டாடாவின் ‘நியூ’ சூப்பர் ஆப் அறிமுகம்! Amazon, Flipkartக்கு போட்டியாக வழங்கப்படும் ஆஃபர்கள்!

0
187

ஆன்லைன் விற்பனையில் இல்லாத நிறுவனங்களை ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் துறையில் வர்த்தகம் செய்வதற்கான கட்டமைப்பை டாடா குழுமம் உருவாக்கியுள்ளது. தற்போது டிஜிட்டல் வர்த்தகங்கள் அனைத்தையும் ஓரே தளத்தில் கொண்டு வந்து வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் முயற்சி தான் சூப்பர் ஆப்.

அம்பானியின் ஜியோமார்ட், அமேசான், பிளிப்கார்ட்டுக்கு போட்டியாக டாடா நிறுவனம் கடந்த பல மாதங்களாக Tata Neu செயலியின் வடிவமைப்பில் அதிகம் கவனம் செலுத்தியது. இந்த ஒற்றை செயலியில், பயனர்கள், மளிகை பொருள்கள், மின்னணு சாதனங்கள், உணவு விநியோகம், ஹோட்டல், விமான முன்பதிவு ஆகியவற்றை செய்ய முடியும். மேலும், பணப் பரிமாற்றம் தொடங்கி டிக்கெட்டிங் வரை அனைத்து விதமான ஆன்லைன் செயல்பாடுகளையும் செய்ய முடியும். சுருக்கமாகச் சொன்னால் மளிகை சாமான்கள் முதல் கேஜேட்டுகள் வரை அனைத்தையும் TATA neu மூலம் பெறலாம்.


இந்த செயலியின் கூடுதல் சிறப்பு என்னவென்றால், ஐபிஎல் 2022 போட்டிக்கான டிக்கெட்டுகளையும் டாடா நிறுவனம் பயனர்களுக்கு இலவசமாக வழங்குகிறது.

இந்த செயலியில் நிறுவனம் டாடா பே யூபிஐ சேவையை வழங்குகிறது. இதன் மூலம் நீங்கள் மொபைல் ரீசார்ஜ், பிராட்பேண்ட், மின்சாரம், எரிவாயு, லேண்ட்லைன் கட்டணங்கள், டிடிஎச் சந்தா ஆகியவற்றைச் செலுத்தலாம். Tata Pay நேரடியாக PhonePe, Google Pay, Paytm போன்ற முன்னணி சூப்பர் செயலிகளுடன் போட்டியிடுகிறது. டாடா பே UPI சேவையை பயன்படுத்தி உங்களது நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது உங்கள் மொபைல் போனில் உள்ள எந்த ஒரு நம்பருக்கும், அவரது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிக் கொள்ளலாம்.

Tata Neu செயலி பயனர்களுக்கு முதலீடு மற்றும் நிதி சேவைகளையும் வழங்குகிறது. உடனடி தனிநபர் கடன், அட்வான்ஸ் பேமென்ட், டிஜிட்டல் தங்கம், காப்பீடு உள்ளிட்ட பல அம்சங்களை இந்த ஆப் கொண்டுள்ளது. கூடுதலாக, இது வீட்டு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான ஆன்லைன் கார்டு பரிவர்த்தனைகள் போன்ற வசதிகளையும் வழங்குகிறது.

டாடாவின் புதிய நியூ சூப்பர் ஆப் மூலம் உணவு விநியோக சேவைகளும் பயனர்களுக்குக் கிடைக்கிறது. தாஜ் போன்ற ஸ்டார் ஹோட்டல் முதற்கொண்டு கையேந்தி பவன் வரை அனைத்தை ஆர்டர் செய்து நீங்கள் ருசிக்கலாம். தற்போது குறிப்பிட்ட உணவகங்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளது. இன்னும் சில நாள்களில் மேலும் பல உணவகங்கள் இணைக்கப்பட உள்ளது.

Tata Neu செயலியில் Neu காயின்ஸ் இடம்பெற்றுள்ளன. இந்த டிஜிட்டல் நாணயங்கள் மூலம், பயனர்கள், ஆப்ஸிலும், ஆஃப்லைனிலும் டாடா குழும கடைகளில் ஷாப்பிங் செய்யலாம். ஸ்டார்பக்ஸ் காபி பில்லையும் இந்த செயலியின் வாயிலாக செலுத்தலாம்.

மேலும், ஏர் ஏசியா விமானங்களை முன்பதிவு செய்யவும், பிக் பாஸ்கெட், குரோமா, டாடா கிளிக், வெஸ்ட்சைட், டாடா 1mg ஆகியவற்றில் ஆர்டர் செய்யவும் இந்த நாணயங்களைப் பயன்படுத்தலாம். அதாவது உங்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு நியூ காயின்ஸும் ஒரு ரூபாய்க்கு சமம் என்பதை மறந்துவிட வேண்டாம்.

Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry