமல்ல, உயிருக்கு ஆபத்தானதும் கூட. இதனால்,  உயர் ரத்த அழுத்தம், கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பது, கல்லீரல் சேதம், இதயம் செயலிழப்பு, ஹார்மோன் குளறுபடிகள், மன அழுத்தம், மூர்க்கத்தனம் உண்டாவது, விந்தணுக்கள் உற்பத்தி குறைவது, மலட்டுத்தன்மை போன்ற பல பிரச்னைகள் உண்டாகும்.

அடிக்கடி ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்துகிற மருத்துவர்களை அறிந்து நோயாளிகள் தவிர்க்க வேண்டும். தொடர்ச்சியாக மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறவர்கள் அது ஸ்டீராய்டா என்று தெரிந்துகொள்ள வேண்டும். தேவைப்பட்டால் வேறொரு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதிலும் தவறில்லை. ஸ்டீராய்டை ஒரு தற்காலிக மருந்தாகத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.

நோயின் தீவிரம் அதிகமாக இருக்கும் போது, அதைக் குறைக்க முதலில் ஸ்டீராய்டு கலந்த மருந்துகள் தந்து விட்டு, தீவிரம் குறைந்ததும் பிற மருந்துகளுக்கு மாறுவது தான் சரியான வழி. மருத்துவர்களிடம் செல்லும் போதே ஸ்டீராய்டு கலந்த மருந்துகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளலாம். அலோபதி மருந்துகளைப் பொடி செய்து சித்த மருந்து என்கிற பெயரில் கொடுக்கும் சித்த மருத்துவர்களும், வைத்தியர்களும் இருக்கிறார்கள். எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

ஸ்டீராய்டு மருந்துகளில் சில

டிஃப்ளஸகார்ட் (Deflazacort), கார்டிகோ ஸ்டீராய்டுகள் (corticosteroids) 

  • Prednisolone.
  • Betamethasone.
  • Dexamethasone.
  • Hydrocortisone.
  • Methylprednisolone.
  • Deflazacort.
  • Androstenediol
  • Boldenone
  • DHEA
  • Mesterolone
  • Metenolone acetate ester
  • Metenolone enanthate ester
  • Metribolone (methyltrienolone)
  • Nadzolone decanoate
  • Stanozol
  • Testosterone undecanoate
  • Testosterone enanthate
  • beclomethasone
  • budesonide
  • cortisone
  • dexamethasone
  • hydrocortisone
  • methylprednisolone
  • prednisolone
  • prednisone
  • triamcinolone
  • bethamethasone, (Celestone)
  • prednisone (Prednisone Intensol)
  • prednisolone (Orapred, Prelone)
  • triamcinolone (Aristospan Intra-Articular, Aristospan Intralesional, Kenalog)
  • methylprednisolone (Medrol, Depo-Medrol, Solu-Medrol)
  • KENALOG 10

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry