அமெரிக்காவில் நடுக்கடலில் மீனவர் ஒருவரை ராட்சத திமிங்கலம் விழுங்கியுள்ளது. சுமார் 40 நொடிகள் கழித்து அவர் உயிருடன் மீண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த மீனவர் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில், Massachusetts மாகாணத்தில், கடல் சூழ் நகரமான Provincetown-ஐ சேர்ந்தவர் Packard. 56 வயதான இவர் ஆழ்கடலில் லாப்ஸ்ட்டர் எனும் ராட்சத இறால்களைப் பிடிப்பதையே தொழிலாக செய்து வருகிறார். நேற்று காலை, Cape Cod கடலில் இவர் லாப்ஸ்ட்டர் டைவிங் செய்துள்ளார். அப்போது எதோ ஒன்று பலமாக இடிப்பது போல உணர்ந்த சில நொடிகளில், அவருக்கு அனைத்தும் இருட்டாக மாறியுள்ளது.
தான் ராட்சத திமிங்கிலத்தின் வாயில் சிக்கிக்கொண்டோம் என்பதை Packard உறுதி செய்துகொண்டுள்ளார். அது தன்னை விழுங்குவதை உணர்ந்த அவர், தனது வாழக்கை முடிந்துவிட்டது என நினைத்துக்கொண்டு, மனைவி மற்றும் 2 மகன்களை நினைத்து கண்ணீர்விட்டுள்ளார். ஆனால் சில நொடிகளில் கடலின் மேற்பரப்புக்கு வந்துவிட்டதையும், தான் உயிருடன் இருப்பதை நம்ப முடியவில்லை எனவும் Packard கூறியுள்ளார். அவர் சுமார் 40 நொடிகளுக்கு திமிங்கலத்தின் வயிற்றுக்குள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
நீரின் மேற்பரப்பிற்கு வந்த அவரை, உடன் சென்ற மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். அதிர்ஷ்டவசமாக Packard-க்கு உடலில் காயங்கள் ஏற்படவில்லை. ஆனால் அவரது கால் எலும்பு மட்டும் இடம்பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அவரை விழுங்கியது Humpback சுறாமீன் என கூறப்படுகிறது. இந்த வகை திமிங்கிலங்கள் 50 அடி நீளம் வரை வளரக்கூடியதாகவும், சுமார் 36 டன் எடையுள்ளதாகவும் இருக்கும்.
அந்த ராட்சத திமிங்கிலம் மீன் தன் வாயை பிளந்து மீன்களை மொத்தமாக பிடிக்கும் முயற்சியில் இருந்திருக்கும் போது, தெரியாமல் Packard-யையும் சேர்த்து விழுங்கியிருக்கும். அதனால் தான் அவரை சில நொடிகளில் கக்கி வெளியேற்றியுள்ளது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry