சிறார் ஆபாச படங்களை போனில் பார்த்துவிட்டு டெலிட் செய்வதும் குற்றம் : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

0
65
The Supreme Court also called upon Parliament to “seriously consider to bring about an amendment to the Pocso" to substitute the term “child pornography” with “child sexual exploitative and abuse material”.

சிறார்களின் ஆபாசப் படங்களை விநியோகிப்பது மட்டுமின்றி பார்த்துவிட்டு டெலிட் செய்வதும் தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. குழந்தைகளின் ஆபாசப் படங்களைத் தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல, என்ற சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், குழந்தைகளின் ஆபாசப் படங்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில், மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் தனது மொபைல் போனில் குழந்தைகளின் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அவர் மீது அம்பத்தூர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த இளைஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்தாண்டு பிறப்பித்திருந்த உத்தரவில், மனுதாரர் தனது மொபைல் போனில் ஆபாச படங்களைப் பார்த்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read : 4 முறை வெளிநாடு சென்று ஈர்த்த முதலீடு வெறும் ரூ.18,000 கோடி! முதலமைச்சரின் செயல்பாடு பூஜ்ஜியம் என ஈபிஎஸ் விமர்சனம்!

ஆபாச படங்களைப் பார்த்ததை மனுதாரரும் ஒப்புக் கொண்டுள்ளார். ஆபாச வீடியோக்கள் பார்க்கும் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டதாகவும், அதில் இருந்து மீள உளவியல் ரீதியிலான சிகிச்சைக்கு செல்ல விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். பொதுவாக மொபைல் போனில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றம் இல்லை என்பதால் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் சாட்ட முடியாது. கேரளா உயர் நீதிமன்றமும் ஆபாச படங்கள், வீடியோக்கள் பார்ப்பது தவறு இல்லை என தீர்ப்பளித்துள்ளது.

குறிப்பாக 12 முதல்17 வயதுக்குள்ளான பதின்ம வயதினர் ஆபாச படங்களை பார்க்கும் பழக்கத்துக்கு அதிகளவில் அடிமையாகி உள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இதனால், இவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை உளவியல் ரீதியான ஆலோசனைகள் மற்றும் வாழ்வியல் நெறிசார்ந்த கல்வி மூலமாக மீட்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து குழந்தைகள் உரிமைக்கான கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

Also Read : விளம்பரம் தேடுவதிலேயே அமைச்சர் அன்பில் மகேஸ் கவனம்! முதலமைச்சர் தலையிட ஐபெட்டோ அண்ணாமலை வலியுறுத்தல்!

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்தார். மேலும், அந்த கருத்தை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், சிறார்களின் ஆபாசப் படங்களைப் பார்ப்பது குறித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று உத்தரவிட்டது.

மேலும், குழந்தைகளின் ஆபாச படங்களை செல்போனில் வைத்திருந்தால் அது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாகும். உயர் நீதிமன்றங்கள் மற்றும் அரசியல் சட்டப் பிரிவுகளிலும், குழந்தைகளின் ஆபாச படங்கள் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அதற்கு மாற்றாக, Child sexual and Exploitative abuse material என்று பயன்படுத்த வேண்டும். இதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.

Also Read : ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை 2029 முதல் அமல்படுத்த திட்டம்! 17 மாநிலங்களில் 3 ஆண்டுகளுக்கும் குறைவான ஆட்சியே இருக்கும்!

சிறார்களின் ஆபாசப் படங்களை மற்றவர்களுக்கு அனுப்புவது மட்டுமின்றி, பதிவிறக்கம் செய்து பார்ப்பது, சேமித்து வைப்பது என அனைத்துமே போக்சோ கீழ் குற்றமாகவே கருதப்படும். சிறார்களின் ஆபாசப் படங்களை டவுன்லோட் செய்து பார்த்துவிட்டு டெலிட் செய்தாலும் அதுவும் குற்றமாகவே கருதப்படும். சிறார் ஆபாசப் படங்களைப் பார்ப்பது, பகிர்வது அல்லது காட்சிப்படுத்துவது என்று எந்தவொரு செயலும் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாகும். சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை வழங்குவதில் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது.

ஒரு நபர் சிறார் ஆபாசப் படங்களை வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டாலே அவர் தண்டிக்கப்படலாம். பணம் சம்பாதிக்கும் ஆசையில் சிலர் சிறார் படங்களை விநியோகம் செய்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் ஏற்கனவே அபராதம் விதித்துள்ளோம். இந்த விவகாரத்தில் தேவையான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர நாங்கள் பரிந்துரைக்கிறோம். மேலும் அனைத்து நீதிமன்றங்களையும் அதன் உத்தரவுகளில் குழந்தை ஆபாசப் படங்கள் என்று குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

Also Read : 70 வயதுக்கு மேற்பட்டோருக்கான இலவச சுகாதார காப்பீடு திட்டம்! விண்ணப்பிப்பது எப்படி?

இது குறித்த தகவல்களை உள்ளடக்கிய விரிவான பாலியல் கல்வித் திட்டங்களைச் செயல்படுத்துவது குற்றங்களைத் தடுக்க உதவும். பாலியல் கல்வி என்பதை மேற்கத்தியக் கருத்தாகப் பார்ப்பதாலேயே பாலியல் கல்வித் திட்டங்களைச் செயல்படுத்த பல்வேறு மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்த்து அல்லது விநியோகிப்பார்களுக்குப் புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். பிரச்சனைக்குரிய பாலியல் நடத்தையின் அறிகுறிகளைக் கண்டறிய கல்வியாளர்கள், சுகாதார வல்லுநர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.” இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry