உலகின் உயரமான காளை! கின்னஸில் இடம்பிடித்து அசத்தல்! ஒருநாளைக்கு இத்தனை கிலோவா சாப்பிடும்?

0
58
At mere 10 days old, the American steer Romeo was saved from the slaughter by animal sanctuary owners Misty and Robert Moore. Photograph: Misty Moore / Guinness World Records.

ஹோல்ஸ்டீன் ஸ்டீர் (Holstein Steer) இனத்தைச் சேர்ந்த ரோமியோ என பெயரிடப்பட்ட காளை, உலகின் மிக உயரமான காளையாக கின்னஸ் உலக சாதனை (Guinness World Records ) புரிந்துள்ளது.

`ஸ்டீர்’ என்பது அமெரிக்கா போன்ற நாடுகளில் கருத்தடை செய்யப்பட்டு, மாட்டிறைச்சிக்காக வளர்க்கப்படும் காளையைக் குறிப்பதாகும். பிறந்து 10 நாள்களேயான நிலையில், ஒரு பால் பண்ணையில் ரோமியாவை இறைச்சிக்காக வெட்ட முயன்றுள்ளனர். அங்கிருந்து மீட்கப்பட்ட நிலையில், ஓரிகானில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் அந்தக் கன்று வளர்க்கப்பட்டது. இதன் பாசமிகு குணத்திற்காக ரோமியோ என்று பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது ஆறு வயதான இந்தக் காளை ஆப்பிள் மற்றும் வாழைப்பழங்களை விரும்பி சாப்பிடுகிறது. ஒவ்வொரு நாளும் 100 பவுண்டுகள் (45 கிலோ) வைக்கோலையும் கூடுதலாக தானியங்களையும் உண்கிறது. அதன் உயரத்திற்கு ஏற்ப தங்குமிடங்களும் உயரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Also Read : Amazing Benefits of Red Banana! விந்தணு அதிகரிப்பு முதல் BP கன்ட்ரோல் வரை…! காயகல்ப மருந்தாக பயன்படும் செவ்வாழை!

கின்னஸ் உலக சாதனையின் எக்ஸ் தள பக்கத்தில், ரோமியோவின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், “1.94 மீட்டர் (6 அடி 4.5 அங்குலம்) உயரத்தில் உள்ள உலகின் மிக உயரமான காளையான ரோமியோவை சந்தியுங்கள். ரோமியோ வெல்கம் ஹோம் அனிமல் சரணாலயத்தில் தனது வளர்ப்பாளரான மிஸ்டி மூருடன் வசிக்கும் 6 வயது ஹோல்ஸ்டீன் ஸ்டீயராகும்” என்று குறிப்பிட்டுள்ளது.

“ரோமியோ போன்ற ஆண் கன்றுகள் பெரும்பாலும் வெறும் துணை தயாரிப்புகளாக கருதப்படுகின்றன, இறுதியில் இறைச்சிக்காக படுகொலை செய்யப்படுகின்றன. அவற்றின் தலைவிதி லாப வரம்புகளால் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது” என்று வெல்கம் ஹோம் விலங்கு சரணாலயத்தின் நிர்வாகி மிஸ்டி கூறியுள்ளார். “ரோமியோ தனது பெயரை அறியும் என்றும், உற்சாகத்துடன் தங்களுடன் பழகும், விளையாடும் என்று கூறும் அதன் உரிமையாளர் மூர், ரோமியோ பாசமும் விளையாட்டுத்தனமும் நிரம்பி வழியும் ஒரு மென்மையான ராட்சதன்.” என்கிறார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry