
தமிழகத்தில் பழங்கால மக்களிடம் காபி, டீ, குடிக்கும் பழக்கம் இல்லை. 17ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான், தேநீர் பருகும் பழக்கம் வந்தது. அதுவும் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களிடம் மட்டும்தான் இருந்ததே தவிர பரவலாக இல்லை. குறிப்பாக, ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஆட்சி செய்யத் துவங்கிய பிறகுதான் காபி, டீ பயிரிடும் முறை வந்தது.
நமது உணவு பழக்கத்தில் குளிர்பானம் என்றால் பழரசம், பானகம். சுடுபானம் என்றால் பனங்கருப்பட்டி, சுக்கு, மல்லி கலந்து கொதிக்க வைத்து, வடிகட்டி எடுக்கப்படும் சுக்குமல்லி கசாயம். இந்த பானங்கள் மட்டுமே, வழக்கத்தில் இருந்தது.
சுக்கு மல்லி காபி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பிரபலமான ஆரோக்கிய பானமாகும். குளிர் காலத்தில் இந்த பானம் அதிகமாகக் குடிக்கப்படுகிறது. சளி மற்றும் காய்ச்சலுக்கான வீட்டு வைத்தியமாக சுக்கு மல்லி காபி திகழ்கிறது. வறட்டு காப்பியும் (பால் சேர்க்காதது), சுக்குமல்லி காப்பியும் குளிர் மற்றும் மழைக் காலங்களில் பிரபலமானவை. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த ஆரோக்கிய பானம் இது. சுக்கு மல்லி காபி குடித்தால் தலைவலி, தலைபாரம், சளித்தொல்லைகள் உடனுக்கு உடன் நீங்கும்.
Also Read : வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜுஸ் குடிக்கலாமா..? இத்தனை நாளா இது தெரியாமலா இருந்தோம்?
மூலிகைகளுடன் மசாலா இணைந்தால், அது ஒரு சக்திவாய்ந்த கலவையை உருவாக்குகிறது. காரமான மணம் மற்றும் இனிப்பு சுவைக்கு பெயர் பெற்ற இந்த ஆரோக்கிய பானம், தொண்டை தொற்று மற்றும் காய்ச்சலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. சுக்கு மல்லி காபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.
ஜலதோஷம் மற்றும் காய்ச்சலுக்கு நல்லது :
ஜலதோஷத்திற்கு தீர்வு தரும். மழைக்காலத்தில் உண்டாகும் தொண்டை தொற்று மற்றும் காய்ச்சலுக்கு உடனடி நிவாரணம் அளிக்கக் கூடியது. இஞ்சியில் ஜிஞ்சரால் எனப்படும் அலர்ஜி எதிர்ப்பு பண்பு உள்ளது. இது உடலை சூடாக வைத்திருக்க உதவும். மழை மற்றும் குளிர்காலத்தில் சளி வராமல் தடுக்க சூடான சுக்கு மல்லி காபி குடிக்கலாம். இந்த மூலிகை காபி இருமல் மற்றும் சளிக்கு சிறந்த நிவாரணம் அளிக்கிறது.
எடை இழப்புக்கு உதவுகிறது :
ஜீரண சக்தியை மேம்படுத்துவதுடன் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை கரைக்கவும் உதவுகிறது. தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் சுக்கு மல்லி காபி பருக உடல் எடை குறைவதை கண்கூடாகக் காணலாம். தனியா எனப்படும் மல்லி பித்தத்திற்கு மிகவும் நல்லது. தலைசுற்றல், குமட்டல், வாந்தி வருவது போன்ற உணர்வுக்கு தனியா சிறந்த நிவாரணம் அளிக்கும். வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கக்கூடியது சுக்குக் காபி.
Also Read : பப்பாளி காயில் இவ்வளவு மருத்துவ குணங்களா? Incredible Health Benefits of Unripe Papaya!
மாதவிடாய் பிரச்னை :
ஆயுர்வேத மருத்துவத்தில் மல்லி மாதவிடாய் பிரச்னைகளை சரிசெய்யப் பயன்படுகிறது. மாதவிடாய் சுழற்சியை மட்டுமல்லாமல், ஹார்மோன்களின் சமநிலைக்கும் உதவுகிறது.
கர்ப்ப காலம் :
ஒரு கப் சுக்கு மல்லி கப்பி சாப்பிடுவது கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டல் மற்றும் காலை சுகவீனத்தை குணப்படுத்த உதவுகிறது. சுக்கு மல்லி காப்பியில் ரசாயன கலப்பில்லாத சுத்தமான தனியா, சுக்கு, மிளகு, ஏலக்காய், பெருஞ்சீரகம், கிராம்பு, சித்தரத்தை உள்ளிட்டவை கலக்கப்படுகிறது.
அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் :
வீங்கிய மூட்டுகள் மற்றும் விரல்களுக்கு உலர்ந்த இஞ்சி பொடியைக் கொண்டு சிகிச்சை அளிக்கலாம். காயங்கள் மற்றும் தசை வலிகள் கூட தணிக்கப்படும். சுக்கு மல்லி காபி குடிப்பது உடலில் ஏற்படும் அலர்ஜியை குறைக்க உதவுகிறது.
வயிற்றைக் குறைக்கும் :
அஜீரணத்திற்கு ஒரு தீர்வாக, உலர்ந்த இஞ்சி பொடி வயிற்று அசௌகரியத்தை போக்க உதவுகிறது. இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வயிற்றில் உள்ள செரிமான சாறுகளை நடுநிலையாக்க உதவுகிறது மற்றும் குடலில் உள்ள கூடுதல் வாயுவை நீக்குகிறது.
Also Read : 70 வயதுக்கு மேற்பட்டோருக்கான இலவச சுகாதார காப்பீடு திட்டம்! விண்ணப்பிப்பது எப்படி?
உயர் இரத்த அழுத்தம் :
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் காபி குடிப்பதை விட இந்த சுக்கு மல்லி காபி குடிப்பது சிறந்தது. இது இரத்த அழுத்தத்தை சரியாக பராமரிக்க உதவும். இரத்த உறைவு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
இரத்த சோகை :
இரத்த சோகை உள்ளவர்களுக்கு சுக்கு மல்லி காபி மிகவும் பலன் தரக்கூடியது. இதில் உள்ள இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம் இரத்த சோகை அபாயத்தை வெகுவாகக் குறைக்கிறது. பசி உணர்வை தூண்டும். வாயுத் தொல்லையை போக்கும். வயிற்றுப் பொருமல் பிரச்னைக்கு நல்லது.
யாரெல்லாம் எடுத்துக் கொள்ளக் கூடாது :
நெஞ்செரிச்சல் பிரச்னை உள்ளவர்கள் தினம் எடுத்துக் கொண்டால் நெஞ்செரிச்சல் அதிகமாகும். இதை வாரத்திற்கு இரண்டு நாட்கள் எடுத்துக் கொள்ளலாம். செரிமான கோளாறு இருப்பவர்கள் தினமும் பருகக்கூடாது. இரத்தப்போக்கு பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி அருந்தக் கூடாது அறுவை சிகிச்சைக்கு முன்பு இதை எடுத்துக் கொள்வது உசிதமல்ல.
Also Read : இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் 6 ஜுஸ்! இரத்த ஓட்டம் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்!
Summary : சுக்குமல்லி காபி / டீ, வாத, பித்த, கபங்களைச் சமநிலைப்படுத்தும். இதனால், அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் வெகுவாகக் குறையும். பசியின்மை, ருசியின்மைக்கு நிவாரணம் தரும். மந்த செரிமானத்தை விரைவுபடுத்தும். மூளைக்கும், மனதிற்கும் புத்துணர்வு அளிக்கவல்லது. மனஅழுத்தம் குறையும். மலச்சிக்கலைப் போக்கும்; வயிற்றில் தேங்கும் கழிவுகளை வெகுவாக வெளியேற்ற உதவும்.
நோய் எதிர்ப்பாற்றலைத் தரும்; குளிர், மழை, பனிக் காலங்களில் ஏற்படும் பருவநிலை மாற்ற நோய்களை வரவிடாமல் தடுக்கும். கடினமான உணவுவகைகளை, எளிதாகச் செரிப்பிக்க உதவும். தொண்டை கம்மல், தொண்டை கரகரப்பு உள்ளிட்ட தொண்டை நோய்களை, ஆரம்பநிலையில் குணமாக்கும். நீண்டகாலமாக நோயிலிருந்து மீண்டவர்களின் உடல், நன்கு தேற உதவும்.

வாந்தி, குமட்டல், உணவு ஒவ்வாமை விளைவுகள் ஆகியவற்றைத் தணிக்கும். புளித்த ஏப்பம், நெஞ்சுகரிச்சல், சாதாரண சளி மற்றும் இருமல், தலைபாரம் ஆகியவற்றை நீக்கும். ஆஸ்த்மா, நீரிழிவு போன்ற நோய்களைக் குணமாக்க, துணைமருந்தாக உதவும். உமிழ்நீரை நன்கு சுரப்பித்து, ஆற்றலை அதிகரிக்கும். சிலவகை மாதவிடாய்க் கோளாறுகளைக் குணமாக்கும். சாதாரண உடல்வலிகளைப் போக்கும். நினைவாற்றல் மேம்பட உதவும். இரத்தத்தைச் சுத்திகரிக்க வல்லது. கல்லீரலுக்கும், சிறுநீரகத்திற்கும் வலிவும், பொலிவும் ஊட்டும். கெட்ட கொலஸ்ட்ராலை மட்டும் நீக்கும். இரத்த அழுத்தத்தைச் சீரமைக்கும். உடலில் திடீர் திடீரென ஏற்படும், தட்ப வெப்ப ஏற்றத்தாழ்வைப் போக்கிச், சமநிலைப்படுத்தும்.

நந்தி ஃபுட்ஸ் நிறுவனத்தார் சுக்குமல்லி பொடியை ஹோம் மேடாக தயாரித்து விற்பனை செய்கிறார்கள். ரசாயனமோ, நிறமிகளோ சேர்க்கப்படாமல் தயார் செய்யப்படும் இந்த சுக்குமல்லி காபி / டீ-யானது, ரசாயன கலப்பில்லாத சுத்தமான தனியா, சுக்கு, மிளகு, ஏலக்காய், பெருஞ்சீரகம், கிராம்பு, சித்தரத்தை கொண்டு தயாரிக்கப்படுகிறது. 50 கிராம் ரூ.59. (கூரியர் அல்லது தபால் செலவு தனி) மழை, குளிர்காலத்துக்கு ஏற்ற, நந்தி ஃபுட்ஸ் சுக்குமல்லி டீ / காபி பொடி தேவைப்படுவோர் 94440 86655 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தெரியப்படுத்தவும்.
சுக்கு மல்லி காபி செய்வது எப்படி?
தேவையான அளவு தண்ணீரில் 1 டீஸ்பூன் நந்தி ஃபுட்ஸ் சுக்கு மல்லி தூளை சேர்த்து குறைந்த வெப்பத்தில் 3-4 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். அப்போதே, இனிப்பு சுவைக்காக பனங் கற்கண்டு / நாட்டு சர்க்கரை / கருப்பட்டி சேர்க்கவும். நன்கு கொதித்தபிறகு வடிக்கட்டி அருந்தவும்.
Subscribe to our channels on YouTube & Telegram &
Tamilnadu &
Pondicherry
