கர்வ் கூபே காரை வெளியிட்டது டாடா! புக்கிங் செய்ய எல்லோரும் வெயிட்டிங்! இந்தியாவின் முதல் எஸ்யூவி கூபேவில் அப்படி என்ன இருக்கிறது?

0
142
The Tata Curvv will mark Tata’s entry into the popular compact SUV segment, when it launches around the upcoming festive season. It is a 5-seater SUV-coupe, featuring a sloping roofline, which will help its design stand out against its contemporaries like the Hyundai Creta, Kia Seltos and Maruti Grand Vitara | Image : Tata Motors.

டாடா நிறுவனம் தனது முதல் எஸ்யூவி கூப்பே மாடலான கர்வ் காரை சந்தைப்படுத்துகிறது. இந்த கார் எலெக்ட்ரிக், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய 3 வெர்ஷன்களிலும் வெளியிடப்படவுள்ளது. Tata Motors ஆனது Curvv.ev மற்றும் Curvv ICE என இந்தியாவின் முதல் SUV Coupe என அழைக்கப்படும் இரண்டு வகைகளை வெளியிடுகிறது. EV பதிப்பு அடுத்த மாதம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியிடப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கார் டாடா நிறுவனத்தின் நெக்ஸான் காரைவிட மேலாகவும், ஹாரியர் காருக்கு கீழாகவும் பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. முற்றிலுமாக புதிய வடிவமைப்பில் அறிமுகமாக உள்ள இந்த காரில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது? மார்க்கெட்டில் உள்ள மற்ற காக்கும் இந்த காருக்கும் என்னென்ன வித்தியாசங்கள் இருக்கிறது? என்பதை தெரிந்துகொள்வோம்.

Also Read : நீங்கள் அதிக நேரம் செல்போன், லேப்டாப் உபயோகிப்பவரா? இந்த அறிகுறிகள் இருந்தால் ‘டெக் நெக் சிண்ட்ரோம்’ உறுதி! கடும் பாதிப்பு ஏற்படலாம், எச்சரிக்கை..!

டாடா நிறுவனம் முதன்முறையாக எஸ்யூவி கூப்பே பாடி வடிவமைப்பு கொண்ட காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப் போவதாக முடிவு செய்தது. நீண்ட ஆண்டுகளாக இந்த காரின் வருகைக்காக டாடா ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது இந்த கர்வ் காரை டாடா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தக் காருக்கான புக்கிங் இந்தியா முழுவதும் நடந்து வருகிறது. ஆன்லைன் புக்கிங் இதுவரை துவங்கப்படவில்லை.

டாடா நிறுவனம் இந்த காரை முதலில் எலெக்ட்ரிக் காராக மட்டுமே வடிவமைத்தது. பின்னர் இதில் கம்பஷன் இன்ஜினையும் பொருத்தி 3 வெர்ஷன்களிலும் வெளியிட முடிவு செய்தது. இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக இந்த கார் வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பை பொறுத்தவரை அந்நிறுவனத்தின் நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார்களின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு கூப்பே ஸ்டைலில் இந்த காரை அந்நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதன் முன்பக்கம் ஸ்பிலிட் ஹெட்லைட் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் எல்இடி டிஆர்எல் வழங்கப்பட்டுள்ளன.

India’s first SUV Coupé brings together premium design, enhanced practicality in the SUV category | Image – Tata Motors

காரின் முன்பக்கம் எலெக்ட்ரிக் வெர்ஷனில் பிளாங்க்கான கிரில் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. கம்பேஷன் இன்ஜின் வெர்ஷனில் ரெகுலரான மெஷ் பேட்டர்ன் கிரில் வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டை பொருத்தவரை மிக முக்கியமாக கூபே வடிவ கார் என்பதால் ஸ்லோப்பான ரூஃப் லைன் வழங்கப்பட்டுள்ளது. அலாய் வீல்களும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த காரில் பிளாஷ் டைப் டோர் ஹேண்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. டாடா காரில் இப்படியான டோர் ஹேண்டில் வழங்கப்படுவது இதுதான் முதல் முறை. பின்பக்கம் சற்று உயரமான பம்பர் மற்றும் எல்இடி பார் டெயில் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

உட்புறம் டேஷ்போர்டு டாடா நெக்ஸான் காரை போலவே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக ஃப்ரீ ஃப்ளோட்டிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும், அதற்கு கீழே சென்ட்ரல் ஏசி வெண்ட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக தனித்துவமான ஸ்டேரிங் வீல், அதன் நடுவே டாடா லோகோ இலுமினேட் செய்யும் வகையில் வழங்கப்படலாம். இதே மாதிரியான ஸ்டேரிங் வீல் தான் ஹாரியர், சஃபாரி ஆகிய கார்களில் பொருத்தப்பட்டுள்ளது.

Also Read : ஐயப்ப பக்தர்களின் காவலர் கருப்பண்ணசாமி பற்றித் தெரியுமா? கருப்பசாமியின் அவதாரம், அவரது குடும்பம் பற்றிய சுவாரஸ்ய தகவல்!

டாடா நெக்ஸான் காரில் இருப்பது போல ஆட்டோமேட்டிக் கியர் ஸ்விஃப்டர்கள் வழங்கப்படலாம். மேலும் இந்த காருக்கு உட்புறம் 12.3 இன்ச் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகியவற்றை சப்போர்ட் செய்யும் வகையில் பெருத்தப்படும். இதுபோக பானரோமிக் சன்ரூஃப், வெண்டிலேட்டட் முன்பக்க சீட்டுகள், டூயல் ஸோன் டச் கண்ட்ரோல் ஆட்டோமேட்டிக் ஏசி, வயர்லெஸ் போன் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.

பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, அடாஸ் தொழில்நுட்பம், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், முன்பக்க கொலிஷன் வார்னிங், உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெறும். இதனால் கூப்பே கார் டாடாவின் மற்ற கார்களை போல பாதுகாப்பான காராகவே இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

1.2லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட வாய்ப்புள்ளது. 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் இதில் பொருத்தப்படலாம். பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை பொறுத்தவரை 125 பிஎஸ் பவரும், 225 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகவும் வடிவமைக்கப்படும். இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Curvv Will be available in multiple powertrains – petrol, diesel and electric, to serve every customer preference – Image – Tata Motors

டீசல் இன்ஜின் ஆப்ஷனை பொறுத்தவரை 115 பிஎஸ் பவரும், 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனுடன் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இது போக டாடா கர்வ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் காரும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காரும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

The panoramic glass roof allows natural light to flood into the cabin, giving the occupants a sense of space and freedom. The boot space has also been reconfigured to meet customer needs, offering increased and accessible storage space | Image – Tata Motors.

எலெக்ட்ரிக் வெர்ஷன் காரை பொருத்தவரை வழக்கமாக டாடா நிறுவனம் வெளியிடும் கார்களில் உள்ளது போல இரண்டு விதமான பேட்டரி பேக்அப் (ஸ்டாண்டர்டு ரேஞ்ச், லாங் ரேஞ்ச்) ஆப்ஷன்கள் இடம் பெறும். வரும் ஆக்ஸ்ட் 7ம் தேதி இந்த கார் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிறது. முதலில் எலெக்ட்ரிக் கார் தான் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் வெர்ஷன் வாகனங்கள் அறிமுகமாகலாம். இந்த காரின் விலை 15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry