முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா! திருவுருவச்சிலைக்கு அரசு சார்பில் மரியாதை!

0
277

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும், அவரது உருவச் சிலை சென்னையில் அமைக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் கருணாநிதியின் உருவச் சிலை அமைக்கப்பட்டது. அதை குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்ய நாயுடு மே 28-ம் தேதி திறந்து வைத்தார்.

முதல்வரின் அறிவிப்பின்படி, இந்த ஆண்டு முதல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் , கருணாநிதியின் திருவுருவ படத்துக்கு இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில்அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதியின் உருவச்சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழகம் முழுவதும் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry